Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

சிவன் ஒரு காமாந்தக்காரன். சிவன் ஒரு முட்டாள்!

கடவுள்களை சிருஷ்டித்து, அவர்களை அயோக்கியர்களாக, மடையர்களாகக் கற்பித்து, சாஸ்திரபுராணம், இதிகாசங்கள் ஏற்படுத்தியவர்கள்  அயோக்கியர்களாக இருந்திருக்க வேண்டுமென்றும். ஒரு முழுமுதற்கடவுள் என்று கூறப் பெறும் சிவன் தன் மனைவியின் பாதங்களிலே நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கினான் என்று கூறுவது எவ்வளவு முட்டாள்தனம்.
பார்வதி தன்னிடம் கொண்ட ஊடலைத் தணிக்கச் சிவன், பார்வதியின் காலில் வீழ்ந்து வணங்கிய போது, சிவன் மட்டுமன்றி அவன் தலையிலே இருந்த பிறைச் சந்திரனும், கங்கையும் வணங்கியதை எண்ணிப் பார்வதி பெருமிதம் அடைகிறாள்.

சிவனின் தலையில் உள்ள பிறைச்சந்திரன் பார்வதியின் நெற்றிக்குப் பகையாம். நாகப் பாம்பு பார்வதியின் அல்குலுக்குப் பகையாம். இந்தப் பகையுடையவை வணங்குவதிலோ, தன் கணவன் சிவன் வணங்குவதிலோ பார்வதிக்குப் பெருமகிழ்ச்சி இல்லையாம். ஆனால் சிவனின் சடாமுடியில் தங்கியுள்ள கங்கை பார்வதியின் பாதங்களில் வீழ்ந்து வணங்கியதை எண்ணிப் பார்வதி பெருமகிழ்ச்சி கொண்டாளாம். ஏனென்றால் எந்தப் பெண்ணும் தனது சக்களத்தி தன் காலில் வீழ்ந்து வணங்கினால் பெருமகிழ்ச்சி கொள்ளத்தானே செய்வாள். அதுபோலப் பார்வதியும் தன் சக்களத்தியான கங்கை தன் காலில் வீழ்ந்து வணங்கியதை எண்ணி மகிழ்கிறாள். சிவனின் தலை பார்வதியின் பாதங்களில் வீழ்ந்து கிடந்த செய்தியைப் புலவர் சிவப்பிரகாசர் நல்ல  நயந்தோன்ற விளக்கியுள்ளார்.

ஒரு கடவுளை இந்தக்கதிக்கு ஆளாக்கிவிட்டு அக்கடவுளை நம்மையும் வணங்கச் சொல்கிறானே என்று எண்ணி அவனது முட்டாள்தனத்தை நினைத்துப் பரிதாபப்படுவான்.

ஒரு முழுமுதற்கடவுள் என்று கூறப் பெறும் சிவன் தன் மனைவியின் பாதங்களிலே நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கினான் என்று கூறுவது எவ்வளவு முட்டாள்தனம்.

-------------------நன்றி:-"விடுதலை"5-6-2009
http://thamizhoviya.blogspot.sg/2009/06/blog-post_06.html

சிவபெருமானின் முட்டாள்தனம்! கடவுள்களை முட்டாளாக்குபவர் யார்?

"சிவபெருமானின்" முட்டாள்தனம்! நம் கடவுள்களைப் போல முட்டாள்களையும், அயோக்கியர்களையும் மனித ஜென்மங்களில் கூட காண்பது அதிசயமாக இருக்கின்றது. ஆனால் கடவுள் என்பவர் அப்படி முட்டாளாகவும், அயோக்கியனாகவும் இருக்க முடியாது என்பது உண்மையான யோக்கியமான கடவுள் நம்பிக்கைக்காரர்களின் கருத்தாகவே இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

மற்றபடி கடவுள்களை சிருஷ்டித்து, அவர்களை அயோக்கியர்களாக, மடையர்களாகக் கற்பித்து, சாஸ்திரபுராணம், இதிகாசங்கள் ஏற்படுத்தியவர்கள்  அயோக்கியர்களாக இருந்திருக்க வேண்டுமென்று கருதுகிறேன்.

