Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

எனக்கு மாட்டிறைச்சி கொடுங்கள் - விவேகானந்தர் .

பசு புனிதம் என்பது வடிகட்டிய பொய்.
சங்பரிவாரங்கள் போற்றும் இந்துமதத் துறவி விவேகானந்தர் ‘இராமன்-சீதை’ மாட்டிறைச்சியை விரும்பி உண்டனர்.  மாட்டிறைச்சி உணவை நிறுத்தியதால் தான் இந்த நாடு ஆண்மை இழந்து போனது என்றும் கூறுகிறார்.
பா.ஜ.க.வின் பசு வதைத் தடைச் சட்டங்களால், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25, பார்ப்பனர்களுக்கு வழங்கியிருக்கும் மாடு வெட்டும் உரிமையைப் பறிக்க முடியாது என்பதே உண்மை. 
இந்தச் சட்டத்தினால், கறிக்கடை பாயையும், கறி தின்னும் சூத்திர, தலித், பழங்குடி மக்களையும் தான் கைது செய்ய முடியும்.
மாட்டிறைச்சியை முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ்.-ன் நோக்கம். எனவேதான் அம்மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் நோக்கத்துடன் இச்சட்டம் இன்னொரு பொடா சட்டமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

வேள்விகளில் பசுமாடுகளைப் பலியிடுவதும் சாப்பிடுவதும் சாத்திரப்படியும் சம்பிரதாயப்படியும் அவசியமானது என்று வலியுறுத்தி, செத்துப்போன சங்கராச்சாரி வழங்கியுள்ள அருளுரைகளை 1993-ல் ஆனந்தவிகடன் நூல் தொகுப்பாகவே வெளியிட்டிருக்கிறது. எனவே, கோமாதாவைக் கொல்வது இந்து மதத்தின் வழிபாட்டுரிமை.

பா.ஜ.க.வின் பசு வதைத் தடைச் சட்டங்களால், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25, பார்ப்பனர்களுக்கு வழங்கியிருக்கும் மாடு வெட்டும் உரிமையைப் பறிக்க முடியாது என்பதே உண்மை. இந்தச் சட்டத்தினால், கறிக்கடை பாயையும், கறி தின்னும் சூத்திர, தலித், பழங்குடி மக்களையும் தான் கைது செய்ய முடியும்.

மாட்டிறைச்சியை முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ்.-ன் நோக்கம். எனவேதான் அம்மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் நோக்கத்துடன் இச்சட்டம் இன்னொரு பொடா சட்டமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பசு புனிதம் என்பது வடிகட்டிய பொய். இது குறித்த கருத்து பார்ப்பன மதத்திலேயே சுமார் 8-ம் நூற்றாண்டு வாக்கில் தான் தோன்றியிருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஆய்வுரித்துத் தின்னும் புலையர் என்று கூறித் தீண்டாமையை நிலைநாட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இந்தக் கருத்து, பிற்காலத்தில் விடுதலைப் போராட்டத்தை பார்ப்பன இந்து தேசியமாகத் திரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.

அந்த வகையில் திலகர் அறிமுகப்படுத்திய விநாயகர் ஊர்வலத்தைப் போலவே இதுவும் இந்துத்துவத்தின் இன்னொரு அரசியல் துருப்புச்சீட்டு. அவ்வளவே.

கலவரத்தைத் தூண்டும் கருவியாக அயோத்திப் பிரச்சினை அரங்கிற்கு வருவதற்கு முன்பு வரையில் இராமன் இருந்த இடத்தில், மாடுதான் இருந்து வந்தது. கோயில் வாசலில் கோமாதாவை வெட்டி விட்டார்கள் முஸ்லிம்கள் என்ற வதந்தியைப் பரப்பித்தான், கலவரம் நடத்தி அப்பாவி முஸ்லிம்களை நூற்றுக்கணக்கில் வெட்டியிருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். காலிகள்.

இசுலாமியர் ஆட்சிக் காலத்துக்குப் பின்னர்தான் மாட்டுக்கறி தின்னும் பழக்கமே இந்துக்கள் மத்தியில் பரவியது என்பது சங்கப் பரிவாரம் பரப்பி வரும் முக்கியமான கட்டுக்கதை.

