Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

உங்கள் மனைவி திருமணத்துக்கு முன்பு விபச்சாரி ???

மணமுடிக்கப் போகின்றவளை ஏற்கனவே பலருக்கு மனைவியாக இருந்தவள்
என உங்கள் வாயாலே கூறி ஒத்துக்கொண்டு தான் நீங்கள் இந்து திருமண முறைப்படி திருமணம் முடித்துக்கொள்கிறீர்கள்.

இந்து மதம் பெண்களை மிருகங்களை விடக் கேவலமாக கருதுவதை சான்றுகளோடு அதற்கான காரணத்தை பார்ப்போம்..அதற்கு முதல் ஆபாச சொற்கள் கலந்திருப்பதால் விருப்பமற்றவர்கள் மேலே படிக்கவேண்டாம். தமிழர்களைப் போன்று ஒரு இளிச்சவாயர்களை நான் எங்கும் காணவில்லை. தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?
STATUES IN INDIAN TEMPLE

படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்.
திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பற்றி முதலில் ஒரு முறை பார்ப்போம். தமிழர்களைப் போன்று ஒரு இளிச்சவாயர்களை நான் எங்கும் காணவில்லை. தனக்குத் தெரியாத ஒரு மொழியில் எந்த ஒரு விடயத்தையும் யாரும் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்வது என்றாலும், சொல்லப்படுவதன் அர்த்தத்தை புரிந்து கொண்டுதான் செய்வார்கள். ஆனால் நாமோ பிறப்பில் இருந்து இறப்பு வரை மதத்தின் பெயரில் எமக்கு தெரியாத ஒரு மொழியிலேயே அனைத்து சடங்குகளையும் செய்து வருகிறோம்.

உண்மையில் இந்தச் சடங்குகளும், அதில் சொல்லப்படும் மந்திரங்களும் எம்மை இழிவுபடுத்துவதை நாம் உணர்ந்து கொள்வதும் இல்லை. உணர்ந்து கொள்ள விரும்புவதும் இல்லை.

திருமணத்தின் போது சொல்லப்படும் சில மந்திரங்களை பார்ப்போம்.

மந்திரம்: ஸோம ப்ரதமோ விவித கந்தர்வ விவிவத உத்தர!
த்ருதியோ அக்னிஷ்டே பதி துரியஸ்தே மநுஷ்ஐயா!!
ஸோமோ ததத் கந்தர்வாய கந்தர்வோ ததத் அக்னயே!
ரயிம்ச புக்ராம் சாசாத் அக்னிர் மஹ்யம் அதோ இமாம்

பொருள்: அதாவது மணப்பெண்ணை சோமன் முதலில் மனைவியாக அடைந்தான். பிறகு கந்தர்வன் அடைந்தான். இவளுடைய மூன்றாவது கணவன் அக்னி, நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன். சோமன் உன்னை (மணப்பெண்ணை) கந்தர்வனுக்குக் கொடுத்தான். கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னிதேவன் இவளுக்குச் செல்வத்தையும் குழந்தையையும் கொடுத்த பிறகு எனக்குத் தந்தான்.... என்பதே புரோகிதர் கூற அதை திருப்பி மணமகன் கூறும் மந்திரத்தின் பொருள்.

இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தம் என்ன? இந்து மதப்படி திருமணம் செய்து கொள்கின்ற ஒருவரின் மனைவி பலரால் அனுபவிக்கப்பட்ட ஒரு பரத்தை (விபச்சாரி) என்றும், இந்த பெண் (மணப்பெண்) வேறொருவனிடம் குழந்தை பெற்றுக் கொண்டே அவனுக்கு மனைவியாகிறாள் என்றும் இந்து மதம் கூறுகின்றது. ஆதாரம்: காஞ்சி சங்கராச்சாரியார் எழுதிய தெய்வத்தின் குரல் - பாகம் 2 - பக்கம் 874

எனவே இந்துமதப்படி திருமணம் செய்துக் கொண்டால் உன் மனைவி ஒரு விபச்சாரி என்று பொருள். நீ முதலில் சொமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். அத்துடன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு….) வேறு இருக்கிறது.

இதை பல பார்ப்பனர்களே இன்று ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் மக்களை ஏமாற்றி தலையில் மிளகாய் அரைப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ள சிலர் வேறு அர்த்தம் சொல்வார்கள்.

பார்ப்பனர்கள் வேறு ஒரு அர்த்தம் சொல்லவது சோமன், கந்தர்வன், அக்னி போன்றவர்கள் அவளுக்கு அதிபதியாக இருந்தார்கள், காத்து வைத்திருந்தார்கள், தந்தை போன்று இருந்தார்கள் என்று வேறு விளக்கம் சொல்வார்கள்.

