Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

தப்பா நினைக்காதீங்க... இது பிரசாதம் தரும் ஒரு ஸ்டைல். அசிங்கம். காட்டுமிராண்டித்தனம்.

கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம். சாமியாரின் ஆண்குறி ஆசீர்வாதம். தாளவாடி மலைப்பகுதியில் சாணி அடி திருவிழாவில் ஏன் ? – அவாள் எல்லாம் கலந்து கொள்வது இல்லை சிந்தனைக்கு !! சாட்டையால் அடி வாங்கினால் பிள்ளை பிறக்கும்! வேப்பமரத்துக்கும் அரச மரத்துக்கும் டும் டும் டும்!
  மக்கள் திருந்தாதவரை ஏமாற்றுபவன் ஏமாற்றி கொண்டு தான் இருப்பான்.

 மாணவ, மாணவிகள் தேர்வில் வெற்றி பெற நூதன வழிபாடு. அவாளுக்கு சவுரியமான காரியங்களில் மட்டுமே ஹிந்து என்ற வார்த்தையே உபயோகம் செய்து இலாபம் அடைந்து வருகிறார்கள் இந்தியாவில் இது வரை .
வாழைப்பழத்தை மடியில் வாங்கக் காத்திருக்கும் பெண் , பெண்களுக்கு வாழைப்பழம் போல ஆண்களுக்கு எலுமிச்சம் கனி துப்பப்பட்டது.
இரை விழுங்கிய மலைப்பாம்பு சுருண்டிருக்கும் டிசைனில் துணியால் சுற்றப்பட்ட ஒரு தீப்பந்தம்! அதைத் தோளில் சுமந்தபடி நடுநாயகமாக வருகிறார் ஒருவர். அவரைச்சுற்றி நெற்றி மற்றும் உடம்பு முழுக்க நாமம், சிவப்பு நிற பார்டரில் மஞ்சள் அல்லது காவி நிற பஞ்சகச்சம் _ கைகளில் நீளப் பிரம்புகள், சங்கு, சேகண்டி _ இடுப்பு, மார்பு, கால்களில் சதங்கைகள் சத்தமெழுப்ப வருகிறார்கள் சிலர். இவர்கள்தான் காரமடை ரங்கநாதருக்கு தீப்பந்தச் சேவை செய்யும் பந்த சேவக தாசர்கள்.

தாரை தப்பட்டை, சங்கு, சேகண்டி என அந்த தாசர்கள் வரும் பாதை முழுக்க ஆர்ப்பாட்டமாக இருக்கிறது. ஊருக்குள் உலா வரும் அவர்களைக் கண்டதும் ஆசியும், அருள்வாக்கும் வாங்க, தெருக்கள்தோறும் பயபக்தியோடு மக்கள் திரள்கிறார்கள். தாசர்கள் தங்கள் வீட்டு வாசலை நெருங்கும்போது பெண்கள் பக்திப் பரவசம் மேலிட ஒரு வெள்ளை வேட்டியை வீதியில் விரிக்கிறார்கள். பூஜை சாமான்கள், வாழைப்பழங்கள் அடங்கிய தாம்பாளத் தட்டுகளை தாசர்களுக்கு முன்னால் வரும் பூசாரிகளிடம் கொடுக்கிறார்கள்.

பூசாரி அந்த வாழைப்பழங்களை உரித்து வரிசையாக அந்த வேட்டியின் மீது வைக்கிறார். அதுபோல பக்தர்கள் சர்க்கரை, வாழைப்பழம் கலந்து கரைத்துக் கொடுத்த பிரசாதக் குண்டாவையும் வாங்கி வேட்டியில் ஓர் ஓரமாக வைத்து அதற்கு தேங்காய் உடைத்து ஊதுபத்தி, கற்பூரம் கொளுத்தி தீபாராதனை காட்டுகிறார். அப்போது தாரை தப்பட்டை, சங்கு. சேகண்டி ஓசைகள் அந்தப் பகுதியையே அதிர வைக்க, அதற்கேற்ப தாசர்கள் அருகே வந்து சாமியாடுகிறார்கள்.

