Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

பகவத்கீதை புனித நூலா? 'மனுதர்ம' கையேடுவா?

பகவத் கீதை தேசிய நூலா - அருள்மொழி
கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ!-பெரியார்.

பகவத்கீதையில் மனு என்ற அரக்கன் மறைவாக பதுங்கி இருக்கிறான். கீதை உள்ளவரை ஜாதி ஒழியாது. பகவத் கீதையை நம்புகிறவன் தீண்டாமையை எப்படி ஒழிப்பான்? பகவத்கீதை புனித நூலா? 'மனுதர்ம' கையேடுவா? பகவத்கீதை முழுவதற்குமே பொருள் சொல்லி போற்ற முயன்றிருந்தால் அது அன்றே நிராகரிக்கப்பட்டு இருக்கும். மகாபாரதம் அநீதியான செயல்களின் தொகுப்பு.
மகாபாரதம் அநீதியான செயல்களின் தொகுப்பு.

ஏகலைவனின் விரலை துரோணர் கேட்டது அநீதியானது
எதுவுமே சொல்லிக் கொடுக்காமல் ஏகலைவனின் விரலை துரோணர் கேட்டது அநீதியானது - சுப்ரீம் கோர்ட்.

டெல்லி: எதுவுமே சொல்லிக் கொடுக்காமல், நேரடி குருவாக இல்லாத நிலையில், ஏகலைவனிடம் துரோணர் குரு தட்சணை கேட்டது நியாயமே இல்லாதது. அதை விட ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டது மிகவும் அவமானகரமானது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மகாபாரதத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்று துரோணர். குருக்களிலேயே மிகவும் சிறந்த குருவாக கருதப்படுவர் துரோணாச்சாரியார். இவர் பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் குருவாக விளங்கியவர்.

ஆனால் துரோணச்சாரியாரை உச்சநீதிமன்றம் நேற்று கடுமையாக சாடியது. அவர் செய்த செயல் அநீதியானது, அவமானகரமானது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. தனது சிஷ்யரான அர்ஜூனனுக்கு சாதகமாக அவர் நடந்து கொண்டதாகவும், இதற்காக தன்னை மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட ஏகலைவனிடம் அவர் அநீதியாக நடந்து கொண்டதாகவும் உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.

நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் கியான் சுதாமிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பில் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, அவர் வசித்து வரும் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடித்து உதைத்து நிர்வாணமாக ஊரில் நடக்க வைத்து அவமானப்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு அகமதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை கொடுத்தது. ஆனால் அவர்கள் நான்கு பேரும் அவுரங்காபாத் உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்து விடுதலையாகி விட்டனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த வழக்கைதான் நேற்று கட்ஜூ தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.

விசாரணைக்குப் பின்னர் நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து பெஞ்ச் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் மகாராஷ்டிர அரசு சார்பி்ல அப்பீல் செய்யப்படாதது குறித்தும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

வழக்கு விசாரணையின்போது பழங்குடியினரை வெகுவாக பாராட்டியும், புகழ்ந்தும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், பழங்குடியினர் அல்லாதவர்களை விட பழங்குடியின மக்கள் பல விஷயங்களில் மிகவும் உயர்ந்தவர்கள். அவர்களது ஒரே சொத்து வனங்களும், இயற்கையும்தான். அந்த இயற்கையைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் மற்றவர்கள். இது மிகப் பெரிய அநீதியான செயல்.

அவர்களுக்கு இன்று நேற்றல்ல காலம் காலமாக துரோகமும், அநீதிகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. மகாபாரதத்திலேயே இதைப் பார்க்கலாம்.

கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் குருவாக இருந்தார் துரோணர். ஆனால் அவர் என்ன செய்தார்? நடுநிலையுடன் நடக்கவில்லை அவர்.

துரோணரை தனது மானசீக குருவாக வரித்து, தூரத்திலிருந்தபடியே அவரைப் பார்த்து கற்றுக் கொண்டு வில்வித்தையில் சிறந்தவனாக உயர்ந்தவன் ஏகலைவன். ஆனால் துரோணர் என்ன செய்தார், அவனது கட்டைவிரலை குரு தட்சணையாக கேட்டார்.

