Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

கந்தன் என்ற சுப்பிரமணியக் கடவுளின் பிறப்பு யோக்கியதையைக் கண்டீர்களா?

பிள்ளை பெறும் முயற்சியில் தொடர்ந்து 1,000 வருடங்கள் கலவி செய்து கொண்டே சிவனும் பார்வதியும் இருந்தார்களாம்.


 " உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாய்விட்டது; அதை எங்களால் தாங்கமுடியவில்லை. ஆகவே அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு அவர்களை அழிக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற்றுத் தரவேண்டும்" என்று தேவர்கள் வேண்டினார்கள் . அதற்குச் சிவனும் இணங்கி பிள்ளைபெறும் முயற்சியில் பார்வதியுடன் கலவி செய்ய இறங்கினானாம்.

தொடர்ந்து 1,000 வருடங்கள் கலவி செய்து கொண்டே சிவனும் பார்வதியும் இருந்தார்களாம்.

ஆனால் குழந்தை பிறக்காததைக் கண்டு தேவர்கள், இனி பிள்ளை பிறந்தால் இந்தஉலகே தாங்காது அவ்வளவு வலிமை உள்ளதாக இருக்கும். அது இந்த உலகத்தையே அழித்தாலும் அழித்துவிடும் என்று தேவர்கள் கருதி சிவனிடம்சென்று வேண்டிக் கலவி செய்வதை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர்
.
அதற்கு சிவன், "நீங்கள் சொல்லுவது போல் நிறுத்திக் கொள்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. நிறுத்தினால் அதிலிருந்து வரும் வீரியத்தை என்ன செய்வது" என்றதும், உடனே தேவர்கள் தங்கள் கைகளை ஏந்தி அதில் விடும்படிக் கேட்டார்களாம். அதன்படி தேவர்கள் அனைவரின் கையிலும் வீரியத்தைவிட்டு, சிவன் குடிக்கும்படி கூற அவர்களும் குடித்தனராம். மீதி வீரியத்தை சிவன் கங்கையில் விட்டானாம்.

கங்கை அதைத் தாங்காமல் கொதிக்க ஆரம்பித்துவிட்டதாம். வீரியத்தைக் குடித்த தேவர்களுக்குக் கர்ப்பநோய் வந்துவிட்டதாம். அவர்கள் சிவபிரானிடம் சென்று வணங்கி, தங்கள் கர்ப்பநோய்க்கு மருந்து கேட்க, அவர் அதற்கு 'காஞ்சிபுரத்திலுள்ள சுரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கினால் கர்ப்பம் கலையும்' என்று கூறினாராம். அதன் படி தேவர்கள் அக்குளத்தில் மூழ்கிக் கர்ப்பத்தைக் கலைத்துக் கொண்டார்களாம்.

கங்கையில் ஓடிய சிவ வீரியமானது, ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடியதால், ஆறு குழந்தைகள் ஆயிற்றாம். அதனை ஆறு பெண்கள் எடுத்து பால் கொடுத்து வளர்த்தனராம். ஆறுபேர்கள் பால் கொடுப்பது என்பது சிரமமாக இருப்பதாக எண்ணி அவர்கள் ஆறுபேரையும் ஒன்றாக அணைத்துப் பால் கொடுக்கையில் , முகம் 6 ஆகவும்(தலைகள்) கைகள் 12 ஆகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதையாம். ஸ்கலிதத்திலிருந்து உதித்ததால் ஸ்கந்தன் என்று பெயர் உண்டாயிற்றாம்.

ஸ்கந்தம் என்றால் , விந்து என்று பொருள்.


--------------- தந்தைபெரியார் - நூல்: "இந்துமதப் பண்டிகைகள்" பக்கம் 40-41

http://thamizhoviya.blogspot.com/2008/11/blog-post_2170.html

கந்த சஷ்டியாம்!

சிவனிடம், பார்ப்பனர்கள் (தேவர்கள்) முறையிட்டார்களாம், அசுரர்களால் தங்களுக்குத் தொல்லைகள் வருகின்றன என்று! அசுரர்களை அழிக்கவல்ல ஒரு வீரனைப் பெற்றுக் கொடுக்கிறேன் என்று பிரஜோற்பத்தியில் முனைந்தானாம் சிவன். பார்வதியும் பரமசிவனும் கூடிக் கலவி செய்தனராம், செய்தனராம், செய்து கொண்டேயிருந்தார்களாம். இவர்களின் காமச்சேஷ்டை நீண்டு கொண்டே போனதால் வருடக் கணக்கில் உலகின் இயக்கம் பாதிக்கப்பட்டு விட்டதாம்.