தீப்பந்தம் வைத்திருக்கும் தலைமை தாசர், சாமி வந்து ரொம்பவும் உக்கிரமாக ஆடுகிறார். கோவிந்த பாராக்... கோவிந்தோ...! ரங்க பராக், ராமா பராக் கோவிந்தோ...! என்று கட்டைக்குரலில் அவர் அங்கு ஏற்கெனவே ஒலிக்கும் இசையையும் மீறிப் பாடும் போது, அந்தக் குரல் நம்மை என்னவோ செய்கிறது. தாள லயம் மாறாமல் ஆடியபடி வரும் தாசர்கள் வெள்ளைவேட்டியில் உரித்து வைத்திருக்கும் வாழைப்-பழங்களை நோக்கி மண்டியிட்டுக் குனிகிறார்கள். அவர்கள் தலையை நிமிர்த்தும்போது பார்த்தால் ஒவ்-வொருவர் வாயிலும் உரித்த வாழைப் பழங்கள். இசைக் கருவிகள் இன்னும் அதிக ஓங்காரத்துடன் ஒலிக்க, அருள் வந்ததுபோல சிலிர்க்கும் அந்த தாசர்கள் அ...ஆ...உ..ஊ...! என்று ஆவேசம் ததும்ப ஊளையிடுகிறார்கள்.

அப்போது அவர்கள் முன்பு தன் முந்தானையை ஏந்தியபடி பக்திப்பரவசத்துடன் காத்திருக்கிறார்கள் பெண்கள். அடுத்த விநாடி, தாசர்கள் துப்பும் அந்த வாழைப்பழத்தை முந்தானையில் பிடித்து அதைக் கொஞ்சமும் சங்கோ-ஜமின்றி பிரசாதமாகச் சாப்பிடு-கிறார்கள் பெண்கள்.

இன்னொரு பக்கம் குருதாசரின் வாயில், உரித்த வாழைப்பழங்களைத் திணிக்கிறார்கள் மற்ற தாசர்கள். அவற்றை வாயில் கவ்வியபடி சாமியாடும் குருதாசர் தன்முன் முந்தானையை ஏந்தி மண்டியிட்டுக் காத்திருக்கும் பெண்-களை பிரம்பாலடித்து விரட்டுகிறார். பிறகு தனது விருப்பப்படி ஒவ்வொரு பெண்ணாக அழைக்கிறார். அவருக்குப் பத்தடி தூரத்தில் முந்தானையை ஏந்தியபடி ஒருவித நடுக்கத்துடன் அமர்கிறார் அழைக்கப்பட்ட பெண்.

ஓர் ஓங்கார உறுமலுடன் வாயில் இருக்கும் வாழைப்பழத்தை ஏவுகணை ரேஞ்சுக்குத் துப்புகிறார் குருதாசர். ஒரு கிரிக்கெட் வீராங்கனையின் திறமையுடன் முந்தானையில் அதை கேட்ச் செய்கிறார் ஒரு பெண். பிறகு அதை மார்புடன் அணைத்துக் கொண்டு குருதாசரின் கால்களில் விழுந்து ஆசி வாங்கிச் செல்கிறார். கேட்ச்சைத் தவறவிடும் பெண்களுக்கு சிலசமயம் இன்னொரு வாய்ப்பும் கொடுக்கிறார் குருதாசர். அதையும் தவறவிட்டால் பிரம்படி கிடைக்கிறது. அந்தப் பெண்கள் ஓவென அழுகிறார்கள். என்ன தப்புச் செய்தேன்? பிரசாதம் தப்பிப் போச்சே! என் குடும்பத்துக்கு இனி என்ன கேடு நடக்குமோ? என்று உருகித் தவிக்-கிறார்கள். பிரசாதம் கிடைத்த, கிடைக்காத சில பெண்கள், அருள் வந்து, தாசர்களிடம் உள்ள தீப்பந்தத்தைப் பிடித்து ஆடுவதையும் காண முடிகிறது.

