Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களும் சில கொழுக்கட்டைகளும்.

விநாயகனின் ‘மர்ம’ விளையாட்டுக்கள். 
விநாயகன் வினை தீர்ப்பவன் அல்ல. வினை செய்பவன். 
காவி அரசியலை வேரறுப்போம்….சனநாயகம் காப்போம்!.வேதங்களால், தீண்டத்தகாதவர்களாக வரையறை செய்யப்படவர்களுக்குத் 
தற்காலிகமாக 'ஹிந்து' என்று முத்திரை குத்தி, முஸ்லிம்களுக்கெதிராகக் களமிறக்குகிறது ஹிந்துத்வா.
 விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களும் சில கொழுக்கட்டைகளும்.

விநாயகர் சதுர்த்தி என்றதும் கொழுக்கட்டைகளும், வண்ண வண்ணக் காகிதக் குடைகளும், களிமண் பிள்ளையாரும் அரச மர இலைகளும் நினைவுக்கு வருகிறதென்றால், நாம் எண்பதுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள்.

தெருவுக்கு ஒரு பிரம்மாண்ட சிலை, பத்து அடிக்கு ஒரு பெரிய சிலை, சிலைக்கு இரண்டு காவிக் கொடிகள், ஒரு LED தொலைக்காட்சியில் ஆன்மிக சொற்பொழிவுகள், மேடைகளில் ஹெச்.ராஜாவின் ஆபாசக் கூச்சல்கள், நள்ளிரவு வரை அருகே தூங்கி வழியும் நான்கைந்து சிறுவர்கள், ஊர்வலங்களில் பாரத் மாதாக்கீஜே முழக்கங்கள் என்றால் 2014 பாரதிய ஜனதா ஆட்சியின் கீழ். அதாவது எப்பாடுபட்டேனும், எவ்வளவு கீழ்த்தரமாக இறங்கியேனும், தமிழக மண்ணில் கிளை பரப்பத் துடிக்கும் சங்க பரிவாரங்களின், இந்துத்துவ சக்திகளின், பாரதிய ஜனதா கட்சியின் முயற்சிகளுக்கு, அரிய வாய்ப்புகளை வழங்கக் கூடிய விநாயகர் சதுர்த்தி விழா நிகழ்வுகள் பா.ஜ.க ஆட்சியின் கீழ் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்திருக்கின்றன.
.
சென்னை திருவல்லிக்கேணி பள்ளிவாசலின் அருகே, விநாயகர் ஊர்வலத்தின் போது, ஒரு செருப்பு, தொழுகை நேரத்தின் போது பள்ளிவாசலுக்குள் வீசப்பட்டது. இதை எதிர்த்த இசுலாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளாயினர். அவர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன; சூறையாடப்பட்டன. தொடர்ந்து பள்ளிவாசலுக்குள் சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. அன்றிலிருந்து இன்று வரை திட்டமிட்டு பதற்றத்தை விதைப்பதற்கும், வன்முறைகளை உண்டாக்குவதற்கும் அதன் மூலம் அரசியல் அறுவடை செய்து கொள்வதற்கும் வசதியாக சங்கப் பரிவாரங்கள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களைப் பயன்படுத்தி கொள்கின்றனர்.

நகருக்கொன்றாக இருந்த சிலைகள், தெருக்களுக்கொன்றாக அதிகரித்தன. தெருக்களுக்கொன்றாக இருந்தவை, தெருக்களுக்கு நான்கு என்று அதிகரித்தது . நகரங்களில் மட்டுமே வைக்கப்பட்டு வந்த விநாயகர் சிலைகள், இப்போது சிற்றூர்களுக்கும் பரவி, கிராமங்கள் வரை சென்று விட்டது.

எழில் நகர் என்றழைக்கப்படும் வடசென்னை கொருக்குப்பேட்டை குப்பை மேட்டுச் சேரியின் அருகே, சிவசேனா கூட ஒரு சிலை வைத்திருக்கிறது. பெரும் அரசியல் கட்சிகள் தொடங்கி, முதலாளிகளும் வியாபாரிகளுமாக புரவலர்களின் பட்டியல் பதாகைகளில் (ஃபிளக்ஸ்களில்) மின்னிக் கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ அனைத்து இடங்களிலும் இந்து முன்னணி இராம கோபாலனின் படமும், குறைந்த பட்சம் ஒரு மார்வாரியின் பெயரும் இல்லாமல் பதாகைகள் இல்லை.

