Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

சீனப் படைக்குச் சக்தியா - சிவனுக்குச் சக்தியா? அட சிவனே!

காவிபடைகளே!!. சீனாக்காரன் கையில் சிக்கிய சிவபெருமானும்! சொர்க்க லோகமும். எப்போது எப்படி மீட்பது ? சீனப் படைக்குச் சக்தியா - சிவனுக்குச் சக்தியா? சிந்திப்பீர்!. சீன ஆக்கிரமிப்புப் பகுதியில் கைதியாக சிவன் சிவனேன்னு கிடக்கிறான்.


நமது கேள்வி இதுதான்.

பூலோக சொர்க்கம் என்று போற்றப்படுகின்ற இடம்!சிவபெருமான் உறைவதாகக் கூறப்படுகின்ற இடம்!மூன்று தைவ சக்திகள் ஒன்று கூடுவதாகக் கூறப்படும் இடம். இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நியன் எப்படி ஆக்கிரமித்தான் - அதுவும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனான சீனாக்காரனால் எப்படி ஆக்கிரமிக்க முடிந்தது?
அவன் படை எடுத்துவந்த நேரத்தில் சிவபெருமான் என்ன செய்து கொண்டிருந்தான்? திரிபுரத்தை அவன் சிரித்தே அழித்ததாகக் கதை கட்டி இருக்கின்றார்களே - அந்த அபார சக்தி என்ன ஆயிற்று?

சிவபெருமான் இருப்பது உண்மையானால், சீனாக்காரன் அந்த இடத்தைக் கைப்பற்றி இருக்க முடியுமா? இதிலிருந்து என்ன தெரிகிறது?
சீனப் படைக்குச் சக்தியா சிவனுக்குச் சக்தியா? சிந்திப்பீர்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு கைலாஷ் மானசரோவருக்குப் பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனராம். கைலாயங்கிரி என்றால் சிவன் உறையும் இடம் என்று தடபுடலாக மத்தளம் கொட்டி சிலாகிப்பார்கள் இந்துக்கள்.

அந்தக் கைலாசமலை இப்பொழுது எங்கே இருக்கிறது. சீன ஆக்கிரமிப்புப் பகுதியில், கைதியாக சிவன் சிவனேன்னு கிடக்கிறான்.

53 ஆண்டுகளுக்குப் பிறகு கைலாஷ் மானசரோ வருக்குப் பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனராம். கைலாயங்கிரி என்றால் சிவன் உறையும் இடம் என்று தடபுடலாக மத்தளம் கொட்டி சிலாகிப்பார்கள் இந்துக்கள்.

இதோ ஆதாரம் பேசுகிறது;

பாரதத்தின் கலை - கலாச்சார ஆன்மிகத் துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக் கிறது இந்த பூலோக சொர்க்கம். இதற்கு பாரதத்தில் வழங்கிய புராதனப் பெயர் த்ரிவிஷ்டபம் (திபெத்) சிருஷ்டியின் சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில் தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது.

பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, இமயமலை எழுந்ததும், கடல்கள் உருவான தும் இப்பகுதியிலிருந்து தான். ரிக் வேதத்தில் இத் தகவலைத் தரும் பல சூக்தங்கள் இருக்கின்றன. த்ரய: ஸுபர்ணா உபரஸ்ய மாயூ நாகஸ்ய ப்ருஷ்ட்டே. அதி விஷ்ட பிச்ரிதா: என்று தொடங்கும் சூக்தம், இந்தக் கருத்தை வெளியிடுகிறது.

மூன்று தைவ சக்திகள் - அக்னி இடி மின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது.

இதுதான் சொர்க்க லோகம்; இங்கு அமிர்த சக்தி இருக்கிறது. ஜீவர்கள் இந்த அமுத சக்தியைப் பெற்று வளர்கின்றன. இதனாலேயே இப்பகுதியை த்ரவிஷ்டபம் (மூன்று தைவ சக்திகள் ஒருமித்த சொர்க்கம்) என்று அழைக்கிறோம்.

மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திபெத் பிரதேசத்தை த்ரதவிஷ்டபம் என்றே குறிப்பிட்டு, ஆர்ய வர்த்தகத்தின் நடுப் பகுதி, மிகப் புனிதமான புண்ய பூமி என்று கூறியி ருக்கிறார். கிம்புரு ஷவர் ஷம், கின்னரதேசம், கந் தர்வ லோகம் என்றெல்லாம் இப்பகுதியில் உள்ள பிரதேசங்களை வர்ணிக்கிறார். கைலாஸ பர்வ தத்தை ஹேம கூடம் என்று மகாபாரதமும் கிரெளஞ்ச பர்வதம் என்று வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகின்றன.

ஏழாம் நூற்றாண்டில் இங்கு ஆட்சி புரிந்து வந்த ஸோங் வத்ஸன் ஸகம்போ எனும் திபெத்திய அரசனின் காலத்திலிருந்து 1954-இல் சீனா இந்நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு முன்பு வரையில் பாரதத்தின் பகுதி போலவே இங்கு இந்திய யாத்ரீகர்கள் போய் வந்து கொண்டிருந்தார்கள். கைலாஸ் - மான ஸரோவர் பகுதியிலுள்ள மகன்ஸர் கிராமத்திலிருந்து பாரதம் 1948-க்கு முன்பு வரைக்கும் கிஸ்தி வசூல் செய்து கொண்டிருந்தது. 1950 வாக்கில் இப்பகுதியுடன் கிட்டத்தட்ட எண்பதா யிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதால் 1962இல் ஏற்பட்ட சீனப் படையெடுப்பிற்குப்பின் கைலாஸ் மானஸரோவர் புனித யாத்திரை தடைப்பட்டு விட்டது.

- திரு சௌரி எழுதிய இந்தியாவின் கலையும் கலாச்சாரமும் என்ற நூல்- பக்கம் 145,146 (வானதி பதிப்பக வெளியீடு)

http://www.viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/103802-2015-06-23-09-36-34.html

No comments:

Post a Comment