கதை அத்துடன் முடியவில்லை. பெண்களில் சிலருக்கு குருதாசர் கூடுதல் அருள் வந்து வாயோடு வாய்-வைத்தே வாழைப்பழத்தை ஊட்டிவிடுகிறார். அதைப் போல வாழைப்பழம், சர்க்கரை கலந்த பிரசாதத்தையும் அருளுடன் அல்லாடியபடி அவர் பெண்களை அழைத்து வாயோடு வாய் வைத்து ஊட்டுகிறார். அதை ஒரு துளிகூட சிந்தாமல், சிதறாமல் பெண்கள் சாப்பிட்டாக வேண்டும். இல்லாவிட்டால் அவர்களிடம் குருதாசரின் பிரம்பு பேசுவதை நம்மால் காண முடிகிறது.

அதன் பிறகு அடுத்த தெரு, புதிய பெண்கள், விரித்த வெள்ளை வேட்டி, உரித்த வாழைப்பழங்கள், மீண்டும் துப்பல்கள், கேட்ச்சுகள், வாயோடு வைத்து வாழைப்பழ ஊட்டல்கள் என அருள் வைபவங்களை அரங்கேற்றுகிறது தாசர் டீம். யார் இந்த தாசர்கள்? எங்கே நடக்கிறது இந்த மாதிரி பக்திப் பரவசம்?

கொங்கு நாட்டில் உள்ள புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்று கோவை காரமடை ரங்கநாத சாமி திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டு-தோறும் நடக்கும் மாசிமகத் தேரோட்டத்துக்கு மறுநாள் இரவு கோயிலில் பரிவேட்டை உற்சவம் நடக்கும். அப்-போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களில் இருக்கும் அரங்கநாதனின் அடியார்களான தாசர்கள் பந்த சேவை, கவாள சேவைகளை அவரவர் ஊரில் இருந்து எடுத்து வந்து கோயிலில் சமர்ப்பிப்பார்கள்.

தீப்பந்தம் எடுத்து ஆடியபடி வீதிகளில் வலம் வந்து பந்தத்தின் தீநாக்குக்குள் பயமின்றி கட்டை விரலை-விட்டு சாம்பல் எடுத்து பக்தர்களின் நெற்றியில் இட்டு கோவிந்தா பராக் போடுவது பந்தசேவை. வாழைப்பழம் ரங்கனுக்குப் பிடித்தமான கனி. அதை கைபடாமல் வாயாலேயே கவ்வி எடுத்து பக்தைகளுக்கு பிரசாதமாக வழங்குவதற்குப் பெயர் கவாள சேவை.

அந்த அடிப்படையில்தான் கடந்த ஞாயிறன்று காரமடையில் ரங்கநாத-ருக்குத் தேரோட்டம் நடந்து முடிந்த மறுநாள், கோவை மாதம்பட்டி அருகே உள்ள குப்பனூரில் பந்தசேவை, கவாளசேவை நடத்தி கலக்கினார்கள் தாசர்கள். இதில் பெண்களுக்கு வாழைப்பழம் ஊட்டப்பட்டதைப்-போல ஆண்களுக்கு எலும்மிச்சம்கனி துப்பப்பட்டது. அதை சரியாக துண்டு ஏந்திப் பிடிக்காத ஆண்கள் பிரம்படியை வாங்கிக் கட்டிக் கொண்டார்கள்.

சரி, எதற்காக இந்தக் கவாள சேவை? இப்படி எச்சில் பிரசாதம் வாங்கிச் சாப்பிடுவது சரிதானா? என்று கவாள சேவை வாங்கிய பெண்கள் சிலரிடம் பேசினோம்.