உண்டியல் இல்லாமல் எந்த விநாயகர் சிலையும் இல்லை என்பதோடு, வலுக்கட்டாயமாக அருகிலுள்ள பொதுமக்களிடம் பணத்தையும் வசூலிக்கின்றனர்.

சாமியைப் பார்த்தாலே தீட்டு, தொட்டால் தீட்டு, அண்டினால் தீட்டு என அக்ரஹாரத்து ஆர்வலர்களாலும் ஆதிக்க சாதியினராலும் இன்று வரை ஒடுக்கப்படும் தலித் மக்களே, ஊர்வலங்களில் விழா நாயகர்களாக்கப்படுகின்றனர்.

காவி துணியை நெற்றியில் கட்டியவாறு, ஊர்வல ஊர்திகளில் டாஸ்மாக் போதையோடு குத்தாட்டம் போடுபவர்களாகவும், சொல்லிக்கொடுக்கப்பட்ட மோர்யாவையும், பாரத் மாதாக்கீஜேவையும் விற்க முயல்பவர்களாகவும் இறுதியில், கடலில் விநாயகர் சிலைகளை அடித்து உதைத்து மிதித்து கரைப்பவர்களாகவும் இந்துத்துவ சக்திகளின் சூழ்ச்சிகளின் எளிய இலக்காக, அத்தாழ்த்தப்பட்ட மக்களே பயன்படுத்தப்படுகின்றனர்.

பெரும்பாலும் பதின்ம வயதைச் சேர்ந்த இளைஞர்கள். சதுர்த்தி ஊர்வல நாட்களைத் தவிர, ஆண்டின் வேறெந்த நாட்களிலும் இவர்களை இப்படி காவித் துணியோடு பார்க்க முடியாது.

புரவலர்களும் இந்துத்துவ பரிவாரங்களும் பார்ப்பனர்களும் ஊர்வலங்களின் போது, ஓரமாக நகர்ந்து நின்று வேடிக்கை பார்க்க, மற்ற வைபவங்கள் இவ்வெளிய மக்களின் மூலமே அரங்கேறுகின்றன.

குத்தாட்டங்களில் ஆபாச நடன அசைவுகளும் உண்டு என்பது உபரி தகவல். சங்க பரிவாரங்கள் தாம் முன் வைக்கும் இந்து மத புனிதங்கள் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், தங்கள் மதவெறி அரசியலை முன்னெடுக்க, எப்படியும் இறங்குவார்கள் என்பதற்கு விநாயகர் சதுர்த்தி விழாவே சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில், ஆண்டு தோறும் தவறாமல் இந்துத்துவ சக்திகள், விநாயகர் ஊர்வலங்களை முன் வைத்து, திட்டமிட்டு வன்முறைகளை நிகழ்த்தினாலும், இப்பகுதிகளில் காவல் துறை அனுமதி அளிக்கத் தவறுவதில்லை.

திருவாரூர் மாவட்டத்தில்,இசுலாமியர்கள் அடர்த்தியாக வாழும் முத்துப்பேட்டையில் இந்த ஆண்டும் திட்டமிட்டு, இந்துத்துவ சக்திகள் வன்முறையை(கலவரத்தை) நடத்தியிருக்கின்றனர். மதியம் 3 மணிக்கு தொடங்க அனுமதிக்கப்பட்ட ஊர்வலத்தை வேண்டுமென்றே, இழுத்தடித்து, மாலை 4.30 மணி பள்ளிவாசல் அசர் தொழுகைக்கு, பாங்கு சொல்லும் வரை காத்திருக்கின்றனர். சரியாக பாங்கு சொல்லும் போது, ஊர்வலம் பள்ளிவாசலை நெருங்கியதால் காவல்துறை, பாங்கு முடியும் வரை தடுத்து நிறுத்தியிருக்கின்றது.உடனே இசுலாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வோடு முழக்கங்களை எழுப்பியிருக்கின்றனர். ஊர்வலம் செல்லும் வழியில் இருக்கும் இசுலாமியருடைய வீடுகளில் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். 15க்கும் மேற்பட்ட வீடுகளைச்சேதப்படுத்தியதோடு, ஒரு கடைக்கும் தீ வைத்திருக்கின்றனர்.