துரோணர், ஏகலைவனுக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை. பிறகு எப்படி அவர் குரு தட்சணை கேட்க முடியும்?. அடிப்படையே அங்கு தவறாக உள்ளது. அதை விட முக்கியமாக, தனது சிஷ்யனான அர்ஜூனன்தான் உலகிலேயே மிகச் சிறந்த வில்வீரனாக இருக்க வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தை மனதில் கொண்டு, வில் வித்தைக்குக முக்கியமான, வலது கை கட்டை விரலை தட்சணையாக தருமாறு ஏகலைவனிடம் கேட்டுள்ளார் துரோணர். இது மிகவும் அநீதியானது, அவமானகரமானது. அன்றே பழங்குடியினருக்கு அநீதி நடந்துள்ளது. இதன் மூலம் அர்ஜூனனுக்கு போட்டியாக பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏகலைவன் வந்து விடாமல் தடுத்துள்ளார் துரோணர். இதை விட ஒரு அநீதியை எங்காவது பார்க்க முடியுமா?

மகாபாரதத்தின் ஆதிபர்வம், முழுக்க முழுக்க அநீதியான செயல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. பழங்குடியினருக்கு எந்த அளவுக்கு அநீதிகள் நடந்துள்ளன என்பதை இதைப் பார்த்தாலே அறிந்து கொள்ள முடியும் என்றனர் நீதிபதிகள்.

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2011/dronacharya-act-was-shameful-supreme-court.html

பார்ப்பன வருண தர்மத்துக்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி!

ஏகலைவனின் கட்டைவிரலைக் காணிக்கையாகக் கேட்ட துரோணாச்சாரியாரின் செயல் வெட்கப்படத்தக்கது!

மகாபாரதம் இதிகாசத் தில் பாண்டவர் மற்றும் கவுரவர்களின் குருவான துரோணாச்சாரியார், காட்டு வாசியான ஏகலைவனிடம் அவனது கட்டை விரலை குரு தட்சணையாகக் கேட்ட செயல் மிகுந்த வெட்கப்பட வேண்டிய ஒன்று என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரி வித்துள்ளனர். தனது சீடன் அர்ஜுனனே சிறந்த வில்லாளி என்ற நிலையை உருவாக்க ஏகலைவனின் கட்டை விரலை அவர் கேட்டார்.

துரோணாச்சாரியாரின் இச்செயல் மிகுந்த அவமானத்துக்கும், வெட்கத்துக்கும் உரியது. ஏகலைவனின் வலது கை கட்டை விரலை குருதட்சணையாகக் கேட்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? அர்ஜுனனை விடச் சிறந்த வில்லாளியாக ஏகலைவன் வந்துவிடக்கூடாது என்பதற்காக அல்லவா அவர் இவ்வாறு செய்தார் என்று நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் கியான் சுதா மிஸ்ரா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது.

நிர்வாணமாக ஓர் இளம் பழங்குடியினப் பெண் ஊர்வலமாக இழுத்துச் செல்லப் பட்டதை எதிர்த்து நீதி வழங்கக் கோரிய வழக்கு ஒன்றில் நீதிபதிகள் தீர்ப்பு அளித்த போது, துரோணாச்சாரியாரின் வெட்கப்படத் தக்க செயலைப் பற்றிக் கடுமையாகத் தாக்கினர். பழங்குடி மக்கள் மீது பாராட்டுகளைப் பொழிந்த நீதிபதிகள், மற்ற நாகரிகமான வர்கள் என்று கூறிக் கொள்ளும் மக்களை விட இப் பழங்குடி மக்கள் மேலானவர்கள், உயர்ந்தவர்கள் என்று அறிவித்தனர்.

ஒரு பழங்குடி இளம் பெண்ணை நான்கு பேர் தாக்கியதுடன், அவரை நிர்வாணப் படுத்தி, கிராமத்தில் ஊர்வலமாக இழுத்துச் சென்றதைப் பற்றிய ஒரு வழக்கில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநில அகமது நகர் விசாரணை நீதிமன்றம் அவர் களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.

ஆனால், அவர்களது மேல்முறையீட்டை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை அவர்களை விடு வித்தது. அதன் மீது செய்யப்பட்ட மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு குற்றம் சாற்றப்பட்டவர்களுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த சிறைத் தண்டனையை உறுதிப்படுத்தியது. இத் தகைய ஒரு கொடுமையான நிகழ்ச்சி நடந்திருக்கும்போது, குற்றம் சாற்றப்பட்ட வர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு செய்யாமல் இருந்ததை எண்ணி தாங்கள் வியப்படைவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

http://viduthalai.in/new/e-paper/759

கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ!