இதை எச்சில் என்று கொச்சைப்படுத்தக்கூடாது. தாசர்கள் எல்லோரும் ரங்கநாதனின் மறுவடிவங்கள். அவர்களிடம் பிரசாதம் வாங்குவது அந்த ரங்கநாதப் பெருமாளிடமே நேரடியாகப் பிரசாதம் வாங்குவதற்குச் சமம். தாசர்களிடம் வாயோடு வாய் வாழைப்பழம் வாங்கும் பெண்கள் எல்லாமே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள். அவர்களுக்கு நிச்சயம் இந்த ஆண்டே குழந்தை பிறக்கும். மடியில் பிரசாதம் வாங்கியவர்களுக்கு நினைத்த காரியம் கைகூடும்! என்றனர் அந்தப் பெண்கள்.

சாவித்திரி என்ற பெண்மணியிடம் பேசினோம். நான் ஏழெட்டு வருஷமாக வீதிக் கவாளம் வாங்குகிறன். அதில் எனக்கு கூச்சநாச்சமோ, அசூயையோ துளிகூட இல்லை. இன்னும் சொல்லப் போனால் கவாளம் வாங்கும்போது என்னை நானே மறந்து விடுகிறேன். பந்தத்தைப் பிடுங்கிக்கொண்டு ஆடுகிறன். அந்த அளவிற்கு என்மேலே ரங்க-நாதன் இறங்கி விடுகிறார் என்றார் அவர். ராஜேஸ்வரி என்ற பெண், முதல்-முறை எனக்குக் கொடுத்த கவாளத்தை தூக்கிவீசிட்டேன். அதிலிருந்து எனக்-குக் கஷ்டம் அதிகமானது. இப்போது 23 வருஷமாக தொடர்ந்து கவாளம் வாங்கிச் சாப்பிடுகிறேன். நான் நினைத்தது நிறைவேறியிருக்கிறது என்றார் அவர். சுடிதார் அணிந்திருந்த இளம்பெண் மகேஸ்வரி, பி.எஸ்.ஸி மேத்ஸ் இறுதியாண்டு படிக்கும் நான் படித்தவுடன் வேலை கிடைக்க இப்படி மடியில் கனியேந்தினேன். படிப்பு முடிந்ததும் நிச்சயம் எனக்கு வேலை கிடைக்கும்! என்றார் பேருவகையோடு.

குருதாசரிடம் வாயோடு வாய் வைத்து பிரசாதம் வாங்கிய மகேஸ் என்ற பெண்ணிடம் பேசினோம். பத்து வருடமாக எனக்குக் குழந்தையில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாத்தான் கவாளம் வாங்குகிறேன். போன வருஷம் கவாளத்தை மடியேந்திப் பிடிக்க தவறிட்டேன். அதை சாப்பிட-வும் மறுத்துவிட்டேன். அப்ப சாமி அருள் வந்து பிரம்பால அடிச்சு இரண்டாவது தடவையாக பிரசாதத்தை வாயோட வச்சு ஊட்டி விட்டுச்சு. அப்பவே, நீ அடி வாங்காம பிரசாதம் வாங்கினாத்தான் குழந்தை கிடைக்கும் என்று சொன்னாங்க. இந்த முறையாவது அடிவாங்காமல் பிரசாதம் வாங்கலாம் என்று உட்கார்ந்தேன். ஆனால், இந்த முறையும் பிரசாதத்தைத் தவற விட்டு விட்டேன். சாமி பிரம்பால் அடித்துத்தான் திரும்ப கவாளம் கொடுத்திருக்கு. இந்த வருஷமும் குழந்தை கிடைக்குமோ, குறையாகவே இருக்குமோ தெரியலை! என்று அங்கலாய்த்தார் அவர். சில பெண்கள் தாங்கள் சாப்பிட்ட வாழைப்பழ பிரசாதத்தை தங்கள் குழந்தைகளுக்கும் கொடுத்ததை நாம் காணமுடிந்தது.