இது போன்ற செய்கைகளுக்கு அனுமதி வழங்கப் படுகிறது. அல்லது காவல்துறையினரின் பாதுகாப்புடனே, இப்படிப்பட்ட காலித் தனங்கள் நடக்கின்றன.

இந்து மதத்தில் இருக்கும் சாதிய ஒடுக்குமுறைகளை, கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள இயலாத தலித் மக்கள், கூட்டங்கூட்டமாக கிறித்துவ, இசுலாமிய, பெளத்த மதங்களை நோக்கிச் செல்கின்றனர். இந்த மத மாற்றத்தை தடுக்கும் முயற்சியாகத் தான், தமிழக இந்துத்துவ அமைப்புகள், தலித்துகள் குடியிருக்கும் சேரிகளில் விநாயகர் சிலைகளை அதிகம் அமைக்கின்றனர்..

அம்மத மாற்றத்தை நோக்கி, தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லாமலிருக்க, அவர்களை வைத்தே இசுலாமிய குடியிருப்புகளில் பதற்றத்தை உருவாக்கவும் முயல்கின்றனர். பள்ளிவாசல்களுக்கருகில் ஊர்வலங்கள் தாமதித்து சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்படுவதும் இந்நோக்கத்தின் அடிப்படையில் தான்..

” பத்து பைசா முறுக்கு, பள்ளிவாசலை நொறுக்கு, இந்தியா இந்து நாடு” போன்ற முழக்கங்கள் அதுவரை இல்லாத உற்சாகத்தோடு, பள்ளிவாசல்களை அடைந்த கணம் மட்டும் வேறு வடிவில் பரிமாணமெடுக்கின்றன..

போகிற வழியெல்லாம் சிறுபான்மையினரைக் குறி வைத்தே சீண்டப்படுகின்றன. பர்தா அணிந்து இரு சக்கர வாகனங்களில் செல்லும் பெண்களை நோக்கி ஒரு கூட்டம் ஊளையிடுகிறது. ஊர்வலங்கள் போகும் தெருக்களில், இசுலாமியர் கடைகள் உட்பட எல்லா கடைகளும் மூடப்பட வேண்டும் என்று வியாபாரிகள் சங்கங்களிலிருந்தே சுற்றறிக்கை வருமளவுக்கு, வன்முறைகள் எதிர்பார்க்கப்படுகின்றன..

தாம்பரத்தில் இசுலாமியர் ஒருவருக்கு சொந்தமான, பிரபல துணிக்கடையொன்றை முன்புறம் மறைத்தவாறு, மிகப்பெரிய விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டதும் இதில் அடங்கும். பதற்றத்தையும் அதன் மூலம் வன்முறையையும் உருவாக்க வேண்டும் என்பதை முற்றிலுமாக கருத்தில் கொண்டே இவ்வளவு காட்சிகளும் திட்டமிட்டு அரங்கேறுகின்றன.

நியாயமான சனநாயக கோரிக்கைகளுக்காக வீதிகளில் மக்கள் இறங்கிப் போராடினால், மிரட்டுவதும் கெடுபிடிகள் செய்து நெருக்குவதுமாக இருக்கும் காவல்துறை, இந்துத்துவ பரிவாரங்களின் ஆட்டங்களுக்கு மட்டும் மவுனமாக அடி பணிந்து நிற்கிறது.

பா.ஜ.க தலைவர்கள், காவல்துறையினரின் வாகனங்களையே பயன்படுத்துவதும், அவர்களை ஏளனமாக பேசுவதும்,குறிப்பாக பெண்களைக் கேலி கிண்டல் செய்வதும் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கிறது.