மனிதனுடைய வாழ்வு இழிவாப் போனது எந்தக் காரணத்தினால், கடவுளால் ஏற்பட் டது. எந்தக் கடவுளால்? அந்தக் கடவுளை ஒழிக்கணும்.

நான் எத்தனை நாளைக்குச் சூத்திரனாக இருக்கிறது? நான் எத்தனை நாளைக்கு அறிவை இழந்து, கண்டவன் சொன்னதைக் கேட்டுவிட்டுத் தலை வணங்கி, கும்பிட்டுக்கிட்டு இருக்கிறது? மத்தவன் ஆகாயத்தில் பறக்கிறான்; நாம் இங்கே பார்ப்பான் காலைக் கழுவித் தண்ணியைக் குடிக்கணுமா?

நம் மதத்தைப்பற்றிப் பேச ஆரம்பிச்சா பார்ப்பான் மட்டும் ரகளை பண்ண மாட்டான்.

அவனோட வைப்பாட்டி மகன்னு நினைச்சுக்கிட்டு, சாம்பலை அடிச்சிக்கிட்டு நாமம் போட்டுக்கிட்டு “சிவசிவ ராமா ராமா’’ னுட்டு உளறுகிறானே. அந்தப் பயல்தான் நம்ம கிட்டே சண்டைக்கு வருவான்.

இப்பக்கூட கேசைப் பத்தி ஒண்ணும் சொல்லலே நடப்புப்பத்தி சொல்றேன். சேலத்திலே இராமனைச் செருப்பாலே அடிச்சுட்டேன்னு பார்ப்பான் எவனும் பிராது போடல்ல. நம்மவன்தான் பிராது போட்டிருக்கிறான். “அவன் இராமனைச் செருப்பாலே அடிச்சான்! அந்த மாதிரி பண்ணுனா என் மனசு புண்ணாகுது!’’ அப்படிப் போட்டு இருக்கிறான். இப்ப சம்மன் வந்திருக்கிறது. பேப்பரிலே பார்த்திருக்கலாம்.

நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்! அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா, கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்! சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்! யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா? கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்! கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ!

----------- பெரியார்- நூல்: "சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11
http://thamizhoviya.blogspot.sg/2008/04/blog-post_3045.html

பகவத்கீதையில் மனு என்ற அரக்கன் மறைவாக பதுங்கி இருக்கிறான்.

பகவத்கீதை முழுவதற்குமே பொருள் சொல்லி போற்ற முயன்றிருந்தால் அது அன்றே நிராகரிக்கப்பட்டு இருக்கும், பகவத் கீதையை கொண்டுவந்தால் அதன் பிறகு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை!!!

இந்திய மண் முழுவதும் அந்நியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்தபோது அதிலிருந்து விடுபடுவதற்கு இந்தியர்களை ஒன்றுபடுத்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடுவதற்கு பொதுவான விடயம் ஒன்று தேவைப்பட்டதை, விடுதலைப் போராட்டத்தில் போராடிய மகாத்மா காந்தி உட்பட அனைத்துத் தலைவர்களும் உணர்ந்தனர்.

இந்தியர்களை குறிப்பாக பெரும்பாண்மை என்ற சொல்லாடலில் வைத்திருக்கும் இந்துக்களை ஒன்றுபடுத்துவதென்றால் பொதுவாக எதாவது ஒரு அம்சம் இருக்க வேண்டும். அது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும், மேலும் அதை முன்னிலைப்படுத்திப் போராடினால் அது ஊக்கம் தருவதாக இருக்க வேண்டும் என்று நினைத்தனர்.

இந்த தேடலில் திடீர் ஞான உதயமாக காட்சி கொடுத்ததுதான் பகவத் கீதை.

19 ஆம் நூற்றாண்டுக்கு முன் பகவத் கீதை என்பது ஒரு உபநிடத நூல் என்ற அளவில் மிகச் சிலரால் பொத்தி பொத்தி உயர்வாக பேசப்பட்டு வந்திருந்தது. நாடுமுழுவதும் பேசப்படாத, மொழி பெயர்க்கப்படாத நூலாகவே அது இருந்தது. அதைத்தாண்டி பகவத் கீதையின் தேவை வாழ்வியலுக்காகவோ வேறு எதற்காகவோ பயனளிக்கக் கூடியது என்று ஆராய்ச்சி எல்லாம் எவரும் செய்யவில்லை.