கடைசியாக இந்த பந்தசேவை, கவாள சேவையை நடத்தியவர்களில் இருவரான கோவிந்தசாமி, பழனிச்சாமி என்ற இரு தாசர்களிடம் பேசினோம்.

இதை நாங்க அய்ந்து தலைமுறையாக நடத்துகிறோம். ரங்கநாதரின் கைகளில் இருக்கும் சங்கு, சக்கரம்தான் தாசர்களுக்கு ஆதாரமானவை. பரம்பரை பரம்பரையாக வரும் தாசர்கள் வீடுகளில் செம்பு உலோகத்திலான இந்தச் சிறிய முத்திரைகள் இருக்கும்.

ஒரு தாசர் இறந்து போனாலோ, வயோதிகம் அடைந்து கவாள விளையாட்டு விளையாட முடியாமல் போனாலோ அதை அவர் தொப்புள்கொடி உறவில் வந்த மகன் செய்ய வேண்டும். அப்போது சங்கு சக்கர முத்திரைகளை கோயிலில் வைத்து கற்பூரத்தில் காய்ச்சி பூஜை செய்து தாசராக பட்டம் கட்டக் கூடிய வாரிசின் தோளில் சுடுவார்கள். அதன் மூலம் அவருக்குள் ரங்க நாதர் இறங்கிவிட்டதாக அய்தீகம். அப்படி ரங்கநாதர் முத்திரை பெற்றவர்கள் கடுமையான விரதம் அனுஷ்டிக்க வேண்டும். தாசர் முத்திரை வாங்கியவரின் மனைவியும் சங்கு, சக்கர முத்திரையைத் தோளில் வாங்கவேண்டும். அவர்கள்தான் தாசர்களுக்கு சமையல் செய்து பணிவிடைகள் செய்ய வேண்டும்.

ஆசார அனுஷ்டானங்களில் ஏதாவது குறைபாடு நேர்ந்தால் அந்த தாசர் குடும்பம் சொல்ல முடியாத சிரமத்துக்கு ஆளாகும். இதற்குப் பயந்தே பல தாசர்களின் வாரிசுகள் முத்திரை வாங்கச் சம்மதிப்பதில்லை. அப்படி சம்மதிக்காத நிலையில் அந்த சங்கு, சக்கர முத்திரையை பூமிக்குள் இறக்கி விடுவர் என்றனர் அந்த தாசர்கள்.

இப்படி பெண்களுக்கு வாயோடு வாய் வைத்து எச்சில் பிரசாதம் கொடுக்கீறீர்களே, இது பண்பாட்டுக்கு விரோதமில்லையா? மேலும் இதில் நோய்க்கிருமிகள் பரவாதா? சுகாதாரக் கேடு ஆகாதா? என்றோம்.

கவாளத்தை நாங்களா கொடுக்கிறோம்? அந்த ரங்கநாதன்தானே கொடுக்கிறான்? அது எப்படி பண்பாட்டுக்கு விரோதமோ, சுகாதாரக்கேடோ ஆகும்? இது இந்த ஊரில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில், இந்தியா முழுக்க காரமடை ரங்கநாத தாசர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் இது நடக்குது? என்றார்கள் அவர்கள் ஒருவித சீற்றத்தோடு.

தீ மிதிப்பது, பக்தைகளை குப்புறப்படுக்க வைத்து அவர்களை மிதித்தபடி சாமியாடிகள் செல்வது, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பது, சுடு காட்டில் மயானக் கொள்ளை என்ற பெயரில் எலும்பு கடிப்பது என எல்லாமே பக்தி என்றால் அதில் இப்படி ஆயிரம் லீலாவினோதங்கள் இருக்கத்-தானே செய்யும்? நம்பிக்கை இருக்க வேண்டியதுதான். ஆனால், அதுவே மூட நம்பிக்கையாகும்போது?   நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 7.3.20

சாட்டையால் அடி வாங்கினால், பிள்ளை பிறக்கும்! - உண்மைச் சம்பவம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அத்திபலகானூர் என்ற கிராமத்தில் உள்ள, நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாவில் பூசாரி கையால் சாட்டையடி வாங்கும் நிகழ்ச்சி வருடா வருடம் வெகு விமர்சையாக நடைபெறும்.