அதனால் கவலைப்பட்டுக் கஷ்டப்பட்ட தேவர்கள் மீண்டும் சிவனின் வீட்டுக்குப் போய் முறையிட்டார்களாம். சிவன் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லையாம். அவர் பாட்டுக்குக் கலவியே கண்ணாய் இருந்தாராம். தேவர்களும் விடவில்லை. போட்டுத் தொல்லைப்படுத்திக் கொண்டே இருக்கவே, சிவன் கோபத்துடன் பிடுங்கிக் கொண்டு எழுந்தானாம். விந்து பீய்ச்சி அடித்துச் சரவணப் பொய்கையில் விழந்ததாம். ஒவ்வொரு விந்துத் துளியும் ஒவ்வொரு குழந்தையாகிச் சரவணப் பொய்கையே குழந்தைகள் மயமாகி விட்டதாம்.

அங்கே குளித்துக் கொண்டிருந்த ஆறு கார்த்திகைப் பெண்களும் எல்லாக் குழந்தைகளையும் கூட்டிப் பிடித்துக் கட்டி அணைத்தார்களாம். அவ்வளவுதான், ஓராறு முகமும், ஈராறு கரமும் கொண்ட ஆறுமுகனாக - கந்தனாக - முருகனாக - கடம்பனாக - கார்த்திகேயனாக - உருவாகி விட்டதாம்.

அந்த நாள் கந்தசஷ்டியாம்!

ஆறுமுகம், 12 கைகள் வருகையில் கால்கள் மட்டும் ஏன் இரண்டாகவே இருந்து விட்டன? பக்தர்கள் யோசிக்கட்டும்!

கந்தன் சஷ்டியில் பாடப்படும் கவசம், சிரிப்பான வேண்டு கோள்களை முருகக் கடவுளுக்கு வைத்து வேலை வாங்குகிறது. படியுங்கள்:

சேர் இளமுலையைத் திருவேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
வடடக் குதத்தை வல்வேல் காக்க
பனைத் தொடையிரண்டும் பருவேல் காக்க

என் உடம்பைக் காக்க என்று பொதுவில் பாடக்கூடாதா? ஒவ்வொரு உறுப்பாகச் சொல்லிப் பாடவேண்டுமா?

இந்து மதக் கடவுளுக்கு வேறு வேலையே கிடையாது, மேலே கூறியவற்றைத் தவிர. கந்த சஷ்டி என்றால் என்ன, தெரியுமா? கந்தன் (முருகன்) சஷ்டியில் பிறந்ததால் கந்த சஷ்டி!

---------------- "விடுதலை" - 1-11-2008

http://thamizhoviya.blogspot.com/2008/11/blog-post_8158.html

***********

பூமி மாறி மாறி ஆளப்படுவது - ஏன்?

நாட்டை மன்னர்கள் மாறி மாறி ஆள்கிறார்களே, ஏன் தெரியுமா? இதுவரை தெரிந்து கொள்ளாத ஒரு சங்கதியை இப்பொழுதாவது தெரிந்து கொள்ளுங்கள்.

அதுவும் கந்தசஷ்டி கொண்டாடப்படும் நாளில் (அய்ப்பசி 14 - அக்டோபர் 31) தெரிந்து கொள்ள வேண்டாமா?

நவராத்திரி முடிந்தது, தீபாவளியும் கழிந்தது அடுத்து சுரண் டலுக்கு வழி தேட வேண்டாமா?

வந்துவிட்டது - ஆம், வந்து விட்டது கந்தசஷ்டி! கந்தன், சுப்பிரமணியன், முருகன், ஆறுமுகன் எல்லாம் ஒரு பொருள் பன்மொழிகள்!

ராமநவமி, கிருஷ்ணன் அஷ்டமி, விநாயகர் சதுர்த்தி என்பது போல கந்தன் சஷ்டி - அற்றவன் கடவுள் பிறப்பு, இறப்பு என்று சொல்லிக் கொள்வார்கள்; ஆனால் கடவுள்களின் பெரிய ஜாபிதா அதற்குப் பிறந்த நாள்கள் - இதுதான் அர்த்தமுள்ள இந்து மதத்தின் மகாமகா கூத்து.