அதே போன்று கிருஷ்ணர் அருளியது என்ற தோற்றம் இருப்பதால் வைணவர்களாலும் போற்றப்பட்ட பொதுவான நூலாக அது இருந்தது. இந்த இரு அம்சங்களை முதலில் கருத்தில் கொண்டுவந்த விடுதலைப் போராட்ட இந்து அமைப்பினர், அதை முன்னிலைப்படுத்துவது என்ற முடிவுக்கு வந்தனர்.

இது மட்டும் போதுமா ? இது வெறும் வைதீக மரபினரை மட்டுமே திருப்தி படுத்தும் என்பதால், மேலும் அதற்கு புனித நூல் அங்கீகாரம் கொடுத்தால் தான் அவற்றை மற்ற இந்து சமயத்தை உள்ளடக்கிய பிற சமயத்தினரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று கருதினர்.

ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட நீதிமன்றத்தில் சத்திய உறுதி ( பிரமாணம்) ஏற்பது என்பது வழக்கு நடக்கும் போது முதலில் செய்யப்படும் ஒரு முறை (சம்பிரதாயம்). இதன் மூலம் தாம் கடவுளின் பெயரால் சொல்வதெல்லாம் உண்மை என்று ஆரம்பித்து அதன் அடிப்படையிலும், சாட்சியங்களின் அடிப்படையிலும் நீதி வழங்கப்படுகிறது. ஏற்கனவே புனித நூல் என்ற அந்தஸ்தை கிறித்துவ பைபிள் பெற்றிருப்பதால் கிறிஸ்துவர்களுக்கும், குரானை புனித நூலாக கொண்டுள்ள இஸ்லாமியர்களுக்கோ எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் இந்துக்கள் என்று வரும் போது ஒரு புனித நூல் என்பது இருந்து அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் மட்டுமே அவை நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் என்ற நிலை அன்றைய நீதீமன்றங்களில் இந்து வழக்குகளுக்கு அவசியமானதாக இருந்தது.இந்த சூழ்நிலையில் பகவத்கீதையை புனித நூல் என்று பொதுப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று இந்து தலைவர்கள் முடிவு செய்து பகவத்கீதையை முன்னிலைப்படுத்த பல்வேறு இந்திய மொழிகளில் உரை எழுத தலைப்பட்டனர்.

காந்திஜி, இராஜாகோபால் ஆச்சாரியார், கோபால கிருஷ்ண கோகலே மற்றும் நம் பாரதியாரும் வந்தே மாதிரத்தை மொழி பெயர்த்தவுடன் கீதையை மொழி பெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு இந்து சமயத்தில் சைவம் - வைணவம் என்று பெரிய எதிர்ப்பு எதுவும் வராததால் பகவத் கீதை புனித நூலின் சிறப்புத் தகுதியை பெற்றது.பகவத்கீதை முழுவதற்குமே பொருள் சொல்லி போற்ற முயன்றிருந்தால் அது அன்றே நிராகரிக்கப்பட்டு இருக்கும்,

ஏனென்றால் 'நான்கு வர்ணங்கள் என்னிடமிருந்தே தோன்றியதாகவும், யார் யார் ? எங்கிருந்து பிறந்தார்கள்' என்றும் கண்ணன் அதில் ஆணித்தரமாக சொல்கிறான்.

கீதைப்பற்றி மக்கள் மத்தியில் முன் வைக்கப்பட்ட கருத்துக்கள் இந்து வெறியாகவும் மாறியது, முடிவில் ?மகாத்மாவே கொலை செய்யப்பட்டார்.

இன்றைய தேவை என்று பகவத் கீதையில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு குறிப்பாக இந்துக்களின் ஒருமைப்பாட்டுக்கு எந்த விடயமும் இல்லை.

தமிழக இந்துக்களுக்கு கீதையோ, வேறு வடமொழி நூல்களோ புதிதாக எதுவும் சொல்வதற்கு என்று ஒன்றுமே இல்லை எனலாம்.சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம், கெளடில்யர் எழுதிய தர்ம சாஸ்திரம், வாத்ஸ்யாயனர் எழுதிய காம சாஸ்திரம் ஆகிய மூன்றிற்கும் முன்பே முப்பாலும் ஒருங்கே இணைந்த ஐயன் வள்ளுவனின் அழகு குறள்கள் நமக்கு இருக்கின்றன.