இந்த வருடம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று அதிகாலை தீச்சட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி ஏந்திவந்து வழிபட்டனர்.

பின்னர் வினோதமான சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அந்த கோயில் பூசாரி சாட்டையுடன் நிற்க, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் நீண்ட வரிசையில் நின்றனர்.

இந்த கோயில் பூசாரியிடம் சாட்டை அடி வாங்கினால் குழந்தை பாக்கியம் உண்டாகுமாம், தீராத நோய்கள் நீங்குமாம், மேலும் குடும்ப பிரச்னைகள் தீருமாம். அதேபோல இந்த வருடமும் அந்த சாட்டையடி நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் ஒவ்வொருவராக வந்து நிற்க அவர்களை சாட்டையால் அடித்து அந்த கோயில் பூசாரி ஆசீர்வதித்தார்.
கடவுள் நம்பிக்கை வேண்டும்தான், ஆனால் இதுபோல மூட நம்பிக்கைகள் தேவையா?

வேப்பமரத்துக்கும், அரச மரத்துக்கும் டும் டும் டும்!
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூரை யடுத்த டி.எடையார் கிராமத்தில் மாணிக்க விநாயகர் கோவில் அருகே வேப்பமரமும், அரச மரமும் பின்னிக் கொண்டு இருக்கிறதாம்.

விட்டுவிடுமா புரோகிதம்? சுரண்டலுக்கு மறு பெயர்தானே பக்தியும் - அதன் தகப்பனாகிய புரோகிதமும்?

இது ஓர் அபூர்வ காட்சி - இந்த இரண்டு மரங்களுக்கும் கல்யாணம் செய்து வைத்தால் ஊரே சுபீட்சம் அடையும் என்றனர் குருக்கள் பார்ப்பனர்கள்!

குருக்களே சொல்லிவிட்டார் - வேறு அட்டி யென்ன? மேளதாளத்துடன் கல்யாண திருக்கோலம் - புரோகிதர்கள் தட்டுகளை மாற்றிக் கொண்டார்களாம் - மொய் எழுதப்பட்டது - உண்டியலும் நிரம்பி வழிந்தது.

மொட்டை சாமி தலையில் உட்கார்ந்த காக்கை எச்சமிட்டால் அதிலிருந்து விழும் விதையில் மரம் முளைப்பது இயல்பான ஒன்றுதானே. இதில் என்ன அதிவிசேஷம் வாழுது?

இந்தப் பார்ப்பனர்களுக்குச் சொல்லிக் கொடுத்தவன் கவுடில்யன் என்னும் இவர்களின் முன்னோரான மற்றொரு பார்ப்பனன்.

அவன் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில், அரசன் எப்படியெல்லாம் வருமானம் ஈட்டலாம்? வரி போடலாம்? என்று விலாவாரியாக எழுதி வைத்து விட்டுச் சென்றான்.

ஒரு மரத்தில் பிசாசு தோன்றிவிட்டதாக முதலாவது பொது ஜனங்களிடையே பீதியை உண்டு பண்ணிவிட வேண்டும். இந்த மரத்துக்குள் ஒருவனை நுழையச் செய்து பயங்கரமான கூச்சல் இடும்படியாக அரசன் ஏற்பாடு செய்யவேண்டும். இந்தத் துஷ்ட தேவதையைச் சாந்தப்படுத்தி அனுப்பாவிட்டால் ஊருக்குப் பெருங்கேடு ஆகும் என்று கூறி மக்களை நம்ப வைக்கவேண்டும். அரசரது ஒற்றர்கள் சந்நியாசிபோல வேடம் பூண்டு இந்தத் தந்திரத்தைச் செய்து குடிகளிடம் பணம் வசூல் பண்ணவேண்டும்.