தமிழகத்தில் அமைக்கப்படும் சிலைகளின் எண்ணிக்கையும், ஆண்டு தோறும் கூடிக் கொண்டே தான் வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் சிலைகளை அமைப்பதில் சில பொருளாதார நலன்களும் பிணைந்தே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பகுதியில், ஒரு பெரும்புள்ளி சில ஆயிரங்கள் செலவு செய்து ஒரு சிலை அமைப்பாரேயானால், அங்கு நடத்தப்படும் வழிபாடுகளுக்காக அப்பகுதி மக்களிடம் பண வசூல் செய்ய முடிகிறது. அப்பணம், போட்ட முதலீட்டை விட, கணிசமான அளவுக்கு வரும் போது, அவர் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் சிலை அமைக்க போட்டி போடுகிறார். அது மட்டுமின்றி, சிலைகள் அமைத்தலில் ஒரு ஆதிக்கப்போட்டியும் இருப்பதையும் கண் கூடாகப் பார்க்க முடியும்.

தொன்னூறுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் ஒரு சமூக ஆதிக்கத்தைப் பறை சாற்றும் நிகழ்வாக உருமாறி விட்டன. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்குபதற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பு, இந்துத்துவ சக்திகளின் ஒவ்வொரு அசைவிலும் குடி கொண்டிருக்கிறது.

விநாயகர் சிலைகள் அகற்றப்பட்ட பல இடங்களில், தற்போது இந்து முன்னணியினரின் கொடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது எதைக் காட்டுகிறது?

சதுர்த்தி விழாக்களின் பலனாக தனது இந்துத்துவ கட்டமைப்பை பெரியார் மண்ணில் பலப்படுத்திக் கொள்ளவே சங்க பரிவாரங்கள் முயலுகின்றன.

இந்தியாவில் குஜராத் தொடங்கி, தமிழகத்தில் கோவையும், மண்டைக்காடும் இன்று நம் கண் முன் நிற்கும் சாட்சிகள். ஆக சங்க பரிவாரங்களின் முதல் நோக்கம், தமிழகத்தில் அமைதி நீடிக்கக் கூடாது..

மத நல்லிணக்கம் சீர் குலைய வேண்டும். அதற்கு ஒரு அரிய வாய்ப்பாகத் தான், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர்.

தமிழக மண்ணில், ஒரு மத வழிபாட்டு நிகழ்வில் காவி அரசியல் புகுவதை, ஜனநாயக சக்திகளான நாம் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. தொடர்ந்து வெகுமக்களிடையே, கடவுள் என்ற பெயரில் அரங்கேறும் காலித் தனங்களை அம்பலப்படுத்தி, காவி அரசியலுக்கெதிரான நமது எதிர்வினைகளைக் கட்டாயம் பதிந்தே ஆக வேண்டும்.

காவி அரசியலை வேரறுப்போம்….சனநாயகம் காப்போம்!.– இளந்தமிழகம் இயக்கம்.

இக்கட்டுரை மக்கள் விடுதலை இதழில் வெளிவந்துள்ளது. மக்கள் விடுதலை இதழாசிரியருக்கு எம் நன்றிகள்.

http://www.visai.in/2014/10/13/vinayagar-sathurthi-oorvalam-and-some-kolukattai/

வினாயகர் ஊர்வலங்கள்.

மசூதிக்கு முன்னால் நடக்கவோ, பாடவோ மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்து மத வெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம். மசூதிகளின் தொழுகைக் காலத்தோடு பிரச்சினை இல்லாமல் நல்லிணக்கத்தோடு இயங்கி வந்த மக்களிடையே – இல்லாத ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி, முசுலீம் எதிர்ப்புக் கலவரம் நடத்துவதே அவர்கள் நோக்கம். அதைப் பல இடங்களில் ஆண்டுதோறும் செய்தும் வருகிறார்கள்.

மசூதிகள் முன்பு மாணவர்கள், தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஊர்வலமாய்ப் போகிறார்கள். ஏன், கோவில் திருவிழாக்கள் கூட இடையூறின்றிச் செல்லுகின்றன. மசூதி அருகே பொதுக் கூட்டங்கள் நடப்பதும், பாங்கு ஓதும் நேரம் ஓரிரு நிமிடம் அமைதி காப்பதும் தமிழகத்தில் இயல்பான காட்சிகள்தான். இதனாலெல்லாம் எங்கும் கலவரம் ஏற்பட்டதில்லை.

