Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

கடவுள்களாக‌ எலிக்கு நாய்க்கு கோயில்கள்.

கடவுளின் அம்சமாக எலிகள். நாய்க் கடவுளுக்கு தனிக் கோவில்.

எலிக்கோயில்


கர்னி மாதா கோவிலுன்னு சொல்லாம, எலிக்கோவிலுன்னு சொன்னால் சட்னு புரிஞ்சுருது. 'அது என்னடா அதிசயம்?'ன்னு இந்தப் பக்கம் வந்து எட்டிப் பார்த்துட்டுத்தான் போங்க.

இதை எலிக்கோயில் என்று அழைக்கிறார்கள். எலிகள் கடவுளின் அம்சமாக பார்க்கப்படுவதால் இங்கு எலிகள் சாப்பிட்ட மிச்சத்தை, எலிகள் குடித்த பாலையே தான் பிரசாதமாக வழங்குகிறார்கள்.


புகழ் பரவப்பரவ, ஜோத்பூர் ராஜா, ராவ் ஜோதாகூட கர்னி மாதாவை ஜோத்பூருக்குக் கூட்டிப்போய் தான் புதுசா கட்ட இருக்கும் கோட்டைக்கான இடத்தை ஆசீர்வதிக்கச் சொல்றார். இந்த மாதாதான் அஸ்திவாரம் போட முதல் கல்லை எடுத்துக் கொடுத்தாங்களாம்.

1454 வது வருசம் கர்னி மாதாவின் கணவர் இறந்துட்டார். தங்கையின் நாலு பிள்ளைகளோடு இவுங்க இருந்தாலும் அடிக்கடி தவம் செய்ய ஒரு குகைக்குப் போயிருவாங்களாம். 1463 வது வருசம் திருவிழாவுக்குப் போன தங்கையின் கடைசிப்பையன் லக்கன் அங்கே ஒரு குளத்தில் குளிக்கும்போது மூழ்கி இறந்துடறான். அவன் சவத்தைக் கொண்டுவந்து அக்கா கர்னிமாதாவின் முன்னால் போட்டுட்டு அவனை எப்படியாவது உயிர்ப்பிச்சுக் கொடுக்கணுமுன்னு தங்கை குலாபி வேண்டிக்கிட்டுக் கதறி அழறாங்க.

கர்னிமாதா யமனிடம் உயிரை மீண்டும் தரும்படிக் கேட்க, யமன் சொல்றான். ' ஐ ஆம் ஸாரி. அந்த உயிர் ஏற்கெனவே பூலோகத்தில் வேற இடத்துலே பிறந்துருச்சு. என்னாலே இனி ஒன்னும் செய்ய முடியாது'ன்னு:(

கர்னிமாதாவுக்கு கோபம் வந்துருச்சு. 'ஓக்கே..... இனி என் வம்சாவளியில் பிறந்த யார் உயிர் போனாலும் அவுங்களை வேறெங்கும் பிறக்க வைக்க உனக்கு ரைட்டு இல்லை. அந்த உயிர் எலிகளா மறுபிறவி எடுத்து இங்கே என்னுடன் கூடவே இருக்கட்டும்' ன்னு சொல்லிவச்சாங்க யமனிடம்.

இப்படிப் பிறந்த எலிகள்தான் இந்தக் கோவில் முழுசும் ஓடிப்பிடிச்சு விளையாடிக்கிட்டு இருக்குதுங்க. உலகத்துலேயே எலிக்கோவிலா இருப்பது இது மட்டுமே! ( மற்றபடி மதுரா வ்ருந்தாவன் கோவில்களில் கருவறையில் எட்டிப்பார்க்கும் எலிகள் கணக்குலே வராது, கேட்டோ!)

இருபதாயிரம் எலிகள் வரை இங்கே இருக்குன்னு ஒரு கணக்கு. அதுகள் ஓடி ஒளியத் தோதா அங்கங்கே சுவர்களில் கொஞ்சம் ஓட்டைகள் வச்சுருக்காங்க.
1538 வது வருசம் தன்னுடைய 151 வது வயசில் கருவறைக்குப் பக்கம் வந்து அப்படியே மறைஞ்சுட்டாங்களாம் மாதா. இறுதிச் சடங்குக்கு உடல் இல்லாமப் போயிருச்சுன்னு சொல்றாங்க.