பிசாசு நகரத்தைவிட்டுப் போய்விடுகிறது. பணம் அரசனின் பொக்கிஷத்தைப் போய் அடைகிறது.

அதேபோல, அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரம் அகாலமாகப் பூக்கவோ, காய்க்கவோ செய்தால், அதில் கடவுள் தோன்றியிருக்கிறார் என்று பொது மக்களிடம் காட்டிப் பிரசித்திப்படுத்த வேண்டும். அல்லது ஒரு கிணற்றில் அனேக தலைகளை உடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி அதைப் பார்க்க வருபவர்களிடம் பணம் வசூலிக்கலாம் என்கிறான் கவுடில்யன்.

எந்தப் புரட்டையாவது செய்து குடிமக்களை ஏமாற்றி அரசன் பணம் பறிக்கலாம் என்னும் வஞ்சக தந்திரங்களை கூடை கூடையாக எழுதி வைத்துச் சென்று இருக்கிறான் சாணக்கியன் என்று கூறப்படும் கவுடில்யன் தன் அர்த்தசாஸ்திர நூலில்!

இன்று அரசன் இல்லை; ஆனால், அதேநேரத்தில் அர்ச்சகப் பார்ப்பான் இருக்கிறான் சுரண்டிக் கொழுக்க - திடீரென்று ஒரு நாள் பிள்ளையார் பால் குடித்தார் என்று புரளி கிளப்பவில்லையா? ஒரு நாள்தான் குடித்தானா? ஏன் மறுநாள் குடிக்கவில்லை? குட்டு வெளிப்பட்டு உள்ளி மூக்கு உடைந்துவிட்டது. அதன் பின்னணியில் ஆர்.எஸ்.எசும், சந்திராசாமியும் இருந்தனர் என்று பிறகு அம்பலமாகிடவில்லையா?

மாணவ, மாணவிகள் தேர்வில் வெற்றி பெற நூதன வழிபாடு.
அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் அம்மன் கோவிலின் பெருமைகளை அச்சிட்டு அதை விநியோகித்தால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டுள்ளனர்.

நிகழாண்டு எஸ்.எஸ்.எல்.சி . மற்றும் பிளஸ் டூ வகுப்பு தேர்வுகள் முடிவுற்ற நிலையில் ஆலங்குடி, வடகாடு பகுதியில் ஆங்காங்கே ஒரு கலரில் அடித்த நோட்டீஸ் கிடந்தது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதில் சில
வேறொரு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கோவிலுக்குள் அம்மனுக்கு பூஜை செய்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு பாம்பு வந்து நான் பூமியில் அவதாரம் எடுத்து வந்துள்ளதால் அம்மனின் பெருமைகளைப் பற்றி சுமார் 1000 பேர் அறியும்படி பத்திரிகைகள் வாயிலாக யார் தெரிவிக்கிறாரோ அவர் நினைப்பதை 10 நாளுக்குள் நிறைவேற்றுவேன் என்று கூறி மறைந்தது.

இதைச்செய்து பலர் ஏராளமான பலன்களை பெற்றுள்ளதாககவும், உதாசீனப்படுத்திய பலர் சிரமத்தை சந்தித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் ஊர் மற்றும் பெயருடன் நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்துள்ளனர்.