1980-களில் தோன்றிய இந்து முன்னணி, மசூதி முன்பு விநாயகர் ஊர்வலத்தை வம்படியாக நடத்திய போதுதான் இக்கலவரங்கள் ஆரம்பித்தன. சரியாகத் தொழுகை நேரத்தில் ஊர்வலம் நடத்துவது, ”துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியைக் கட்டு, அல்லாவுக்குக் குல்லா போட்டு அரேபியாவுக்கு அடிச்சுத் துரத்து, இந்த நாடு இந்து நாடு இல்லேங்கிற துலுக்கன் யாரு” போன்ற ‘இனிய இசை மொழிகளை’க் கூவுவது இவற்றினால்தான் தகராறுகள் ஆரம்பித்துக் கலவரங்களாய் முடிகின்றன.

பம்பாய், ஹைதராபாத், சென்னை மூன்று நகரங்களிலும் ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் சென்று முசுலீம் மக்களைத் தாக்குவதற்கான அவலங்களாய் மாறிவிட்டன. தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் இந்த நோய் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. எனவே மசூதி முன்பு ஊர்வலம் நடத்தும் இந்து மதவெறி அமைப்புக்களை முழுமையாகத் தடை செய்யும் போதுதான் இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்ட முடியும். பெரும்பான்மை இந்துக்களின் ஏகபோகப் பிரதிநிதிகள் என உரிமை கொண்டாடும் சிறு கும்பலான பார்ப்பன – இந்து மதவெறி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முறியடிப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும்.

மசூதியை வைத்து உரிமைக்குரல் எழுப்பும் இவர்கள்தான் அக்கிரகாரம், ஊர், தேரோட்டம் போன்றவற்றில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கிறார்கள். கேவலம், தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து தேரை இழுக்க முடியாது என் கண்டதேவியில் சில ஆண்டுகளாய் நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தேர் இந்த மரமண்டைகளின் யோக்கியதைக்குச் சமீபத்திய சான்று. - Posted by Vinavu

விநாயகனின் ‘மர்ம’ விளையாட்டுக்கள். விநாயகன் வினை தீர்ப்பவன் அல்ல. வினை செய்பவன்.

கிராமங்களில் ‘இந்துக்கள்’ என்ற அடையாளத்தோடு தலித் மக்கள் குடியிருக்கும் ‘சேரி’க்குள்ளும் வரச் சொன்னால், தனக்கு தீண்டாமை ஒட்டிக் கொள்ளும் என்று சிலிர்த்துக் கொண்டு போகும் இந்து கடவுள்கள்…

நகரங்களில் தலித் இளைஞர்களுக்கு ‘இந்துக்கள்’ என்று முக்கியத்துவம் கொடுத்து; இந்துக்கள் அல்லாத இஸ்லாமியர் தெருவழியாக அதுவும் மசூதிகள் வழியாகத்தான் போவேன் என்று பிள்ளையார் அடம் பிடிப்பதின் மர்மம் என்ன?

சென்னை மீனவர்களை இந்துக்கள் என்று அடையாப்படுத்தி, விநாயகரை மீனவர் குடியிருப்புகளுக்கும் மீனவரை விநாயகர் ஊர்வலத்திற்கும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்துச் செல்லும் இந்து அமைப்புகள்;

திருவல்லிக்கேணி அக்ரஹாரத்தைச் சுற்றி, அடிக்கடி பல்லக்கில் உலா வரும் பார்த்தசாரதியையும், மயிலாப்பூர் கோயிலை சூத்திர பக்தர்கள் சும்மா சும்மா சுற்றி சுற்றி வருவதைப் போல், அடிக்கடி அக்ரஹாரத்தைச் சுற்றி வருகிற மயிலை கபாலிஸ்வரனையும்,மிக அருகில் இருக்கும் மீனவர் குப்பத்திற்குள் வீதி உலா அழைத்துச் செல்லாமல் இருப்பதின் மர்மம் என்ன?

2004 டிசம்பர் 26 அன்று சென்னை மண்ணின் மைந்தர்களான மீனவர்களை பலி கொண்டது சுனாமி.