 கிறித்தவமும் இசுலாமும் தோன்றுவதற்கு 1500 ஆண்டுகள் முன்னதாகவே, மாடுகளை யாகத்தில் பலியிடுவதும் புரோகிதப் பார்ப்பனர்கள் அவற்றை உண்டு கொழுப்பதும் எல்லை மீறிய அளவில் நடந்துள்ளன.

ரிக் வேதத்தில் தொடங்கி இராமாயணம் வரையிலான பலவற்றிலும் பார்ப்பனர்கள் பசு மாமிசம் தின்றது பலவிதமாக விளக்கிக் கூறப்பட்டிருக்கிறது. இதனை அம்பேத்கர், டி.டி.கோசாம்பி, டி.என்.ஜா முதலான ஆவாளர்கள் ஆதாரங்களுடன் அம்பலமாக்கியிருக்கின்றனர். விவேகானந்தரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மாட்டுக்கறி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் குஜராத். மாட்டுக்கறி தடை செய்யப்பட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலோ பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மாட்டுக்கறிக்கு நட்சத்திர விடுதிகளில் தடை இல்லையாம். ஏனென்றால், அது இறக்குமதி செய்யப்பட்ட கோமாமிசமாம். ஏற்றுமதிக்கும் தடை இல்லை, இறக்குமதிக்கும் தடை இல்லை. உள்நாட்டு உபயோகத்துக்குத்தான் தடை!

எந்த மதமும் கோழிக்கு தடை சொல்லலியா ?அப்புறம் மதத்தை நம்ம ஆட்கள் தடை செய்து விடுவார்கள் :-)

மாடு புனிதம், மாடு பேண்ட சாணி புனிதம், மாடு மோண்ட மூத்திரம் புனிதம் என்று ” இந்து புனிதங்களுக்கு” விதவிதமான விளக்கங்களை காவி கும்பல் வழங்கி வந்த நிலையில் தற்போது புதிய விளக்கங்களை முன்வைக்கத் துவங்கியுள்ளனர்.

அதாவது மாடு மட்டுமல்ல, மாட்டை ஒத்த எருமை, ஆடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளும் புனிதம் என்கிறார்கள்
.
இசுலாமியர்களின் வேலையே மாட்டைக் கொன்று தின்பது தான் என்கிற ரீதியில் இந்துத்துவ கும்பல் அடித்து விடுவது முதலில் அடிப்படையற்றதாகும்.

ஹிந்துத்வா வியாதிகள் , இசுலாமியர்கள் பன்றிக்கறி சாப்பிடுவதில்லை என்பதைப் பற்றி எதுவும் சொல்லாமல் கமுக்கமாக இருக்கிறார்கள் மாறாக மாட்டுக்கறி சாப்பிடுவதாக தான் கொலைவெறி கூப்பாடு போடுகிறார்கள்.

பத்து அவதாரத்தில் ஒன்றான பன்னியை அவர்கள் தின்னாமல் இருப்பதை ஹிந்துத்வாவியாதிகள் கவனிப்பாராக . நீங்களும் தான்.

சங்பரிவாரங்கள் போற்றும் இந்துமதத் துறவி விவேகானந்தர், மாட்டிறைச்சிப் பற்றிய தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். ‘இராமன்-சீதை’ மாட்டிறைச்சியை விரும்பி உண்டனர் என்று கூறும் விவேகானந்தர், மாட்டிறைச்சி உணவை நிறுத்தியதால் தான், இந்த நாடு ஆண்மை இழந்து போனது என்றும் கூறுகிறார்.

“நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்க வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல.” (He is not a good Hindu whodoes not eat beef) - (தொகுதி-3 - அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்பில்’ பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை).

- இப்படி ஏராளமான சான்றுகளை அடுக்கிக் காட்ட முடியும். இவை எல்லாவற்றையும் விட விவேகானந்தரே மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

அமெரிக்காவில், ‘உலக மதங்களின் நாடாளு மன்றம்’ என்ற அமைப்பு செயல்பட்டது (1893). அந்த அமைப்பில், விவேகானந்தர் ஆற்றிய உரையைத்தான் சங்பரிவாரங்கள் சிலாகித்துப் பெருமை பேசுகின்றன.

