Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

சொர்க்கத்திற்கு குறுக்குவழி ? ஓடுங்கள் சிவப்பு விளக்குப் பகுதிக்கு.

IN INDIAN TEMPLE
திதியின் போது பார்ப்பனப் புரோகிதர்கள் பஞ்ச கவ்யம் என்ற ஒன்றைக் கொடுப்பார்கள். மாட்டு மூத்திரம், மாட்டுச் சாணம், பால், தயிர், வெண்ணெய் என்கிற பசு மாட்டின் மூலம் கிடைக கும் அய்ந்து பொருள்களையும் கலக்கிக் கொடுப்பதுதான் பஞ்ச கவ்யம்....

 பார்ப்பனப் புரோகிதன் கொடுக்கும் இந்த கோமியத்தை நம் வீட்டுப் பெரியவர்கள் தட்சணை கொடுத்து வாங்கி முடக்கு முடக்கு என்று பக்திப் பரவசத்தால் குடிப்பார்கள். அது கீழே சிந்தி விடக் கூடாதாம். அப்படி சிந்துகின்ற அந்த மாட்டு மூத்திரம் கலந்த அந்தப் பஞ்ச கவ்யத்தைக் கைகளில் பிடித்து பயபக்தியுடன் தலையிலும் தடவிக் கொள்வார்கள். பக்தியின் பெயரால் இந்த ஆபாசம் - அநாகரிகக் கூத்து அரங்கேறுவதுண்டு.

நமது நாட்டில் உள்ள எந்தவாரப் பத்திரிகையின் முகப்பைப் பார்த்தாலும் ஆரியப் புராணப் புளுகுகளைப்பற்றி வியாக்கியானம் பண்ணுவதும், அதற்கு விசேஷ அர்த்தமும், தத்துவார்த்தமும் சொல்லுவதும், எழுதி வைத்தவர்களைப் புகழ்வதுமாகவே இருக்கின்றன. எந்த தினசரிப் பத்திரிகையைப் பார்த்தாலும் பார்ப்பன மதக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யத்தக்க வண்ணம் ஆரியக் கதைகளையே விளக்கி வருகின்றது.

இது தவிர பள்ளிக்கூட டெக்ஸ்ட் பாடப்புதகங்கள் என்று அநேக பார்ப்பனர்களும் சுயமரியாதையும் அறிவும் இல்லாத சில பார்ப்பனரல்லாதார்களும், ராமாயணம், பாரதம், பாகவதம், கந்தப்புராணம் பெரிய புராணம், அருணாசலப்புராணம், திருவிளையாடல் புராணம், முதலிய குப்பை கூளங்களின் பேரால் சிறுசிறு கதைப்புத்தகமும் எழுதி சிறு குழந்தைகளுக்கு பார்ப்பன விஷத்தை ஊட்டுவதும் சகிக்கக் கூடியதாயில்லை.

சொர்க்கத்திறகு போக இதோ சுலபமான வழி.  

பார்ப்பனர்களே, ரிக்வேதத்தில் குறிப்பிட்டுள்ளபடி நடந்தால் போதும் சுலபமாக சொர்க்கத்திற்கு போய் விடலாம். 

ரிக்வேதம் தாத்தாக்கிரி மெய் சகத்தில் குறிப்பிட்டுள்ளபடி செய்யுங்கள். நீங்கள் உடனே மோட்சத்திற்கு போய் விடலாம். இதோ அந்த சுலோகம்.

வேஸ்யாதர்சனம் புண்யம்
ஸ்பர்சனம் பாவ நாசனம்
சும்பனம் சர்வ தீர்த்தானம்
மைதுனம் மோட்ச சாதனம்

வேசிகளை (விபசாரிகளை)ப் பார்ப்பது புண்ணியம். அவர்களைத் தொட்டால் நீங்கள் செய்த பாவமெல்லம் போய்விடும். நாசமாகிவிடும். கார்ப்பரேசன் குழாய் தண்ணீரை ஒரு செம்பில் வைத்துக் கொண்டு புரியாத மந்திரங்களை, கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி என்று சொல்லிக்கொண்டு மா இலையால் வீடு முழுவதும் தெளிக்கிறாரே புரோகிதர் அந்த சகல தீர்த்தங்களும், அந்த விபச்சாரிகளை முத்தமிடும் பொழுது வாயில் ஊறும் எச்சிலுக்கு சமமாகும். அதற்கும் மேல் விபச்சாரிகளை புணர்வது மோட்சத்திற்கு வழியாகும்.

வேதம் படித்து, பூஜை புனஸ்காரங்களை செய்யும் பார்ப்பனர்களே, அவை எல்லாம் இனிமேல் தேவையில்லை. ரிக் வேதத்தில் சொல்லியபடி உடனே சிவப்பு விளக்கு பகுதிக்குப் போங்கள் சொர்க்கத்தை அடையலாம். காலம் தாழ்த்தினால் இடம் கிடைக்காது. எல்லாம் புக் ஆகிவிடும். ஓடுங்கள் சிவப்பு விளக்குப் பகுதிக்கு.

சொர்க்கத்திற்கு குறுக்கு வழி 2

திருவிளையாடல் புராணம் 26ஆவது திருவிளையாடல் மாபாதகம், தீர்த்தபடலம் அதன் சுருக்கம்:

தாயைப்புணர்ந்து தகப்பனை கொன்ற பார்ப்பானுக்குச் சொர்க்கம்.

அவந்தி என்ற ஊரில் ஒரு பார்ப்பான் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி ஒப்பில்லா அழகுடையவள். அவளது மகன் வளர்ந்து வாலிபன் ஆனதும், அவனது தாயின் மேலேயே ஆசை கொண்டான். அவளும், நாணம், வெட்கம் எல்லா வற்றையும் விட்டு, தன்னுடைய மகனிடம் உடலுறவு கொண்டாள். இதற்கு இடையூறாக இருந்த அவளுடைய கணவனை அவள் மகன் ஒரு இரவில் கொன்று மயானத்தில் இறுதிச் சடங்கை செய்தான். ஊரில் உள்ளவர்கள் தகப்பனைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானைப் பற்றி இழிவாகப் பேசவும், தாயும், மகனும் சொந்த ஊரை விட்டு ஓடி ஊர், ஊராக சுற்றிக் கொண்டு இருந்தனர்.

அப்பொழுது சோமசுந்தர கடவுள் வேடன் உருவத்தில் வந்து இவனிடம் சிவராத்திரி நாளில் சிவனடியார்களுக்கு பணி செய்து சூரியன் உதிக்கும் முன் அருகம்புல்லை பசுமாட்டிற்கு கொடுத்து மூன்று காலமும் நீராடி 108 முறை கோவிலை வலம் வரும் படி சொன்னார். அந்தப் பார்ப்பானும் அப்படியே செய்து அவன் செய்த பாவமெல்லாம் தீர்ந்து சொர்க்கத்திற்கு போனானாம்.

http://www.viduthalai.in/page5/39706-shortcut-to-heaven.html

********அன்பர்களே! இங்குள்ள பதிவுகளை அதிகமதிகமாக ஃபேஸ்புக்கில், G+ ல் ஷேர் செய்யுங்கள்.
நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். மீண்டும் அடிக்கடி வாருங்கள். தொடரும்...
*********
இத்தளத்தின் அனைத்து பதிவுகளும்
((( இங்கே. )))
"க்ளிக்" செய்து அனைத்தையும் படித்து சிந்தியுங்கள்.
*********

No comments:

Post a Comment