எஞ்சியவர்கள் உயிர் தப்ப அருகிலிருந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலிஸ்வரர் கோயில்களை நாடி ஓடினார்கள்;
ஆனால் அந்த பிரம்மாண்ட இந்துக் கோயில் கதவுகள் மீனவ ‘இந்துக்களுக்கு’ திறந்து தங்க இடம் தந்தால் அசுத்தம் செய்து விடுவார்கள் ‘தீட்டாகி’ விடும் என்று மூடியே இருந்தது.

கோயில்களில் விநாயகர் உட்பட சமஸ்கிருத மந்திரங்கள் சொல்லி வணங்கும் கடவுள்களுக்கு, வழக்கமாக மிருதங்கம், கடம், வீணை, புல்லாங்குழல் போனறவைதான் இசைக்கப்படும்; வீதி உலா புறப்படும்போது நாதஸ்வரம், தவில் கொண்டு தான் வாசிப்பார்கள். ஆனால் இப்போது விநாயகர் நகர் உலா புறப்படும்போது ‘பறை’ அடித்து கொண்டாடுவதின் மர்மம் என்ன?

தாழ்த்தப்பட்ட இந்துக்களின் குடியிருப்புகளின் வழியாக செல்ல மறுக்கிற இந்துக் கடவுள்களின் ஊர்வலம், இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் வழிபாட்டுத் தளங்களின் வழியாக விநாயகனின் ஊர்வலம் கட்டாயம் சென்றே ஆக வேண்டும் என்று இந்துவெறியர்கள் அடம்பிடிப்பதின் உள்நோக்கம் கலவரத்தை மனதில் கொண்டே.

விநாயகன் வினை தீர்ப்பவன் அல்ல. வினை செய்பவன். - வே.மதிமாறன்

http://mathimaran.wordpress.com/2014/09/07/ganesha-games-873/

முஸ்லிம்கள் Vs வினாயகர் ஊர்வலங்கள்.

'சாமான்யனின் தெய்வமாக' ஆலமர, வேப்பமர நிழலிலும் மற்றும் ஆத்தங்கரைகளிலும் வீற்றிருக்கும் 'புள்ளையாரை' முன்வைத்து முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில் 1985ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்துத்துவ வெறிக்கும்பல் நடத்தும் வினாயகர் சதுர்த்தி என்றாலே கலவரமும் வன்முறையும்தான் நினைவுக்கு வந்து திண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு - தங்களின் இருப்பையும் இந்திய முஸ்லிம்களின் மீது வெறுப்பையும் காட்டுவதையே பிழைப்பாகக் கொண்ட மதவெறியர்களின் கையில் அப்பாவி வினாயகரும் 'துருப்பு சீட்டாக' சிக்கிக் கொண்டார்.

முஸ்லிம்களுக்கு எதிரான பகையை வளர்ப்பதற்கான எந்த வாய்ப்பையும் தவற விடாத ஹிந்துத்வ சக்திகள், கோட்ஸே என்ற சித்பவன பிராமனனால் மஹாத்மா காந்தி, படுகொலை செய்யப்பட்டபோது அதைத் திரித்து, "ஒரு முஸ்லிம்தான் காந்தியை படுகொலை செய்தான்" என்று வதந்தி பரப்பினார்கள்.

அந்தப் பழக்கம் இன்றும் தொடர்ந்து தென்காசியில், தங்களது சொந்த இந்து முன்னணி அலுவலகத்தில் 'வெடிகுண்டு' வைத்துவிட்டுப் பழியை அப்பாவி முஸ்லிம்கள் தலையில் போட்டுக் கலவரம் செய்ய முயன்று - இறுதியில் போலீசில் 'வகையாக சிக்கி' மூக்கை உடைத்துக் கொண்டது.