இந்த நாடாளுமன்றத்தின் தலைவராக இருந்தவர் டாக்டர் ஜான் ஹென்றி பாரோஸ்எனும் பாதிரியார். அவர் எழுதிய ‘ஆசியாவில் கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்பு’ என்ற நூலில், கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“மதங்களுக்கான நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு முடிந்த பிறகு, நான் விவேகானந்தருடன் உணவு விடுதிக்கு சாப்பிடச் சென்றேன்; அந்த உணவு விடுதி, நிகழ்ச்சி நடந்த ‘ஆர்ட் இன்ஸ்டிடியூட்’ என்ற நிறுவனத்தின் தரைதளத்தில் இருந்தது. ‘என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்டேன். ‘எனக்கு மாட்டிறைச்சி கொடுங்கள்’ என்று விவேகானந்தர் கேட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பசுவின் புத்திரர்கள் விவேகானந்தர்.

ஒருமுறை விவேகானந்தரிடம் பசுக்களைப் பரிபாலிக்கும் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சாரகர் வந்து பசுக்கள் பாதுகாப்புப் பணிக்கு நன்கொடை கொடுக்குமாறு கேட்டார். அப்பொழுது அந்தப் பிரச்சாரகரைப் பார்த்து உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன? என்று கேட்டார் விவேகானந்தர்.

நமது நாட்டில் உள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்கள், வலிவிழந்தனவும், கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்தியசாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று பதில் சொன்னார்.

மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் - இவர்களுக்காக உங்கள் சங்கம் என்ன செய்தது? என்ற கேள்வியை எழுப்பினார் விவேகானந்தர்.

பஞ்சம் முதலிய துன்பம் வரும்போது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத் தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது. பஞ்சங்கள் என்பவை மக்களுடைய பாவ கருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே!

பசுத் தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்கடைக்காரர்களின் கையில் அகப்பட்டு இறக்கின்றன என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே என்று மடக்கினார் விவேகானந்தர்.

ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பசு நம் அன்னை என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே என்றார் பிரச்சாரகர்.

அப்பொழுது நறுக்கென்று ஒன்று சொன்னார் விவேகானந்தர் “ஆம். பசு நம் அன்னை என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்? “ என்று சொன்னார்.

அவர் மட்டுமல்ல, சேரன்மாதோவி குருகுலத்தில், ‘பிராமணர்’களுக்கு மட்டும் தனி இடத்தில் சாப்பாடு போட்டு, பெரியாரின் எதிர்ப்பைச் சந்தித்த வ.வே.சு. அய்யர், இலண்டனுக்கு படிக்கச் சென்றபோது, பொருளாதார சிக்கனம் கருதி, ‘மாட்டிறைச்சி’யை சாப்பிட்டதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

வைதீகத்தில் ஊறித் திளைத்தப் பார்ப்பனர்கள் கூட, தங்களின் நலன் என்று வரும்போது எந்த சாஸ்திர மீறலுக்கும் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், உழைக்கும் மக்களின் உணவை, அவர்களின் தொழிலை தடைப் படுத்துகிறார்கள்.

19ம் நூற்றாண்டில் கூட சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. இதேபோல், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் “உடல் நிலை சரியில்லாத போது மருத்துவர் மாட்டிறைச்சி சூப்பை பரிந்துரைத்தால் அதை சாப்பிடுவதற்கு தயங்கவோ அதைப் பற்றி கேள்வி எழுப்பவோ செய்யாத” ஆச்சார இந்துக்களின் இரட்டை நிலைப்பாட்டை கண்டித்து மகாத்மா காந்தி பேசியிருக்கிறார்.

ஜாதி கவுரவம் என்ற பெயரில், வேறு ஜாதி இளைஞரை காதலித்த அல்லது திருமணம் செய்த “குற்றத்துக்காக” பெற்ற மகளையே வெட்டிப் பலியிடும் ‘மனித வதைகள்’இங்கே நடக்கின்றன. இதைச் செய்பவர்களும் இந்துக்கள்தான்! இதைத் தட்டிக் கேட்பதற்கோ, தடைச் சட்டம் கொண்டு வருவதற்கோ குரல் கொடுக்காத ‘பார்ப்பன பரிவாரங்கள்’, பசுமாடுகளை வெட்டக் கூடாது; சாப்பிடக் கூடாது; விற்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வருகிறார்கள். இந்த அவமானகரமான இழிவுகள், இந்தப் ‘புண்ணிய’ பூமிகளில் மட்டுமே நடக்கும்.

