Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

சந்திரன் உருவான மகா அசிங்கமானப் புளுகு படியுங்களேன்.

இந்துவாக இருந்தால் இதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

அத்திரிமா முனிவர் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்த வர அவர் உடல் சோமரசமயம் ஆயிற்று. அவர் கண்களிலிருந்து சோமரசம் சிந்த ஆரம்பித்தது.
KOIL SILAI
அதைக் கண்ட பிரம்ம தேவர் தேவதா ஸ்திரீகளை அழைத்து அந்த சோம ரசத்தை அருந்தி கருவுறுமாறு கூறிட, அவர்களும் அவ்வாறே செய்து கருவுற்றனர்.

ஆனால், அவன் கனம் தாங்காமல் அவற்றை அவர்கள் கீழே நழுவவிட அவை கீழே விழுந்து உடனே ஒன்றாக இணைய சந்திரன் (சோமன்) உருவானான்.

பிரம்மா உடனே சந்திரனைக் கீழே விடாமல் தேரில் வைத்துக் கொண்டு செல்ல பிரம்மாவின் மானச புத்திரர்கள் வேத மந்திரங்களால் துதி செய்தனர்.

பிரம்மாவுடன், சந்திரன் அத்தேரிலிருந்து பூமண்டலத்தை இருபத்தோரு முறை சுற்றிவர ஓக்ஷதிகள், வனஸ்பதிகள் (தாவரங்கள்) தோன்றி வளர்ந்தன.

சந்திரன் தவம் செய்து தன் சக்தியை வளர்த்துக் கொண்டான். பிரம்மா சந்திரனை ஓஷத சாம்ராஜ்ஜியத்திற்குப் பட்டாபிஷேகம் செய்வித்தார்.
தக்ஷன் நக்ஷத்திரங்களான இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கு விவாகம் செய்து வைத்தான். சந்திரன் அரசாட்சி பெற்ற மமதையுடன் ஆங்கீரசர் ஆகிய முனிவர்களை எதிர்த்து பிரகஸ்பதியின் மனைவியாகிய தாராவை அபகரித்துச் சென்றான்.

ரிஷிகள், தேவர்கள் அவன் செய்வது அக்கிரமம் என்றும், தாரையை விட்டு விடுமாறும் அறிவுரை கூறினர். ஆனால், அவன் கேட்கவில்லை. அவனுக்கு உதவியாகச் சுக்கிராச்சாரியார் வர தேவாசுரப் போர் நடந்தது.

இந்நிலையில் தேவர்கள் பிரம்மாவை நாடிப் போரை நிறுத்த வேண்டினர். பிரம்மா வும் தலையிட்டு போரை நிறுத்தி தாரையைத் தானே பெற்று பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார்.

ஆனால், கருவுற்றிருந்த அவளை ஏற்க மறுத்தார் பிரகஸ்பதி. அக் கருவை விட்டு விட்டு வருமாறு கூறினார். அவள் அக்கருவை ஒரு மரத்தடியில் விட்டுவிட்டாள். அக்கரு உடனே ஒரு சிறுவனாக மாறிட அதன் ஒளி, அழகு கண்டு தேவர்கள் வியப்புற்றனர்.

பின்னர் அக்குழந்தை சந்திரனுடையதே என்று தாரை கூறினாள். அக்குழந்தைக்குச் சந்திரன், புதனெனப் பெயரிட்டான்.

``சின்னஞ்சிறியதாக இருப்பதை பூதக் கண்ணாடி நன்றாகப் பெரிசு பண்ணிக் காட்டுகிறதல்லவா?

இம் மாதிரி வேதத்தில் சுருக்கமாக, சின்னச் சின்னதாகப் போட்டிருக்கிற தர்மவிதிகளை கதை கள் மூலம் பெரிசு பண்ணிக் காட்டுவதுதான் புராணம் என்று காலஞ்சென்ற காஞ்சி புரம் சங்கர மடத் தலைவர் சந்திரகேரேந்திர சுவாமிகள் கூறியுள்ளார். (கும்பகோணம் மடத் தலைவர் விழுப்புரம் சாமிநாதன் என்றும் கூறலாம்)

ஸ்தயம்வத (உண்மையே பேசு) என்று வேதம் சொல்கிறது. அதைப் புராணங்களே கடைப்பிடிக்கவில்லை என்பதை இந்தத் தொடர் ஓரளவு எடுத்துக்காட்டியுள்ளது.

இந்தப் புராணங்களை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வெளியிட்டுப் புண்ணியம் சம்பாதித்திருக்கிறார் கீழ்க் கொவளவேடு கிருஷ்ணமாச்சாரியார் என்பவர்.

அதிகமான விமர்சனத்திற்கு ஆளாகக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வோடு சுருக்கியும், அடக்கியும், நீக்கியும் எழுதி இருக்கிறார்.

பத்தும் எட்டும் பதினெட்டு என்பது நம் மரபு. ஆரியப் பார்ப்பனர் மரபு மாற்றிப் போடுவது! அதாவது எட்டுப் பத்து என்பது. எட்டுப் பத்து எண்பது அல்லவா?

ஆனால் சமக்கிருதம் பதினெட்டு என்கிறது. அதன்படி `அஷ்டாதச புராணமெனும் பதினெண் புராணங்கள் எனும் தலைப்பில் அவர் எழுதி நர்மதா பதிப்பகம் வெளியிட்ட நூலின் அடிப் படையில்தான் இத்தொடர் கட்டுரை எழுதப்பட்டது.

புராணத்தில் மாறுபாடுகள், வேறுபாடுகள், முரண்பாடுகள் எவையேனும் தலையெடுத்தால் நான் பொறுப்பல்ல. --- சு. அறிவுக்கரசு (நிறைவு)
SOURCE: viduthalai.com 09/02/2008

*******
க்ளிக் செய்து படியுங்கள்.


*****


அன்பர்களே! இங்குள்ள பதிவுகளை அதிகமதிகமாக ஃபேஸ்புக்கில்,
 G+ ல் ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

மீண்டும் அடிக்கடி வாருங்கள். தொடரும்....

********
பசுவின் பிள்ளைகளே?

ஆர்.எஸ்.எஸ், இந்துமுண்ணணி, பீ.ஜே.பீ காரர்கள் யாருக்கேனும் இந்து மதத்தை அனைவரும் அறிய ரிக், அதர்வன, யஜீர் வேதங்களை வால்மீகி ராமாயணம், பகவத் கீதை,கடவுள்களின் கதைகள் ஆகியவற்றை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து google play store ல் பதிவேற்ற திராணி உள்ளதா?
**************

படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.


பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் தூக்கிச் செல்வதற்குப் பறையர்களையும், சக்கிலியர்களையும் அழைப்பது ஏன்?

பூதேவர்களான பார்ப்பனரும், உயர் சாதியினரும், கோமாதா பஜனை பாடும் சங்கராச்சாரியும், இராம.கோபாலனும் H.ராஜாவும் – செத்த கோமாதாவைத் தூக்கி அடக்கம் செய்து தமது ‘இந்து’ உணர்வை நிரூபிக்கட்டும்.1 comment: