Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

பசுவின் புனிதம். பசு வழிபாடு. பசுவதை சில சரித்திர சத்தியங்கள்!

படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.
உச்சநீதி மன்றத்தின் முன்னால் தலைமை நீதிபதி
(பிராமணர்) மார்கண்டேய் கட்ஜூ
தன் முகநூல் பக்கத்தில் பதிந்தது.

"நான் ஒரு இந்து. நான் மாட்டிறைச்சி சாப்பிட்டிருக்கிறேன். மீண்டும் சாப்பிடுவேன். மாட்டிறைச்சி சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. உலகில் 90% பேர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். அவர்கள் அனைவரும் பாவிகளா? பசு புனிதம் என்பதயோ அல்லது பசு எங்கள் தாய் என்பதையோ நான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன். எப்படி ஒரு விலங்கு ஒரு மனித இனத்துக்கு தாய் ஆக இருக்க முடியும்? அதனால் தான் இந்தியர்களில் 90% முட்டாள்கள் என்று கூறுகிறேன். இதில் திரு முக்தாட் அப்பாஸ் நக்வி யும் அடக்கம்."

"கோ" பக்தர்களே, மாட்டுக்கறி (பீப்) மிக அதிகமாக சாப்பிடும் அமேரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அரேபியா நாடுகளுக்கு பிழைக்க போகாதிங்க, அவர்கள் நடத்தும் கம்பனிகளில் வேலைசெயாதிங்க, அவர்கள் அளிக்கும் வேலைகளை எடுத்து செய்யாதிங்க, அவுங்க கொடுக்குற அந்நிய செலாவணி (டாலர்) வேண்டாம்முன்னு சொல்லுங்க... அந்நிய முதலீடுக்கு மட்டும் சூ... வாய.. மூடிகின்னு அவுங்ககிட்ட கைநீட்டி பிச்ச எடுக்கரிங்களே வெக்கம்மாயில்ல.
சகோ, மன்னிக்கவும் காரணம் இது 18 + மாடு என்பது கடவுள் அதனால் அதன் கறியை பயன்படுத்தக்கூடாது. என்ற சட்டத்தை ஆதரிப்பவர்களே லிங்கம் கூட கடவுள்தான் அதனால் இனி யாரும் அதை பயன்படுத்தக்கூடாதுனு சட்டம் வந்தா ஆதரிப்பீர்களா?. (வரும் காலங்களில் இந்துத்துவா தீவிரவாதிகளால் இனி இதுவும் நடக்கலாம்).

மாட்டு மூத்திரத்தால் கேன்சர் குணமாகும் அணுகுண்டுகளை செயலிழக்க செய்யும் - -ஆர்.எஸ்.எஸ். பிரகடனம்..!!
After Cow Urine Fighting Cancer, Now RSS Says Cow Poop Can Make Nuclear Bombs Ineffective.

படங்களை க்ளிக் பெரிதாக்கி பார்க்கலாம்.
பசுவின் புனிதம்.

“பசுவதை தடை சட்டம் வேண்டும்.” “பசு புனிதமானது அதன் கறியை உண்ணுவதை தடை செய்ய வேண்டும்.” “பசுவதை என்பது இசுலாமியர்களின் ஆட்சியினால் ஹிந்துகளுக்கு வந்த சோதனை.” “பசு ஹிந்துக்களின் கடவுள். பசுவின் மூத்திரம் அனைத்து நோய்களையும் தீர்க்கும் சக்தி படைத்த சர்வ ரோக நிவாரணி.”

மேற்சொன்ன கூற்றுகளை இந்துமதவெறி கும்பல் நரிப் பிள்ளை போல் சொல்லி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக பாஜக ஆட்சிக்கு வரும் மாநிலங்களில் முதல் வேலையாக பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்படுவதை நாம் கவனிக்கலாம்.

இந்த கும்பலின் இந்த “பசுவின் புனிதம்” என்ற கூற்று ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள இசுலாமியர்கள், கிறிஸ்துவர்கள், தலித் மக்களை குறி வைத்து தாக்குகிறது. இந்தியா முழுவதும் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் ஆயிரகணக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருக்கும் நிலையில், அதிக புரத சத்துள்ள மாட்டுக் கறி போன்ற உணவுகள் அவர்களின் உயிரை காக்க உதவும். ஆனால் இந்த இந்துத்துவ கும்பல் சிறுபான்மை மக்களை ஒடுக்கவும், பெரும்பான்மை இந்து மக்களை அவர்களுக்கு எதிராக திருப்பவும் “பசுவின் புனிதம்” எனும் இந்த தந்திரப் பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது.