'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்றுரைக்கும் திருமூலச் சித்தரின் திருமந்திரத்தை விடவும், சைவர்கள் மூவர் அருளிய தேவரம்,திருவாசகத்தை விடவும் வைணவர்களின் நாலாயிரம் திவ்யபிரபந்தத்தை விடவும் பக்தியை வளர்க்க கீதை எந்த விதத்திலும் பயனளிப்பதாக நான் கருதவில்லை.

பகவத்கீதை - இதில் மனு என்ற அரக்கன் மறைவாக பதுங்கி இருந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிறப்பை வைத்து இழிவுபடுத்தவும், பிறப்பின் அடிப்படையில் 'தகுதிகள்' பற்றி பேசவும் கண்விழித்துக் காத்துக் கொண்டிருக்கிறான்.

இதற்குமேலும் தமிழக இந்துக்கள் கீதையை போற்ற ஆரம்பித்தால் அதில் மறைந்துள்ள வர்ண சூட்சமத்தை சூரணமாக்கி தின்று அந்த தெம்பில் வெளியே வந்து பயமின்றி நடனமே ஆடுவான்.

புனித நூல் என்பதால் சில கருத்துக்களில் உடன்பாடு (சமரசம், காம்ரமைஸ்) செய்து கொள்ளலாம் என்று நினைத்து அலட்சியமாக இருந்தால் மனுவென்ற அரக்கன் கீதையின் (கிருஷ்ணனின்) ஆதரவு நிழலில் படுத்துக்கிடக்கும் ஆதிசேசன் போன்றவன். எந்த நேரத்திலும் அவன் விஷம் கக்கினால் மீண்டும் நாமெல்லாம் சூத்திரர்கள் ஆக்கப்படுவோம் என்ற ஆபத்து நிறையவே இருக்கிறது.

சூத்திரன் - இதன் பொருள் வேசி மகனாம். இழிபிறவியாம். மனுவில் உள்ள குறிப்புப்படி அப்படித்தான் பொருளாம் !!!

http://govikannan.blogspot.com/2007/08/19.html

பகவத் கீதை மத நூல் அல்ல வாழும் நெறியாமே?

திடுக்கிட வைக்கும் தீர்ப்பு. 28.1.2012 தினமணி நாளிதழில் பின்வரும் செய்தி வெளி வந்துள்ளது.பகவத் கீதை மதநூல் அல்ல; அது வாழும் நெறி என்ற தலைப்பில் செய்தி வந்துள்ளது.

பகவத் கீதை மதநூல் அல்ல; அதுவாழும் நெறி எனவும்; சமூகநீதி தாக்கும் நூல்; நன்னெறியைப் போதிக் கிறது என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

பள்ளிகளில் பகவத் கீதையைக் கற்பிக்கும் மாநில அரசின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக் கில் உயர்நீதிமன்றம் ஜனவரி 27 வெள்ளிக்கிழமை இவ்வாறு கூறியுள்ளது.

தீர்ப்புப்பற்றித் திறனாய்வு அல்லது மதிப்பீடு செய்வது என்றில்லாமல், அந்தத் தீர்ப்பில் கூறப்பட்ட கருத்து அடிப்படையில் ஆய்வு செய்வது தேவை என்ற நிலையில் இங்கே கருத்து கூறப்படுகிறது.

முதலில், பகவத் கீதை மதநூலா? அல்லவா? என்பதை ஆய்வு செய்வோம். பொதுவாக, நாம் கீதை எனக் குறிப்பிடுவது மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும் என்று சொல்லப்படும் பகவத் கீதையைத்தான்.இதனை வழங்கியவர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா எனப்படும் கண்ணன் ஆவான்.

முதலில் நமது வினா இதுதான்: மகாபாரதமும் கீதையும் எந்த மதநூல்? இந்துமத நூல் அல்லவா இது? கண்ணன் எந்த மதத்தின் கடவுள் இஸ்லாமிய மதக் கடவுளா? இல்லையே? இந்து மதத்தின் கடவுளல்லவா? திருமாலின் தசாவதாரங்களுக்குள் ஓர் அவதாரக் கடவுளல்லவா?

