Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

உயர் சாதிக்கு மாறவிரும்புகிறீர்களா? மிக மிக எளிய வழி...

உயர் சாதிக்கு மாறவிரும்புகிறீர்களா? மிக மிக எளிய வழி... இந்து, கிறுஸ்தவ மதம் மாறலாம், மூஸ்ஸீமாக மாறலாம், .... மதம் மாறலாம் ... சாதி மாற முடியுமா? மாறலாம் அதுவும் மிக மிக எளிதாக.

எச்சில் இலைகளை வரிசையாகக் கீழே விரித்து பாய் மாதிரி அடுக்கி அவற்றின்மீது தலித் மக்கள் புரண்டுகொண்டே போய் சாமி தரிசனம் செய்தால், அவர்களுக்கு அடுத்த ஜென்மத்தில் சொர்க்கம் கிடைக்கும், சிலர் அடுத்த ஜென்மத்தில் மேல்சாதிக்காரர்களாக பிறக்க வாய்ப்பு உண்டு என்றும் அளந்துவிட இதை நம்பி நூற்றுக்கணக்கான பேர் அந்த செயலில் ஈடுபடுவது நெஞ்சில் ரத்தம் வடிக்கும் காட்சியாகும்.
சாதிய ஒழிக்கத்தான் முடியாது, எல்லோரும் உயர்சாதியா மாறிட்ட எந்த பிரச்சனையும் வரதே. உயர் சாதிக்கு மாறி என்ன செய்யப்போறோம்?... சாதி மாறவேண்டிய அவசியம் என்ன? இப்போ யாரு சார் சாதி பாக்குறா? அதும் மிகப்பெரிய டவுன்ல்ல யாரும் சாதி பாக்குறதில்லயே என்று நீங்கள் நினைக்கலாம்.

அது உண்மையில்லை ... ஒரு புதிய நபரை சந்தித்து கைகுலுக்குகிற நேரத்தில் இவர் என்ன சாதியாக இருப்பார் என்கிற குரூரபுத்தி நாம் எல்லோருக்கும் இருக்கிறது, அவரது பெயரை கேட்டு, அல்லது அவரது ஊர்,அல்லது எந்த ஏரியா என்று பல்வேறு கேள்விகள் கேட்டு அவரது சாதியை கண்டுபிடிக்கும் முயற்சி ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் மறைத்திருக்கிற சாதி மிருகம் செய்து கொண்டுதானிக்கிறது.

சாதி மாறுகிற மிக எளிய வழியை கண்டுபிடித்திருப்பது கர்நாடகாவில் தான். இந்துக்களே ஒன்று சேருங்கள்.. என்று கோஷம் போடுகிற ஆர்.எஸ்.எஸ்,பாரதிய ஜனதா கூடாரத்தின் கீழ் எல்லா கோயில்களிலும் சாதிவாரியாக சாப்பிடும் இடம் வைத்திருக்கிறார்கள். இதில் மிகவும் கொடுமையான மற்றும் கேவலமான விஷயம் என்னவெனில், மேல்சாதிக்காரர்கள் சாப்பிட்டு விட்டுப் போட்ட எச்சில் இலைகளை வரிசையாகக் கீழே விரித்து பாய் மாதிரி அடுக்கி வைக்கிறார்கள்.

அவற்றின்மீது தலித் மக்கள் புரண்டுகொண்டே போய் சாமி தரிசனம் செய்தால், அவர்களுக்கு அடுத்த ஜென்மத்தில் சொர்க்கம் கிடைக்கும் என்றும், சிலர் அடுத்த ஜென்மத்தில் மேல்சாதிக்காரர்களாக பிறக்க வாய்ப்பு உண்டு என்றும் அளந்துவிடப் பட்டிருக்கிறது. இதை நம்பி நூற்றுக்கணக் கான பேர் அந்த செயலில் ஈடுபடுவது நெஞ் சில் ரத்தம் வடிக்கும் காட்சியாகும்.

சாதி மாறுவதற்கு எப்படியொரு மிக மிக எளிய வழி பார்த்தீர்களா?... - -செல்வன்

மூடநம்பிக்கையின் முடை நாற்றம் பாரீர் எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு விழும் விழா.

கரூர் அருகே நெரூரில் 350 ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்தவர் சதாசிவ பிரம்மேந்திராள் இவர் நெரூரில் உயிருடன் ஜீவசமாதி அடைந்தாராம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் பக்தர்கள் எச்சில் இலையில் உருண்டு எழும் திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு 98ஆவது ஆராதனை விழாவை முன்னிட்டு சதாசிவ பிரம்மேந்திராள் படத்தை கோவிலில் இருந்து அருகில் உள்ள அக்ரஹாரத்தில் அமைக்கப்பட்ட பந்தலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மணலில் இலைகள் போடப்பட்டு பார்ப்பனர்கள், குடும்பத்தினர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என அனைவரும் அன்னதானம் உண்டபின் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் அரைகுறை ஆடைகளுடன் படுத்து உருளும் காட்சியைப் பார்த்த மக்களில் சிலர் முகம் சுழித்தனர். இந்த வருடம் ஆண்கள் 38, பெண்கள் 20 மொத்தம் 58பேர் உருண்டு எழுந்தனர். பின்பு அந்த எச்சில் இலைகளை எடுக்க நாய்கள் எச்சில் இலை சாப்பாட்டுக்கு சண்டை போடுவதைப் போல ஆண்களும் பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு எடுத்தனர்.

சதாசிவ பிரம்மேந்திராள் சேவா டிரஸ்ட், சபா உறுப்பினர்கள் ஹச்.முரளி என்பவர் செய்தியாளரிடம் கூறும்போது:-அன்னதான தினத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் ஏதாவது ஒரு இலையில் உருவத்தில் வந்து உண்ணுவார் என்றும் அனைவரும் சாப்பிட்ட பிறகு அந்த இலையில் படுத்து உருளும் போது நினைத்த காரியம் நிறைவேறும் என்றும் திருமண தடை, குடும்ப கஷ்டம், குழந்தை பேறு இல்லாமை நீங்கும் என்றும் இந்த விழாவிற்கு பெங்களுரு, மும்பை, டில்லி, கல்கத்தா போன்ற அண்டை மாநிலத்தில் இருந்து எல்லோரும் வந்து கலந்து கொண்டது சிறப்பு என்று கூறினாராம். பக்தி என்ற போதையில் நாயைவிட மனிதன் கேவலமாக நடக்கலாமா?

http://www.viduthalai.in/page-7/33361.html

No comments:

Post a Comment