இப்போ ஏகப்பட்ட வெர்ஷன்ஸ்!!!

இந்த எலிகள் நம்மீது பட்டால் நமக்கு அதிர்ஷ்டமாம். அதுக்காக மிதிச்சா வைக்கமுடியும்? ஒருவேளை அதே வந்து நம்மீது படட்டுமுன்னு கையை நீட்டி இருக்கலாமோ?

இந்த எலிகள் கொஞ்சம் நீளமான உடலோடு இருக்குதுகள்.
கர்ணி மாதா நிஜமாவே கருணை உள்ளவள்தான். அவளுடைய வம்சம் இப்படி எலியா இல்லாம பாம்பா இருந்துருந்தால்...... ஐயோ நினைச்சுப் பார்க்கவே முடியலை! .


பிகானீர் மஹாராஜா கங்காசிங் இந்தக் கோவிலைக் கட்டிக் கொடுத்துருக்கார். முழுக்க பளிங்கு! பதினாறாம் நூற்றாண்டில் மாதா மறைஞ்சதும் கட்டியது இது. பலவருசங்கள் கழிச்சு இன்னொரு மஹாராஜா கஜ் சிங் கோவிலுக்கான வெள்ளிக் கதவுகளை செஞ்சு கொடுத்தார். ரொம்ப அழகான பெரிய கதவுகள். எலிகளும் பார்டர் போட்டுருக்கு.

அங்கங்கே எலிகளுக்குப் பெரிய தாம்பாளத்தட்டுலே பால் தானியங்கள்ன்னு வச்சுருக்காங்க.

கலர்ஃபுல்லான உடைகளில் மக்கள் கூட்டம். சுத்துப்பக்கம் அம்பது அறுவது கிலோமீட்டர் தூரம் நடந்துவந்த பக்தர்களா இருக்கணும்.
உள்ளே நுழையும்போதே கெமெராவுக்கான கட்டணம் இருபது ரூ.தான்.
புனித எலிகளின் சரித்திரம் தெரியாமல் பருந்து வந்து கொத்திக்கிட்டுப் போயிட்டால்............. கோவில் முழுக்க மேலே வலை போட்டு மூடி இருக்காங்க..
இங்குள்ள எலிகள் கடவுளின் அம்சமாக பார்க்கப்படுவதால் தெரியாமல் ஆலயத்தில் உள்ள எலிகளில் ஒன்றை பக்தர்கள் கொன்றுவிட்டால், தங்கத்தில் செய்யப்பட்ட எலியை கோவிலுக்கு வழங்குகின்றனர்.

http://thulasidhalam.blogspot.sg/2011/07/35.html
http://india.lankasri.com/view.php?22YOlH2bcc40W34edSMCa020KmD4dd2DDm4303ogAO2e4C04U2cbclOoe3
http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=5546&start=5


இந்தியாவில் நாய்க் கடவுளுக்கு தனிக் கோவில் .
வைரவரின் வாகனமாக நாய் இருந்து வருகின்றது.

ஆனால் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இராம நகர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நாய்களுக்கு என்று தனிக் கோவில் ஒன்று உண்டு.

மூலஸ்தான மூர்த்தி நாய்தான். மூலஸ்தான மூர்த்தியான நாய்க் கடவுளின் பெயர் ஸ்ரீ நாயிடோலி வீரப்பா.

ஸ்ரீ வீரமஸ்தி கேம்பம்மா என்று ஒரு கிராமிய பெண் தெய்வம் இருக்கின்றார்.
இக்கிராமிய தெய்வத்தின் ஆலயத்துக்கு அருகில்தான் நாய்க் கடவுளின் ஆலயம் உள்ளது.

கேப்பம்பா கிராமிய தெய்வத்தின் மெய்ப்பாதுகாவலனாக நாய்க் கடவுள் விளங்குகின்றார் என்று கிராம மக்கள் நம்புகின்றனர்.