நூலாக்கமும் நோக்கமும்: பக்தி, ஞானம், யோகம், தத்துவம், ஆத்மிகம் என்ற பெயரால் கீதை பன்னிப்பன்னி, வலை பின்னிப் பின்னிக் கூறுவதெல்லாம் வர்ண தர்மத்தைத் தானே? கடவுளாகிய தன்னால்தான் பிராமண, சத்திரிய வைசிய, சூத்திர என்னும் நான்கு வர்ணங்களும் படைக்கப்பட்டன என்கிறான் கண்ணன்.சதுர் வர்ணம் மயாசிருஷ்டம் (அத்.4. சுலோ:13).நான்கு வர்ணங்களும் என்னால் படைக்கப்பட்டவை என்கிறான் கண்ணன்.

நான்கு வர்ண ஜாதி அமைப்பு உலகிலுள்ள எந்த மதத்தில் உள்ளது? இஸ்லாமியம், கிறித்துவம், யூதம், முதலான பெருமதங்களில் உள்ளனவா இவை? இந்து மதத்திலேதான் உள்ளனவேறு எம்மதங்களிலும் இந்த அமைப்பு இல்லையே? சொல்ல முடியுமா?

வர்ண -- ஜாதி அமைப்பு இல்லை என்றால் இந்து மதமே இல்லையே? பிறப்பினாலேயே வேறுபாடு கற்பிப்பதும் குலதர்மக் கோட்பாட்டை அப்படியே அணுவளவும் பிசகாது பேணிக் காப்பதும் தானே பகவத் கீதை!இது எப்படி மத நூல் அல்ல என்று ஆகும்?

வேறு வர்ண - ஜாதிக்காரன் தொழிலைக் கற்றுக் கொண்டு ஒருவன் அதனை நன்றாகச் செம்மையாகச் செய்தாலும் அதுகூடாது. தன் வர்ண-ஜாதிக்காரன் தொழிலைக் கற்றுக் கொண்டு ஒருவன் அதனை நன்றாகச் செம்மையாகச் செய்தாலும் அது கூடாது. தன் வர்ண_ ஜாதி சுயதர்மத்தை _ தொழிலை அரைகுறையாகச் செய்து செத்துப் போனாலும் அதுதான் சிறந்தது!
ச்ரேயாந் ஸ்வதர்மோ விகுண:
பரதர்மாத் ஸ்வனுஷ்டிதாத் ஸ்வபாபகியதம்
கர்ம குர்வந்நாப் நோதி கில்பிஷம்
(அத்: 18 சுலோகம்: 44)

இவ்வண்ணம் வர்ண - ஜாதி _ சுயதர்மத்தைப் பிசகாது செய்தே தீர வேண்டும் என்கிற குலதர்மம் பேணும் ஏற்பாடு இந்து மதத்தில்தானே உள்ளது? இப்படியிருக்க,கீதை மதநூல் அல்ல என்றால் அது எப்படி? எப்படி?

விரும்பத்தகாத வேள்வி முறை வைதிகச் சடங்கான கேள்வி - அதாவது யாகத்திற்குக் கீதையில் மிகவும் முதன்மை கொடுக்கப்பட்டுள்ளதே!

யக்ஞம் (வேள்வி) செய்யாதவர் களுக்கு இவ்வுலகில் நல் வாழ்க்கை இல்லை அத்.4 : சுலோ: 32)
யாகம் செய்வது இந்து மதத்துக்குரியதல்லவா? இதை வலியுறுத்தும் கீதை எப்படி மத நூல் அல்ல என்று ஆகும்?

வலிமையான வாக்குமூலம் பகவத் கீதை ஒரு (இந்து) மத நூலா? அல்லவா? - என்பதற்கு விடையாக இந்து மதப் பரப்புரையாளராக இருந்த ஒரு பெரியவர் கூறியிருக்கும் வலிமையான வாக்குமூலத்தினைக் கீழே பார்ப்போமா?

இந்தநூல் (பகவத்கீதை) எல்லா ஹிந்துக்களுக்கும், சம்பிரதாய வித்தியாசமில்லாமல் வேதம் போலவும், உபநிஷத்துக்கள் போலவும் ஒப்புக் கொண்டிருக்கும். ஒரு சாஸ்திரமாக முடிந்து, பல ஆயிர வருஷங்களாக அங்கீகரிக்கப்பட்டு வந்திருக்கிறது.

யாரோ இவர் யாரோ? இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? சாட்சாத் சக்கரவர்த்தி சி. இராஜ கோபாலாச்சாரியார் அவர்கள்தான்!