'இஸ்லாமியர்கள் தங்களின் தெருவழியாக இந்துக் கடவுளர்களை தூக்கிச் செல்ல அனுமதிப்பதில்லை என்றும் "முஸ்லிம்களின் வசிப்பிடங்களின் வழியாக பன்றி போகலாம், கழுதை போகலாம், நாய் போகலாம் ஆனால் 'புள்ளையர் சிலை' போகக்கூடாதா?" என்று பொது மக்களை உசுப்பேத்தி விட்டு, வழக்கமாகச் செல்லும் வழியை விட்டுவிட்டு முஸ்லிம்கள் வசிப்பிடம் வழியாகத்தான் புள்ளையாரைத் தூக்கிச் செல்லவேண்டும் என்று மக்களைத் தூண்டி வருகிறார்கள். அந்தப் பொய்களை கேட்கிற எவருக்கும் இஸ்லாமியர்கள் வினாயகரை எதிர்க்கிறார்களே என்றே எண்ணத் தோன்றும்.

முஸ்லிம்களின் வசிப்பிடங்கள் வழியே பன்றிகள் போகும்போது, "பாபரின் வாரிசுகளே! பாகிஸ்தனுக்கு திரும்பி போங்கள்" என்று உறுமுவது கிடையாது. நாய்கள் போகும்போது, "துலுக்கனை வெட்டு; துலுக்கச்சியக் கட்டு" என்று குரைப்பது கிடையாது.

கழுதைகள் போகும்போது, "பத்து பைசா முறுக்கு; பள்ளிவாசலை நொறுக்கு" என்று கனைப்பது கிடையாது.

ஆனால் 'பக்த கோடிகளாக' வேஷமிட்டு, 'சோம பானம்' 'சுரா பானம்' அருந்தி, சுய நினைவில்லாமல் கூலிக்கு மாரடிக்கிற 'கேடிகள்' போடுகிற இஸ்லாமிய எதிர்ப்பு கோஷங்கள்தாம் முஸ்லிம்களைத் தங்களது வசிப்பிடங்களின் வழியாக 'வினாயகர் ஊர்வலம்' செல்வதை எதிர்க்கத் தூண்டுகிறது.

இஸ்லாமியர்களின் எதிர்ப்பு வினாயகருக்கோ ஹிந்து சகோதரர்களுக்கோ எதிரானது அல்ல.

'வினாயகர் ஊர்வலம்' என்ற போர்வையில் கலவரம் விளைவித்து, ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைத்து, முஸ்லிம்களின் சொத்துகளை சூறையாடத் திட்டம் போடும் ஹிந்துத்வ மதவெறி கும்பலுக்கு மட்டும் எதிரானது என்பதை மாற்றுமதச் சகோதரர்கள் நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், இதையும் வழக்கம்போல் திசை திருப்பி பொதுமக்களிடம் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வை வளர்கிறார்கள் . - ஆக்கம் : பிறைநதிபுரத்தான்.

வினாயகர் சிலைகளைக் கரைக்க ஊர்வலமாகச் செல்பவர்கள் எவரும் மந்திரங்கள் சொல்லுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று தூக்கி செல்கிறவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மந்திரமே தெரியாது; அதற்குக் காரணம் உயர்சாதிக்கு மட்டும் சொல்வதற்குச் சொந்தமான மந்திரத்தைப் பிறர் காதால் கேட்க கூடாது; நாவால் உச்சரிக்க கூடாது, மீறினால் ‘ஈயம் காய்ச்சி ஊற்றப்படும்’ என்ற 'மனுதர்மத்தின்' அன்பான மிரட்டல்தான்.

ஹிந்து தர்மப்படி 'சூத்திரன்' 'மிலேச்சன்' என்ற முத்திரைகளோடு கோவிலுக்குள் நுழைய அருகதையற்றவர்களின் கைகளிள் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக 'சிலையை'த் திணிக்கிறது ஹிந்துத்வா.

வேதங்களால், தீண்டத்தகாதவர்களாக வரையறை செய்யப்படவர்களுக்குத் தற்காலிகமாக 'ஹிந்து' என்று முத்திரை குத்தி, முஸ்லிம்களுக்கெதிராகக் களமிறக்குகிறது ஹிந்துத்வா. - ஆக்கம் : பிறைநதிபுரத்தான்.

Source: http://pirainathi-puram.blogspot.sg/2008/09/vs.htmlஇங்கே சொடுக்கி >>> விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு. திராவிட கழகத்தின் அறிக்கை. படிக்கவும்.


No comments:

Post a Comment