வழக்கம்போல ஓர் அரக்கன் வர வேண்டாமா? அவன்தான் சூரபத்மன். அரக்கனைக் கொல்ல கடவுளைப் பிரார்த்திக்க வேண்டாமா?
சிவனை வேண்டினர் - கடவுளாக இருந்தாலும் உடல் சேர்க்கை வேண் டாமா? சிவன் - பார்வதி கூட ஆரம்பித்தனர் - ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல - நூறு தேவ வருட காலம் நடந்ததாம்.

இதற்கு மேலும் பிண்டம் தரித்தால் நாடு தாங்காது என்று தேவர்கள் முறை யிட்டு நிறுத்தும்படிக் கெஞ்சினார்களாம்.

அதன் விளைவு வீரியம் ஆறாகப் பெருக்கெடுத்ததாம். தேவர்கள் கைகளில் ஏந்தி குடித்ததால் கர்ப்பம் அடைந்தார்களாம். காஞ்சீபுரத்தில் உள்ள கரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கிக் கர்ப்பம் கலைந்தனராம்.

மீதி வீரியத்தை கங்கையில் கொண்டு போய் விட்டனராம். அது ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடி ஆறு குழந்தைகள் ஆயிற்றாம்.
ஆறு பெண்கள் பால் கொடுக்க வந்தார்களாம். ஆறு பெண்கள் பால் கொடுப்பது சிரமமாக இருப்பதாக எண்ணி அவர்கள் ஆறு பேர்களையும் ஒன் றாக அணைத்துப் பால் கொடுக்கையில் முகம் ஆறாகவும் (தலைகள்) கைகள் பன்னிரெண்டாகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதையாம்.

இதில் வடமொழியில் ஸ்கந்தன் என்றால் இந்திரியம் என்று பொருள் - சிவனின் இந்திரியத்திலிருந்து பிறந்ததால் ஸ்கந்தன் - கந்தன் என்று பெயராம்.

இப்படிப் பிறந்த ஆபாச பேர் வழிக்குத்தான் கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது. அதுவும் ஆறு நாள் விரதம் இருந்து கொண்டாட வேண்டும்.

முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், பழமுதிர் சோலை ஆகிய இடங்களில் கந்தசஷ்டி என்ற பெயரால் பகல் கொள்ளை பக்தர்களிடமிருந்து!

அர்த்தமுள்ள இந்து மதம் இதுதான் - தனக்குரிய வீரியத்தைப் பூமி தேவி தாங்கியதால் பார்வதிக்கு மகா மகா கோபம் பீறிட்டுக் கிளம்பி சாபம் விட்டாளாம்.

உன்னை மாறி மாறி அரசர்கள் ஆளக் கடவது என்பதுதான் அந்தச் சாபமாம்!

காட்டுமிராண்டி என்று சொன்னால் கோபப்படும் பக்த சிரோன்மணிகளே. இந்தக் கந்தன் பிறப்புக்கு என்ன காரணம் சொல்லப்போகிறீர்கள்?

--------------------”விடுதலை” 29-10-2011
http://thamizhoviya.blogspot.sg/2011/10/blog-post_30.html


சுப்பிரமணியக் கடவுள் பிறந்தது எப்படி?

விஸ்வாமித்திரன், சுப்பிரமணியனது பிறப்பைப்பற்றி ராமனுக்குக் கூறியது:-

1. சிவபெருமான் உமாதேவியைத் திருக்கலியாணம் செய்து, மோகங்கொண்டு, அவளுடன் 100 தேவ வருஷம் (மனித வருஷத்தில் பல யுகம்) புணர்ந்து கொண்டிருந்தனர். அவ்வளவு காலம் கழிந்தும் பார்வதி கர்ப்பம் அடையவில்லை. அது கண்டு நான்முகன் முதலிய தேவர்கள் சிவனிடத்தில் வந்து, "இவ்வளவு காலம் புணர்ந்த உம்முடைய தேஜஸ்ஸாகிய விந்து வெளிப்படுமானால் உலகம் பொறுக்கமாட்டாது. உம்முடைய விந்துவை தயவு செய்து விடாமல் நிறுத்திக் கொள்ளும்" என்று வேண்டவும், அதற்கிசைந்த சிவன் தனது விந்துவை மற்றபடி யார் தரிப்பது? எங்கு விடுவது? என்று கேட்க, தேவர்கள் பூமியில் விடும்படி சொல்ல, அந்தப்படியே சிவன் பூமியின்மீது விட்டுவிட்டார்.