நாய்க் கடவுளிடம் பக்தர்கள் குறைகளை முறையிடுகின்றனர். அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் ஆலயத்துக்கு மீண்டும் வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

இக்கிராம மக்களுக்கு வருங்காலத்தை எடுத்து உரைக்க வல்ல ஒரு தீர்க்க தரிசியாகவும் ஒரு வகையில் நாய்க் கடவுள் விளங்குகின்றார்.

அதாவது கிராமத்துக்கு ஏதாவது கேடு அல்லது தீங்கு ஏற்பட இருக்கின்றது என்றால் நாய்க் கடவுள் வெளிப்படுத்து விடுவார் என்பது ஐதீகம்.

பிறக்கின்ற குழந்தைகளுக்கு இக்கிராமத்தவர்களில் அநேகர் நாய்க் கடவுளின் பெயரைத்தான் சூட்டுவார்கள். ஆண் குழந்தை என்றால் வீரப்பா என்றும் பெண் குழந்தை என்றால் வீரன்னை என்றும் பெயரிடுவார்கள்.

இந்தியாவில் சாதிக் கொடுமை தலை விரித்தாடுகின்றது. ஆனால் நாய்க் கடவுள் சாதிப் பாகுபாட்டுக்கு எதிரானவராக சித்திரிக்கப்படுகின்றார்.

ஏனெனில் நாய்க் கடவுளின் பூசகர்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

http://truthfast.blogspot.sg/2011/03/blog-post_25.html2 comments:

 1. இந்துத்துவம் ஆண்டால்..!

  ஃபாஸிசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவம் ஆண்டால் இந்தியா என்னாகும் என்ற வினாவிற்கு இரண்டு அண்மை நிகழ்ச்சிகள் விடையாகின்றன.

  உத்தரப் பிரதேச மாநிலத்தில், மாட்டுக்கறி உண்டதாகப் பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு, இந்திய விமானப்படை வீரர் ஒருவரின் 52 வயதான தந்தை கல்லால் அடித்துக் கொல்லப்பட்டதும் அதே உத்தரப்பிரதேசத்தில் கோயிலில் நுழைந்ததற்காக, தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு முதியவர் எரித்துக் கொல்லப்பட்டிருப்பதும் என இரு நிகழ்வுகள் இந்துத்துவத்தின் செயல்பாடுகள் எப்படி அமையும் என்பதற்கான அண்மைச் சான்றுகளாம்..

  இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்று, இறையாண்மையுள்ள மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசாக -- a sovereign, socialist, secular, democratic republic--- அரசியல் சாசனத்திலும் பிரகடனம் செய்யப்பட்டு உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக திகழ்ந்து வருகின்றது.

  விடுதலைக்கு முன்பிருந்தே இந்தியாவில் இயங்கி வந்த இந்துத்துவ சிந்தனையுள்ளவர்கள் இதை விரும்பவில்லை. பாகிஸ்தான் பிரிவினையும் காந்தி கொலையும் இதற்குரிய சான்றுகளாம்.

  இந்து, இந்தி, இந்தியா என்ற ஒற்றைக் கோட்பாட்டில் இந்தியாவை ஆள நினைக்கும் இந்துத்துவத்துக்கு, தனிப்பெரும்பான்மையுடன் பா ஜ க ஆட்சியைப் பிடித்தது வாய்ப்பாக அமைந்து விட்டது. தனது அஜெண்டாவை நிறைவேற்றத் துவங்கி விட்டது. அதன் மாதிரிகள்தாம் உத்தரப்பிரதேச முஸஃபர்பூர் கலவரமும் தாத்ரியில் நடந்த முதியவர் கொலையும் ஹமிர்பூரில் தலித் முதியவர் எரித்துக்கொல்லப்பட்டதும்!