தமது, கண்ணன் காட்டிய வழி என்னும் நூலில் தான் இவ்வண்ணம் வாக்கு மூலம் வழங்கியிருக்கிறார். இந்து மதத்தின் சாஸ்திரம் ஆக, இன்று நேற்றல்ல, பல ஆயிரம் ஆண்டுகளாக பகவத் கீதை அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளதாம்!

இப்படியிருக்க.பகவத்கீதை ஒரு மதநூல் அல்ல என்று ம.பி. நீதிமன்றம் தீர்ப்புரை வழங்கியிருப்பது எப்படி என்றுதான் எம் சிற்றறிவுக்கு எட்டவில்லை! சமூகநீதியைக் காக்கும் நூலாமே!சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவினர்க்கும் ஏற்படுத்தப்பட்ட சமூக அநீதியை (Social injustice)க்களைந்து அனைத்துப் பிரிவினர்க்கும் முறையான இயல்பான நீதியை வழங்குவதுதானே சமூகநீதி (Social Justice) ஆக இருக்க முடியும்? அத்தகைய சமூக நீதி காக்கும் நூலாமே கீதை? இது சரியா?

வர்ண தர்மக் கட்டளையைப் பின்பற்றித்தான் வாழ வேண்டும்.அதை நிறைவேற்றுவதைக் காட்டிலும் உயர்ந்தது எதுவுமில்லை.
அவற்றை மீறுவதைவிடத் தாழ்ந்தது எதுவும் இல்லை என்றுதானே கீதை பறைசாற்றுகிறது?

பணிவான தொண்டூழியம் செய்வது தான் சூத்திரர்களின் இயல்பான கர்ம மாகும் கடமையாகும் (அத்:18: சுலோ: 44)
இதன்படி தொண்டூழியம் _ அடிமைத்தனம் மட்டும்தான் சூத்திரனின் கடமை.

அவன் படித்தல் கூடாது; பதவியில் அமர்தல் கூடாது; உயர் அலுவல் பார்த்தல் கூடாது. இதுதான் சமூகநீதியா? இப்படிக் கூறும் கீதைதான் சமூகநீதி காக்கும் நூலா! இந்த நூற்றாண்டின் இணை யற்ற நகைச் சுவையல்லவா இது?

மங்கையர் - உழவர் மாபாவியராமே? பெருமைக்குரிய பெண்ணினத்தையும் உயர்வுக்குரிய உழவன் இனத்தையும்; பாட்டாளிகளையும், தொழிலாளத் தோழர்களையும் பாவப்பட்ட பிறப்பு உறுப்பினின்றும் (பாய யோனி) பிறந்தவர்கள் என்று இழித்துரைக்கிறது கீதை.

மாம்ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யேபிஸ்யு பாப யோனிய: ஸ்திரியோ வைச்யாஸ் -_ ததா சூத்ராஸ்தே
பெண்களும் வைசியர்களும் சூத்திரர்களும் பாவ யோனியினின்றும் பிறந்தவர்கள் (அத்:9 -_ சுலோ_ 32)

வைசியர், சூத்திரர், பெண்டிர் பாவிகள் என்று கூடச் சொல்லவில்லை. அவர்கள் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்கிறது கீதை! இவர்களைப் பெற்ற பெண்களின் பிறப்புறுப்பே(யோனியே) பாவப்பட்டதாமே? இதுவா சமூக நீதி காக்கும் நூல்! துடிக்கிறதே உள்ளம்?

பயனை எதிர்பாராத பணியாமே?
கடமையைச் செய்; பயனை எதிர்பாராதே! (அத்_ 2 : சுலோ: 47)
இதனை, நிஷ்காம்ய கர்மம் என்கிறது கீதை.

உழைப்பினால்தான் ஒரு சமுதாயம் உயர முடியும். அதிக உழைப்புக்கு இருக்கும் அடிப்படை ஊக்கமே அதில் உண்டாகும் பலன் _ பயன் விளைவுதானே.

சுரண்டல் கோட்பாடு. கடுமையாக உழை! ஊதியத்தை (கூலியை)ப் பற்றிக் கவலைப்படாதே! என்ற வகையிலான கீதையின் தத்துவம் _ கீதோபதேசம் முதலாளித்துவத்தின் பாதுகாப்புக் கோட்பாடு அல்லவா?எதுவும் செய்யாமலேயே பலனை எதிர்பார்க்கும் ஏமாற்றுச் சுரண்டும் வர்க்கம் உழைப்பாளிகளை பாட்டாளிகளைப் பார்த்து பலனை எதிர்பார்க்காதே! என்று கூறுவது கீதை காட்டும் சுரண்டல் கோட்பாடு அல்லவா?