பூமி அதை தாங்கமாட்டாமல் பூமி முழுதும் கொதி கொண்டு எழ, தேவர்கள் அந்த வீரியத்தை பூமி தரிக்க முடியாது எனக் கருதி அக்கினியிடம் சென்று வேண்ட, அக்கினி வாயுவின் உதவியால் அவ் வீரியத்திற்குள் பிரவேசித்து, பிரம்மதேவன் கட்டளைப்படி அதை கங்கையில் கொண்டு சேர்த்து, அவ் வீரியத்தைப் பெற்று ஒரு குழந்தை பெற வேண்டுமென்று கங்கையை வேண்ட, கங்கையும் அதற்குச் சம்மதித்து அவ் வீரியத்தைப் பெற, அவ் வீரியமானது கங்கை முழுவதும் பரவி நிறைந்துவிட, கங்கை அதை தாங்க மாட்டாமல் மறுபடியும் அக்கினியை வேண்ட, அக்கினி மனமிரங்கி கங்கையை நோக்கி, "ஏ, கங்கையே! நீ அடைந்த சிவனின் வீரியத்தை தாங்க முடியாவிட்டால் பனிமலை அருகில் விட்டு விடு" என்று சொல்ல, கங்கையும் அவ்வாறே அவ் வீரியத்தை பனிமலையின் அருகில்விட, அங்கு அது குழந்தையாகத் தோன்ற, அதை இந்திரன் பார்த்து அக் குழந்தைக்கு பால் கொடுத்து வளர்க்க கிருத்திகா தேவிகளை ஏவ, அவர்கள் அதற்கு பால் கொடுத்து வளர்த்து வரலானார்கள்.

பல இடத்தில் சிவனது வீரியம் ஸ்கலிதமானதன் பலனாக அக்குழந்தை உற்பத்தியானதால் அக்குழந்தைக்கு ஸ்கந்தன் என்றும், கிருத்திகா தேவிகள் ஆறு பேர்களுடைய பால் சாப்பிட்டதால் கார்த்திகேயன் என்றும், மேற்கண்ட ஆறுபேரின் முலைகளிலும் ஆறுமுகம் கொண்டு ஏககாலத்தில் பால் குடித்ததால் ஷண்முகன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.இவ்வாறு வால்மீகி இராமாயணத்தில் "சிவன் பார்வதியை புணர்ந்தது" என்று தலைப்பெயர் கொண்ட 36ஆம் சருக்கத்திலும், "குமாரசாமி உற்பத்தி" என்கின்ற 37ஆம் சருக்கத்திலும் காணப்படுகின்றது.

இரண்டாவது வரலாறு,

தேவர்கள் சிவனிடம் சென்று அசுரர்களை அழிப்பதற்கு தகுந்த சக்திகொண்ட ஒரு குழந்தையைப் பெற்றுத் தர வேண்டுமென்று வேண்ட, சிவன் அருள்கூர்ந்து தனது அய்ந்து முகங்களுடன் மற்றும் ஒரு முகத்தையும் சேர்த்துக் கொண்டு தோன்ற, அவ்வாறு முகங்களில் உள்ள நெற்றிக்கண் ஆறிலிருந்தும் ஆறு தீப்பொறிகள் வெளியாக, அப் பொறிகளைக் கண்டு தேவர்களும், மனிதர்களும் நடுங்கி பரமனை வேண்ட, பரமன் அப்பொறிகளை கங்கையில் விடும்படி சொல்ல, அவர்கள் அப்படியே செய்ய, கங்கை அது தாங்க மாட்டாமல் அவற்றைக் கொண்டு போய் சரவணத்தில் செலுத்த, அங்கு ஆறு குழந்தைகள் தோன்ற, அந்த ஆறு குழந்தைகளையும் கிருத்திகைப் பெண்கள் அறுவரும் பால் கொடுத்து வளர்த்து வந்தார்கள்.