வித்தைக்கார பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் சொல்வார்கள். அதன் உள்ளே சொல்லப்பட்டிருக்கிற தத்துவத்தை பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள்.

சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் சோமன், கந்தர்வன், அக்னி ஆகியோர் அந்தப் பெண்ணிற்கு தந்தையாக இருந்தார்கள் என்று சொல்வார்கள். அதாவது மந்திரத்தில் உள்ள “பதி” என்ற சொல் கணவன் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுவது இல்லை. பாதுகாவலன் என்ற அர்தத்தில்தான் சொல்லப்படுகிறது.

“முதலில் சந்திரன் அவளை பாதுகாத்தான், பின்பு கந்தர்வன் பாதுகாத்தான், பின்பு அக்னி பாதுகாத்தான்” என்று ஒரு விளக்கத்தை இவர்கள் சொல்வார்கள். பெண்ணின் உடலில் ஏற்படும் வளர்ச்சிக்கு அமைய இந்த மந்திரங்கள் அமைக்கப்பட்டது என்று “அறிவியல்” விளக்கம் வேறு தருவார்கள்.

ஆனால் வேதங்களிலும் புராணங்களிலும் ஒரு பெண்ணிற்கு “பதி” என்பது அவள் கணவன் என்றுதான் சொல்லப்படுகிறது. அத்துடன் அதேவேதங்களிலும் புராணங்களிலும் “பொம்பிளைப் பொறுக்கிகளாக” சொல்லப்படுகின்ற சோமன், கந்தர்வன், அக்னி போன்றவர்களின் “பாதுகாப்பில்” தன்னுடைய மனைவி இருந்தாள் என்பது குறித்து எந்தக் கணவன் மகிழ்ச்சி அடைவான் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

ஏதாவது ஒன்றை நம்பி எமது வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவிட்டுவிட்டோம் என்றால் பிற்காலத்தில் அவை எந்தளவு தான் தவறாக அர்த்தமற்றதாக தெரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மறுப்போம். ஒருவகை நிராகரித்த மனநிலையில் மிகுதிக் காலத்தை செலவிடுவோம்.

இப்படி ஆபாசம் மிகுந்த மந்திரங்களை சொல்லி நடக்கின்ற திருமணங்களையே எமது தமிழர்கள் செய்கிறார்கள். இவைகளை விட்டு திருக்குறள் சொல்லி திருமணங்கள் செய்யுங்கள் என்றால், "கடவுள், மதம்" என்று அடம்பிடிக்கிறார்கள். தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?

அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர் இந்த மந்திரங்கள் பற்றிய விளக்கங்களை சொல்லி உள்ளார். அவர் மட்டும் அல்ல. உண்மையை ஒத்துக் கொள்ளக் கூடிய சில பார்ப்பனர்களும் இதை ஒத்துக் கொண்டுள்ளார்கள்.

 அதனால் பாடசாலையில் பாடவிதானங்களில் ஒரு முக்கிய அங்கமாக சிறுவயதில் இருந்தே கற்பிக்கப்பட வேண்டும். மற்றய இனங்களிற்கு மதங்களிற்கு மதிப்பு கொடுக்கக்கூடிய வகையில் எல்லா இனங்கள் மதங்கள் பற்றிய அடிப்படை விடையங்களை எல்லோரும் படிக்க வேண்டும். அது தான் ஒற்றுமை புரிந்துணர்வு கொண்ட வளமான பலமான சமூகத்தை உருவாக்க உதவும்.

திருமண மந்திரங்கள் இவற்றுடன் முடிந்து விடவில்லை. தொடர்ந்து வருகின்ற திருமண மந்திரங்கள் இவர்கள் சொல்கின்ற இந்த மோசடி விளக்கத்தை சுக்கு நூறாக உடைக்கின்றன. திருமண மந்திரங்கள் ஒரு மணமகள் எவ்வளவு தூரம் இழிவுபடுத்தப்படுகிறாள் என்பதை பார்த்தோம்.

எம்மை ஈன்றெடுத்த தாயையே இந்த மந்திரங்கள் மிக மோசமாக கொச்சைப்படுத்துகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

தொடரும் ... மீண்டும் வாருங்கள்.
http://www.saalaram.com/tamil/11103/இந்து-மதம்-எப்படியெல்லாம்-பெண்ணை-இழிவுபடுத்துகிறது.
html http://www.viduthalai.in/page-7/37752.html
http://www.yarl.com/forum3/topic/16197-திருமண-மந்திரங்கள்/

No comments:

Post a Comment