இதுதான் வாழும் நெறியா? எடுத்த செயலை நிறைவேற்றும் வகையில் செயலாற்றும் போது, இடையில் உண்டாகும் தடை; முடியும் போது உண்டாகும் என்பனவற்றை முன்னரே எண்ணிப் பார்த்து எதிர் பார்த்துச் செயலிலாற்றுக என்று கருத்தமைந்த,

முடிவும், இடையூறும், முற்றி ஆங்(கு) எய்தும் படுபயனும் பார்த்துச் செயல் (குறள் : 676) குறளைப்பாருங்கள்!

பயனை எதிர்பார்த்தே செயல்புரிதல் வேண்டும் என்று கூறும் குறள் நெறி வாழும் நெறியா?

பலனை எதிர்பாராமல் பணி செய்! என்று கீதை உரைப்பது வாழும் நெறியா? எண்ணிப் பார்க்க வேண்டாமா?

சிந்தனை செய்யக் கூடாதாமே? செய்யத் தக்கது, செய்யத்தகாதது என்பதை முடிவு செய்வதில் சாஸ்திரம்தான் உனக்குப் பிரமாணம்.

ஆகவே, சாஸ்திரங்களில் சொல்லிய முறையை அறிந்து செயல்களைப் புரிக
தஸ்மாச் -_ சாஸ்திரப் ப்ரமாணம்தே கார்யாகார்ய வய்வஸ்தி தவ்ஜ்ஞாத்வா சாஸ்த்ர _ விதானோக்தம் கர்மகர்த்து மிஹார்ஹஸி (அத்.16. சுலோ: 24)

எதையும் சாஸ்திரம் கூறுவதை ஒட்டியே செய்! உன் அறிவைக் கொண்டு ஆராய்ந்து உன்பகுத்தறிவு கூறுவதன்படி செய்யாதே! என்பது கீதை (கண்ணனின்)யின் கருத்து.

இதுதான் வாழும் நெறியா?தாழும் நெறியல்லவா?

காலடியில் வீழ்ந்துகிட! எல்லாத் தருமங்களையும் விட்டு விட்டு என் ஒருவனையே சரணமாக அடைவாயாக!
நான் உன்னைச் சகல பாபங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன் அத்:18 சுலோ:65)

எத்துணை ஒழுக்கக்கேடாக தீயொழுக்கத்தில் திளைத்தவனாக இருந்தாலும் கவலைப்படாதே! சகோதரா! என்னை வணங்கு! என்னைச் சரண் புகு.உன்பாபம் எல்லாம் பறந்து போகும்! என்று கூறுவது, தீவினை, ஒழுக்கக் கேட்டினை ஊக்குவிப்பதாக இல்லையா?

இதுதான் கீதை காட்டும் வாழ்வியல் பாதையா? வாழும் நெறியா? வெட்கம்! வெட்கம்!!

பக்தியும் பாவங்களும். பக்தி இருந்தால் போதும்; அறச் செயல்; அறநெறி வேண்டியதில்லை; பாவங்கள் ஓடியே போய்விடும்_ என்று அறிவுறுத்தும் மிக மோச மான வாழ்க்கை வழிதான் வாழும் நெறியா?

உணர்வோம்! உணர்த்துவோம்!!நீதிமன்றத் தீர்ப்பின் கருத்துப்படி, (இந்து) மத நூல் பகவத் கீதை, மக்களுக்கு நல்ல பாதைகாட்டவில்லை!அது சமூக நீதியைக் காக்கவில்லை!!அது, வாழும் நெறியாகவும் திகழவில்லை!! என்ற உண்மைகளை ஒவ்வொருவரும் உணர்வோம்! உலகுக்கு உணர்த்துவோம்!! நீதிமன்றத் தீர்ப்புகள் எல்லாம் நிலையானவை அல்ல!
தீர்ப்புகள் திருத்தப்படலாம்!!
--------------------- பேராசிரியர் ந. வெற்றியழகன் அவர்கள் 25-2-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
http://thamizhoviya.blogspot.com/2012/02/blog-post_8614.html

********


*************

No comments:

Post a Comment