Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

கீதையை ஒரு முட்டாளின் உளறல் - அம்பேத்கர். கீதைபற்றி விவேகானந்தர்

கீதையை ஒரு முட்டாளின் உளறல் என்று அண்ணல் அம்பேத்கர் சென்னைக்கு வந்தபோதுதான் கூறினார்.

புத்த மார்க்கம் நாட்டில் வலிவுற்ற சூழலில் அதனைப் புரட்டி எறிய சூதாகத் திணிக்கப்பட்ட அவதாரம்தான் கிருஷ்ணனும், அவன் அருளியதாகக் கூறப்படும் கீதையுமாகும்.

மகாபாரத யுத்தத்தில் அர்ஜுனனுக்குப் பகவான் காதோடு காதாக ஓதியதுதான் இந்தக் கீதையாம். ஒரு யுத்த களத்தில் இவ்வளவு இதோபதேசங்களைச் சொல்ல முடியுமா? கிருஷ்ணன் சொல்லி முடிக்கும்வரை எதிரிப் படைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? என்பதெல்லாம் பொருள் நிறைந்த வினாவாகும்.

கீதையைப் படிப்பதைவிட கால் பந்து விளையாடக் கற்றுக்கொள்வது மேல் என்றார் இந்துத்துவாவாதிகள் தூக்கிப் பிடிக்கும் விவேகானந்தர்.

" விடுதலை” தலையங்கம் 17-3-2010
http://thamizhoviya.blogspot.com/2010/03/blog-post_8555.html

கீதைபற்றி விவேகானந்தர்.

கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கதையைச் சரிவர புரிந்துகொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக அதாவது வேத வியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா? இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா?

மூன்றாவதாக கீதையில் கூறப்படுவதுபோல குருக்ஷேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?

நான்காவதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா? என்பன கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள்.

எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி _ குருக்ஷேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜுனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டா என்ற பிரச்சனை எழுகிறது.

அர்ஜுனன், ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர, இவர்கள் இருந்தனர் என்றோ, குரு க்ஷேத்திர யுத்தம் செய்தனர் என்றோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.--- விவேகானந்தர் - கீதையைப்பற்றிக் கருத்துக்கள் என்ற நூலில்.

(ஆதாரம்: ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூலில் - பக்கம் 116, 117)

http://thamizhoviya.blogspot.com/2010/11/blog-post_07.html

குறளும் - கீதையும்!

திருக்குறளில் ஜாதி, மத வேறுபாடுகள் இல்லை. ஆனால், பகவத் கீதையில் ஜாதி அமைப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பகவத் கீதையைவிட உயர்ந்தது திருக்குறள்.

பொதுவாக திருக்குறளை எந்தப் பார்ப்பனரும் ஏற்றுக்கொள்வதில்லை. பார்ப்பனர்கள் இவ்வாறு திருக்குறள்மீது வெறுப்புக் கொள்வதற்கே காரணம், அது பிறவிப் பேதத்தை எதிர்ப்பதுதான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கருத்தை வலியுறுத்துவதுதான்.

பார்ப்பனர்கள் பிறவியிலேயே உயர்ந்தவர்கள் பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள், சூத்திரர்கள் பிரம்மாவின் பாதத்தில் இருந்து பிறந்தவர்கள் இழிந்தவர்கள் என்ற இந்து மதக் கூற்றுக்கு மனுதர்மம் வேதங்களின் புளுகுக்கு கீதையின் சரக்குக்கு திருக்குறள் மரண அடி கொடுக்கிறது என்கிறபோது குறளை எப்படி ஏற்பார்கள் பார்ப்பனர்கள்?

நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ணதர்ம உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது. (கீதை, அத்தியாயம் 4, சுலோகம் 13).

ஜாதி தருமம் என்பது தன்னால் உண்டாக்கப்பட்டது என்றும், ஜாதியை உற்பத்தி செய்த பகவான் கிருஷ்ணனாலேயே அதனை மாற்றியமைக்க முடியாது என்றும் கூறும் கீதை எங்கே?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (திருக்குறள் 972)

பிறப்பு என்பது எல்லா மக்களைப் பொறுத்தும் ஒன்றுதான்; அதில் ஏற்றத் தாழ்வு கிடையாது என்று கூறும் திருக்குறள் எங்கே?

வருண தன்மையில் பிராமணன், சூத்திரன் என்ற பேதத்தைக் கற்பிப்பதோடு கீதை நின்றுவிடவில்லை; ஆண் பிள்ளைகளையும் ஈன்று புறந்தரும் பெண்களை பாவ யோனியில் பிறந்தவர்கள் என்றும் கேவலப்படுத்துகிறது.

அதனால்தான் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கீதை என்பது ஒரு முட்டாளின் உளறல் என்று முகத்தில் அடித்ததுபோல விமர்சித்தார்.

எந்த வகையில் பார்த்தாலும் குறள், குன்றின்மேல் விளக்குப் போன்ற உயர்ந்த சீலத்தை உடையதாகும். கீதையோ கீழ்மைத்தன்மை கொண்டதாகும்.

- "விடுதலை"தலையங்கம் 12-8-2009.

கீதையிலே கண்ணன் சொல்லியபடி என்று ஏதாவது இரண்டு வார்த்தையைச் சொன்னால் உடனே இவரை ஓகோ, இவர் மெத்தப் படித்த மேதாவி போலிருக்கிறது இவர்தான் நமது கலாச்சாரத்தை கரைத்துக்குடித்தவர் என்றெல்லாம் நினைத்துக் கொள்வார்கள்.

ஆனால் தெளிவாக ஒன்றைச் சொல்லுங்கள்.

இந்த கீதையைப் பற்றிப் பேசக்கூடிய யாராக இருந்தாலும், அதைப் பாராட்டிச் சொல்லக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் முழுமையாக 700 சுலோகங்கள் இருக்கிறதே, இவை அத்தனையையும் படித்து முடித்தவர்களா என்று கேளுங்கள்.

நாணயமாக பதில் சொன்னால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் அதை அவர்கள் சொல்ல மாட்டார்கள். அவர்கள் அதற்குப் பதிலாக எல்லாம் தெரிந்ததைப் போல சொல்லுவார்கள்.No comments:

Post a Comment