சைவ சமயிகளுக்கு அருணாசலபுராணம் என்பது மிகவும் உவப்பானது. அந்தப் புராணத்தை ஆதாரமாகக் கொண்டதுதான் திருவண்ணாமலை நாதர், கார்த்திகை தீபம் முதலியனைளாகும்.
.
அருணாசல புராணம் தீர்த்தச் சுருக்கம் - 13 –ம் பாட்டு:

"தென்திசை தரும தீர்த்தக்
குளத்திற் செரிந்து மூழ்கில்
பொன்திகழ் வடிவமாகும்
உடற்பிணி பொடி பட்டோடும்."

அதாவது "திருவண்ணாமலைக்கு தெற்கே "யமதீர்த்தம்" என்று ஒரு தீர்த்தம் இருக்கிறது. அதில் முழுகினால் உடல் பொன்னிறமான வடிவினதாகும். உடலில் உள்ள நோய்கள் எல்லாம் பொடிப் பொடியாகி பறந்து போகும்" என்பது இதன் பொருளாகும்.

ஒரு குளத்தில் நீராடினால் சொறி பிடித்த உடல் பொன்னிறமாகி நோய் கொண்ட உடல் நலமாகி விடுகிறது என்று, கடவுள் பேரில் - ஸ்தலத்தின் பேரில் - குளத்தின் பேரில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது எவ்வளவு முட்டாள்தனமும், அயோக்கியத்தனமுமான காரியம் என்பதை ஆஸ்திகர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு அழுக்குப் பிடித்த, அதுவும் புழுவும், கொசுவும் நிறைந்த நாற்றமுள்ள ஆபாசக் குளத்திற்கு இந்த மாதிரியான சக்திகளைக் கற்பித்து விட்டால், இதை நம்பும் மூடர்கள் அதில் குளித்தும், அருந்தியும், அதிகமான நோயை உண்டாக்கிக் கொள்வார்களே ஒழிய, இதனால் குணமடைய முடியுமா?

இதுதான் போகட்டும் என்றால் மனிதர் தாம் செய்த பாவங்களை போக்கிக் கொள்வதற்கு ஆக மதவாதிகள் கற்பித்து இருக்கும் மார்க்கமானது எவ்வளவு அயோக்கியத்தனமாக கற்பிக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனித்துப் பாருங்கள்.

தீர்த்தச் சுருக்கம் 36-ம் பாட்டு:

"காகமுன் பலி பீடத்தில்
பலிதனைக் கவரும் போதில்
ஆகமார் சிறகைக் கீழே
புடைத் தாலை யத்தினூடே
ஓகையால் நமது கோயில்
விளங்கிய தெனஉட் கொண்டு
பாகசா தனனார் வாழும்
பதியினைப் பரமன் ஈந்தான்."

இதன் பொருள் :

காக்கையானது திருவண்ணாமலைக் கோயிலில் உள்ள பலி பீடத்தில் வைத்திருந்த சோற்றை தின்னும் போது தன் சிறகை விரித்து அசைத்தது. அதனைக் கண்ட பரமசிவன் இந்தக் காக்கை நட்முடைய கோயிலை சுத்தம் செய்தது என மகிழ்ந்து அதற்கு உடனே தேவேந்திரன் வாழும் உலகத்தைக் கொடுத்தார் - என்பதாகும்.

மேற்படி 37 –ம் பாட்டு:

"மூடிக மொன்று கோயில்
முளையினைக் கிளறும்போது
தேடரு மணி யொன்றங்கே
சிதறியோர் விளக்கிற் காட்ட
ஆடிய பெருமாள் தீபம்
அளித்ததென் றதற்கு நல்ல
வீடுயர் நெறியுங் காட்டி
விரைந்துசா லோக மீந்தார்".

இதன் பொருள்:

ஒரு பெருச்சாலியானது (மூஷிகம்) கோயிலில் வளை தோண்டும் போது அது பறித்துத் தள்ளிய மண்ணில் இருந்து ஒரு ரத்தினமானது சன்னதியில் விளக்கு போல் ஒளி மின்னியது. அதனைக் கண்ட சிவபெருமான் அந்தப் பெருச்சாளி தன் சன்னதிக்கு தீபம் போட்டது என்று கருதி மோட்ச வழியைக் காட்டி சாலோகப் பதவியைக் கொடுத்தார் - என்பதாகும்.