இதற்கு பொதுத்தேர்வில் வெற்றி பெறவும், அதில் அதிக மதிப்பெண் எடுக்கவும் அம்மனிடம் வேண்டிக்கொண்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். இந்த நோட்டீஸ் இப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும், வடகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள முத்துமாரியம்மமன், விநாயர், முருகன், சிவன் உள்ளிட்ட கோவில்களின் சுவற்றில் கரிக் குச்சியால் தேர்வு எண்களை எழுதி வேண்டுதலை சுவாமியிடம் சொல்லியுள்ளனர்.- இரா.பகத்சிங்

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=98133

தாளவாடி மலைப்பகுதியில் சாணி அடி திருவிழாவில் ஏன் ? – அவாள் எல்லாம் கலந்து கொள்வது இல்லை சிந்தனைக்கு !!
தாளவாடி மலைப்பகுதியில் சாணி அடி திருவிழாவில் ஏன் ? அவாள் எல்லாம் கலந்து கொள்வது இல்லை சிந்தனைக்கு !! ஈரோடு அருகே தாள வாடி மலைப்பகுதியில் பக்தர்கள் மீது சாணியை வீசும் வினோத திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது.ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் பீரேஸ்வரர் கோயில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலில், தீபாவளி பண்டிகை முடிந்து 4வது நாள் சாணியடிக்கும் திருவிழா நடைபெறும்.முன்னதாக, ஊரில் உள்ள எல்லா வீடுகளில் இருந்தும் பசு மாட்டு சாணம் சேகரிக்கப்பட்டு கோயில் அருகே குவிக்கப்பட்டது.

பகல் 12 மணிக்கு சிறுவர்கள் ஒருவர் மீது ஒருவர் சாணியடித்து விளையாடினர். 2 மணிக்கு அருகே உள்ள குளத்திலிருந்து சுவாமி அழைப்பு நடந்தது. தாரை தப்பட்டைகள் முழங்க, கழுதை மேல் சுவாமி கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.

ஆண்கள் அனைவரும் சட்டை அணியாமல் கோயிலுக்கு பின்புறம் கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண் டைகளாக செய்து ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர். 2 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அனைவரும் குளத்தில் நீராடிவிட்டு கோயிலுக்கு சென்று பீரேஸ்வரரை வழிபட்டனர்.

சாணி வீசும் திருவிழா குறித்து, ஊர் பெரியவர்கள் கூறியது:

இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை சில நூற்றாண்டுகளுக்கு முன் ஒருவர் எடுத்து சென்று சாணங்கள் சேகரிக்கும் குப்பைமேட்டில் எறிந்து விட்டார். ஒரு நாள், மாட்டு வண்டி குப்பைமேட்டின் மீதேறிச் செல்லும் போது ஒரு இடத்தில் ரத்தம் வழிந்துள்ளது. இதை கண்ட மக்கள் அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் இருந்தது தெரிய வந்தது. அப்போது ஒரு சிறுவன் கனவில் தீபாவளி முடிந்து நான்காவது நாள் சாணத்திலிருந்து வந்ததன் நினைவாக சாணியடி திருவிழா நடத்த வேண்டும் என கடவுள் கூறியதால் ஆண்டுதோறும் இத்திருவிழா நடத்தப்படுகிறது. இதில் கும்டாபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்களும் ஆர்வமுடன் கலந்து கொள்கிறார்கள் என்றார்.எப்படியும் சில மூட நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கிறது ,ஆனால் இது போன்ற திருவிழாக்களில் பிராமணர்கள் கலந்து கொள்வது இல்லை.

அவாளுக்கு சவுரியமான காரியங்களில் மட்டுமே ஹிந்து என்ற வார்த்தையே உபயோகம் செய்து இலாபம் அடைந்து வருகிறார்கள் இந்தியாவில் இது வரை . மக்கள் திருந்தாதவரை ஏமாற்றுபவன் ஏமாற்றி கொண்டு தான் இருப்பான்.

நன்றி கமல் கண்ணன்

http://indru.todayindia.info/why-in-the-festival-in-the-hills-talavadi-dung/

ஆட்டிறைச்சியை பன்றி இறைச்சியை பச்சையாக உண்ணும் பக்தர்கள்.
தலையில் தேங்காய் உடைப்பு.No comments:

Post a Comment