நான் இந்து! மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன்! இனியும் சாப்பிடுவேன்! – கட்ஜு

புதுடெல்லி: மாட்டிறைச்சியை சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் பாகிஸ்தானுக்கோ இதர நாடுகளுக்கோ செல்லலாம் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு பதிலடியாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு (பிராமணர்) கருத்து தெரிவித்துள்ளார்.

தனது ஃபேஸ்புக் போஸ்டில் இதுக்குறித்து கட்ஜு கூறியிருப்பது:
படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.
உச்சநீதி மன்றத்தின் முன்னால் தலைமை நீதிபதி மார்கண்டேய் கட்ஜூ 
தன் முகநூல் பக்கத்தில் பதிந்தது.

நான் ஒரு இந்து.மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன்.மீண்டும் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்.மாட்டிறைச்சியை சாப்பிடுவதில் என்ன தவறு உள்ளது? உலகில் 90 சதவீதம் பேரும் மாட்டிறைச்சியை சாப்பிடுகின்றனர். அவர்களெல்லாம் பாவிகளா? பசு நமது புனித மாதா என்பதை நான் நம்பவில்லை. ஒரு மிருகம் எவ்வாறு மனிதனின் மாதாவாக(தாயாக) ஆக முடியும்? ஆகையால்தான் 90 சதவீத இந்தியர்களும் முட்டாள்கள் என்று கூறப்படுகிறது. அதில் முக்தார் அப்பாஸ் நக்வியும் அடங்குவார் என்று கட்ஜு கூறியுள்ளார்.

********
********

1 comment:

 1. முஹம்மத் அலி ஜின்னா said...

  “நான் ஒரு ப்ராஹ்மின். மாட்டுக்கறியை விரும்பி உண்கிறேன். நாகலாந்து, மிசோரத்திற்கு வந்து பாருங்கள், பிறகு நடப்பது தெரியும்” என்று பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு ப்ராஹ்மணர் மார்கண்டேய கட்ஜூ சவால் விடுத்துள்ளார்.

  கடந்த மே மாதம் 27ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமித் ஷா, “குஜராத்திற்கு வந்து மாட்டுக்கறி சாப்பிடுங்கள். அங்கு அது தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு மார்கண்டேய கட்ஜூ சாப்பிட்டால், அப்புறம் என்ன நடக்கும் என்று அவர்க்கு தெரியும்” என்று கூறியிருந்தார்.

  இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ப்ராஹ்மணர் மார்கண்டேய கட்ஜூ, ”அமித் ஷா மாட்டிறைச்சி தடை செய்யப்பட வேண்டும் என்று நாகாலாந்து அல்லது மிசோரம் ஒரு பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாக சொல்ல முடியுமா? அப்புறம் என்ன நடக்கும் என்று தெரியும்.

  அவர் ஒரு தைரியமான மனிதன் என்றால், எனக்கு மிரட்டல் கொடுப்பதற்கு பதிலாக, அவரை இந்த பரிசோதனை முயற்சியை செய்யட்டும்” என்று பதில் சவால் விடுத்துள்ளார்.

  கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ’மாட்டு இறைச்சி இல்லாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம்’ என்று கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்திருந்த மார்கண்டேய கட்ஜு, “நான் ஒரு இந்து ப்ராஹ்மின். ஆனாலும், நான் மாட்டுக்கறி சாப்பிடுகிறேன். இனிமேலும் சாப்பிடுவேன்.

  மாட்டுக்கறி சாப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது?. உலகத்தில் 90% பேர் மாட்டு இறைச்சி சாப்பிடுகின்றனர். அவர்கள் எல்லோரும் பாவம் செய்தவர்களா? மாடு புனிதமானதாகவோ, நமது தாயாகவோ இருக்க முடியும் என்பதை நான் மறுக்கிறேன்.

  ஒரு விலங்கு எப்படி மனிதர்களுக்கு தாயாக இருக்க முடியும்? இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உட்பட, 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள்தான் ” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  ReplyDelete