மேற்படிச் சுருக்கம் 38 –ம் பாட்டு:

"சிலந்தி யொன் றொரு நாள் அந்தத்
திருமலை யிடத்து நூலைக்
கலந்துடன் இழைக்க, ஈது
கலைநமக் களித்த தென்று
நலத்திக ழரச னாக்கி
அதற்குநல் லறிவு நல்கி
உலர்ந்தபின் நெடிய மாயன்
உலகினை உதவினானே."

இதன் பொருள் :

திருவண்ணாமலையில் ஒருநாள் ஒரு சிலந்திப் பூச்சியானது தன் வாய் நூலால் ஒரு கூடு கட்டியது. அதனை சிவபெருமான் அச்சிலந்தியானது தனக்கு நல்ல வஸ்திரத்தை செய்து கொடுத்ததாகக் கருதி அதை ராஜாவாக்கி – நல்ல ஞானம் உண்டாக்கி – அது இறந்த பிறகு வைகுந்த லோகத்தைக் கொடுத்தார் - என்பதாகும்.

வாசகர்கள் இம்மூன்று பாட்டினையும் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். காக்கை சிறகை ஆட்டினதினால் அது குப்பையைக் கூட்டி சுத்தம் செய்ததாக எவனாவது கருதுவானா?

பெருச்சாளி தோண்டிய மண்ணில் ஒரு ஒளி மின்னும் கல்லு காணப்பட்டால் அதை அந்தப் பெருச்சாளி விளக்கேற்றியது என்று கருதுபவனைவிட மூடன் இருக்க முடியுமா?

சிலந்திப் பூச்சி கூடு கட்டியதைக் கண்டு அது தனக்கு வேட்டி நெய்து கொடுத்ததாகக் கருதுவது கடுகளவு புத்தியுள்ளவனுக்காவது பொருந்துமா?

எனவே இப்பாட்டுக்களிலிருந்து பரமசிவனை எவ்வளவு முட்டாளாக்கி இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

இவ்வளவு முட்டாள்தனமானக எழுதும் கருத்து என்ன என்று பார்ப்போமானால், எந்த முட்டாளாவது இதை நம்பி காசு கேட்காமல் குப்பைக் கூட்டவும், விளக்கு போடவும், துணி வாங்கித் தரவும் முன்வரமாட்டானா என்பது தானே. அதற்கு ஏற்றாற் போலவே இப்படிப்பட்ட முட்டாள்தனமான கூற்றுக்களை நம்பித்தானே அநேக மூடர்களும் அங்கு விளக்குப் போடவும், குப்பைக் கூட்டவும், சாமிக்கென்று துணி வாங்கிக் கொடுக்கவும் முன் வருகிறார்கள்.இதைப் பார்க்கும் போது இதுபோன்ற புராணங்கள் எல்லாம் எவ்வளவு பித்தலாட்டமாக மூடத்தனமாக எழுதப்பட்டு இருக்க வேண்டுமென்பது விளங்கவில்லையா?

இம்மாதிரி கடவுள்கள் முட்டாளாக ஆக்கிவிட்டு, எவனாவது இந்த முட்டாள்தனத்தை எடுத்துக் காட்டினால் "அய்யோ! கடவுளை குறை கூறுகிறானே," "மதத்தை இழிவுபடுத்துகிறானே" என்று கூக்குரலிடுவதில் அறிவுடைமை ஏது? ஆகவே மதவாதிகளும், புலவர்களும், சுயநலக்காரர்களும் செய்த காரியங்களால் தான் இன்று கடவுள்கள் சந்தி சிரிக்கப்படுகிறார்களே ஒழிய சுயமரியாதைக்காரர்களால் அல்ல என்பேன்.

----------- 09-03-1950 விடுதலை இதழில் சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. நூல்: "பெரியார்களஞ்சியம்" தொகுதி:2 … பக்கம்:235 -240

http://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_7389.html

No comments:

Post a Comment