பிறகு, சிவன் பெண் ஜாதி பார்வதிதேவி இந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்துக் கட்டி அணைத்து முத்தமிட்டுப் பாலூட்டுகையில் அவ் வாறு குழந்தைகளும், ஆறுமுகமும், பன்னிரண்டு கைகளும் கொண்ட ஒரே குழந்தையாக ஆகிவிட்டன. இதற்கு ஆறுமுகமுடையதால் ஆறுமுகன் என்றும், கங்கையாறு ஏந்திச் சென்றதால் காங்கேயன் என்றும், சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. இது கந்தபுராணத்திலும், முருகன் கதையிலும் உள்ளன.

குறிப்பு: சுப்பிரமணியன் பிறப்புக்கு மேல்கண்ட இரண்டு கதைகள் காணப்பட்டாலும், கந்த புராணத்தின் கதைப்படி பார்த்தாலுமே, வால்மீகி இராமாயணத்தில் விஸ்வாமித்திரர் ராமருக்குச் சொன்னதாகச் சொல்லப்படும் மேற்கண்ட கதைதான் உறுதியாகின்றது.

ஏனெனில், கந்தபுராணத்திலும் பார்வதியானவள் தன் மூலியமாய் பிள்ளை பெறுவதை தடுத்ததற்காக தேவர்கள்மீது கோபித்து தேவர்களை, "பிள்ளையில்லாமல் போகக்கடவது" என்று சபிக்கின்றாள் என்று காணப்படுகின்றது. சிவனது நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறி வெளியாகி அதிலிருந்து பிள்ளை உண்டாகியிருக்கும் பட்சத்தில், பார்வதிக்கு தேவர்களிடத்தில் கோபம் உண்டாகக் காரணம் ஏற்பட நியாயம் இல்லை.

இந்தக் கோபம் உண்டாவதற்குக் காரணம், வால்மீகி இராமாயணத்தில் சொல்வதுபோல், அதாவது 100 தேவ வருஷம் சிவன் பார்வதியைப் புணர்ந்து கடைசியாக வீரியம் வெளிப்பட்டு கருத்தரிக்கும் சமயத்தில் தேவர்கள் குறுக்கிட்டு சிவனை தனது வீரியத்தை பார்வதி கர்ப்பத்திற்குள் விடாமல் நிறுத்திக் கொள்ளும்படி வேண்டினதால் சிவன் அதை எடுத்துக் கொண்டதற்கு பார்வதி கோபித்து, வீரியம் ஸ்கலிதமாகும் சமயத்தில் கொடுமை செய்ததற்காக அவர்களைச் சபித்தது, அதாவது தன்னைப்போலவே தேவர்களுடைய பெண் சாதிகள் எல்லோரும் பிள்ளையில்லாமல் மலடிகளாக வேண்டுமேன்று சபித்ததாகக் காணப்படுவது நியாயமாக இருக்கின்றது.

அன்றியும், பார்வதி தனது கர்ப்பத்தில் விழ வேண்டிய வீரியத்தை பூமி பெற்றுக் கொண்டதால் பூமியையும் பார்வதி தனது சக்களத்திபோல் பாவித்து அவளையும் (பூமியையும்) பல பேர் ஆள வேண்டுமென்று சபித்ததாகவும், அதனாலேயே பூமிக்கு அடிக்கடி அரசர்கள் மாறுகிறார்கள் என்றும் வால்மீகியில் காணப்படுகின்றதும் பொருத்தமாயிருக்கின்றது. கந்த புராணமோ, மேல்கண்ட சிவன் 100 வருஷம் புணர்ந்த விஷயம் ஒன்றைத் தவிர மற்றவையெல்லாம் ஒப்புக் கொள்ளுகின்றது.ஆகவே, சுப்பிரமணியன் என்றும், சண்முகன் என்றும், கார்த்திகேயன் என்றும், ஸ்கந்தன் என்றும் சொல்லப்படும் சாமியானது மேல்கண்ட மாதிரி ஒரு பிறப்பு வளர்ப்புக்கு உள்பட்டது என்பது வைணவப் புராணங்களிலும் சைவப் புராணங்களிலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

சித்திரபுத்திரன் என்னும் புனைபெயரில் பெரியார் அவர்கள் எழுதியது (குடிஅரசு 2.9.1928).

http://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_3663.html

********************
No comments:

Post a Comment