  மாட்டுக்கறிக்குத் தடை என்பது சிறுபான்மையினரையும் தாழ்த்தப்பட்டவர்களையும் ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டே சட்டம் ஆக்கப் பட்டது என்றும் இந்தியாவில் வாழ்ந்த மக்கள் வேத காலத்தில் மாடுகளை யாகத்தில் பலியிட்டு உண்டு வந்தனர் என்றும் சான்றுகளுடன் பல்வேறு ஊடகங்களில் நிறுவப்பட்டு விட்டன.

  ஏதாவது காரணம் சொல்லி சிறுபான்மையினர் மீது வன்முறையையும் கொலைகளையும் அரங்கேற்றுவதோடு மக்களை எந்நேரமும் அச்சத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இந்துத்துவ இயக்கங்களின் நோக்கம்.

  தாத்ரியில் முஸ்லிம் முதியவரை கொடூரமாக கூட்டுப்படுகொலை செய்தவர்கள் அப்பாவிச் சிறுவர்கள் என பா ஜ க முன்னாள் எம் எல் ஏ ஒருவர் கூறியுள்ளார்.

  மத்திய பிரதேச மாநிலம் ஜபுவாவில் நான்கு கன்னியாஸ்த்ரீகள் 24 இந்துத்துவ கொடியவர்களால் வன்புணர்ச்சிக்குட் படுத்தப்பட்ட போது, "தேச விரோதிகளுக்கு எதிராக தேச பக்தி மிக்க இந்து இளைஞர்களின் கோபத்தின் வெளிப்பாடே இது" என வி எச் பி பொதுச்செயலாளர் பி எல் ஷர்மா சொன்னதுபோல் இவரும் கொலையை நியாயப்படுத்தியுள்ளார்.

  அதுபோன்றே, கோயிலுக்குச் சென்ற தலித் முதியவரை எரித்துக் கொன்றதும், குடிகாரன் செயல் எனத் திரித்துக் கூறப்படுகிறது. இந்தக்கொலையில் தொடர்புடையவர் எனத்தேடப்படும் மற்றொருவரான முகேஷ் அகி, இந்தோ- அமெரிக்க பிசினஸ் கவுன்சில் தலைவர் ஆவார்.

  இந்துத்துவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி தொடரும்பட்சத்தில் அது முழுமையான இந்துத்துவ ஆட்சியாகவே இருக்கும். அது இந்துக்களுக்கே ஆபத்தாய் முடியும். மனுதர்மம் என்றும் வர்ணாஸ்ரமம் என்றும் தனது திட்டத்தை இந்துத்துவா நடைமுறைப்படுத்தும்போது, பிரம்மனின் தொடையிலும் காலிலும் பிறந்த சூத்திரர்களான பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரும் பிரம்மனின் காலில் கூட இட ஒதுக்கீடு பெறாத தாழ்த்தப்பட்ட சமூகத்தவரும் முகத்திலும் தோளிலும் பிறந்தவர்களின் அடிமைகளாகவே இருக்க முடியும். ஆனால் பிற்படுத்தப் பட்ட சமூகத்தவரும் தாழ்த்தப் பட்ட சமூகத்தவரும் அதை உணராமல் இந்துத்துவத்துவ ஃபாஸிச அஜெண்டாவுக்கு ஏவலாட்களாகவும் அடியாட்களாகவும் இருப்பது நகை முரண்.

  இந்து மதம் என்பது வேறு, இந்துத்துவம் என்பது வேறு; இந்துத்துவம் ஃபாஸிசத்தின் செல்லப்பிள்ளை; அது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும் காவு வாங்கும் என்பதையும் இந்திய இறையாண்மையைக் குழி தோண்டி புதைத்து தேசத்தையே சுடுகாடாக்கும் என்பதையும் தேசத்தின் மீது பற்றுகொண்ட ஒவ்வொரு இந்தியனும் புரிந்துகொள்ளும் வகையில் பரவலான பிரச்சார முன்னெடுப்புகளைத் தேசப்பற்றுகொண்ட ஊடகங்கள் முன்னெடுப்பதே இந்துத்துவ பிசாசிடமிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பதற்கான ஒரேவழி! - ரஸ்ஸல்

  http://www.inneram.com/opinions/politics/4163-hindutva-governence.html

  ReplyDelete