“பசு புனிதமானது” “கோமாதா பால் கொடுக்கிறது” “பசுவின் கோமியம் பாவங்களை தீர்க்கவும், தோஷங்களை போக்கவும், பல நோய்களை தீர்க்கவும் உதவுகிறது” “இந்துக்களின் புனித பசுக்களை கொல்வது பாவத்திற்குரிய செயல்” என்கிறார்கள் இந்துமத வெறியர்கள்.

பசுவின் மாமிசம் உண்ணும் பழக்கம் இந்துக்களுக்கு இருந்ததா இல்லையா? அதை இசுலாமியர்கள் தான் இந்தியாவில் அறிமுகப் படுத்தினார்களா? பார்ப்பனர்கள் மாட்டுக் கறியை உண்ட வரலாறு என்ன?

இந்தக் கேள்விகளுக்கு விடை தரும் விதமாக வரலாற்று ஆய்வாளரான டி.என்.ஜா மிக முக்கியமான புத்தகம் ஒன்றை தந்துள்ளார். மேட்ரிக்ஸ் புக்ஸ் நிறுவனத்தின் பதிப்பில் ஆங்கிலத்தில் வெளி வந்துள்ள “The Myth of Holy Cow” எனும் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் “பசுவின் புனிதம்” என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது.

பல ஆய்வுகள மூலம் ஆதாரத்துடன் முழு முடிவுகளும், ஆதாரங்களும், வேதம் மற்றும் பிற இந்து சமய நூல்களில் இருந்தே மேற்கோள் காட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மதவாதிகள் இந்த புத்தகத்தை வெளிவரவிடாமல் செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டனர். முதலில் இதை பதிப்பிக்க ஒப்புக் கொண்ட டெல்லியை சேர்ந்த புத்தக பதிப்பகம், மதவாதிகளின் மிரட்டலுக்கு பயந்து ஒதுங்கியது. பின்னர் இதை மேட்ரிக்ஸ் நிறுவனம் பதிப்பிக்க முன் வந்தது. ஆனால் 2001 ஆகஸ்டில் வந்த இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கி விட்டார்கள் மதவாதிகள். அதனால் லண்டனில் இருக்கும் வெர்சோ பதிப்பகத்தாரின் மூலம் உலகம் முழுவதும் இந்த புத்த்கம் முதலில் வெளியிடப்பட்டது. இந்து மதவெறியர் ஒருவர் டி.என். ஜாவுக்கு மரண தண்டனை அறிவித்து விட்டார்.

வேத காலத்தில் மக்கள் பசுவை முக்கிய உணவாக உண்டு வந்தது மட்டுமில்லாமல், மதிப்பிற்குரிய உணவாகவும் கருதி வந்தனர். யாகங்களில் பசுவை பலி இடுவதும், பசுவின் கறியை கொண்டு சமைத்த உணவை பிரசாதமாக உண்டதையும் வேதங்களும், பிற பார்ப்பனிய நூல்களும் பதிவு செய்துள்ளன. அவை தொடர்பான ஆதாரங்கள் மிகவும் விரிவாக புத்தகத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ளன.

வேத கால மருத்துவ நூல்களில் பசுவின் இறைச்சியும், நெய்யும், காரமும் கலந்து சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டால் குழந்தைகளுக்கு நல்லது என்றும் பல நோய்களுக்கு மருந்தாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை சுஸ்ருதர் எழுதிய மருத்துவ நூல்களில் காணலாம்.

இப்படி ஆதாரங்கள் இருக்க இந்து மதத்தை பற்றி பல பொய்களை இந்துத்துவா கும்பல் பெருமையாகவும், வெளிப்படையாகவும் சொல்லி வருவதை என்னவென்று சொல்வது? பொதுவில் மதவெறியர்கள அனைவரும் தமது மதப் புனிதத்தை இப்படித்தான் பொய்களாலும், புனைவுகளாலும், மற்ற பிரிவினர் மீதான கசப்புணர்விலும் கட்டியமைக்கின்றனர். அதில் இந்துமதவெறிப் பாசிஸ்ட்டுகள் முன் வரிசையில் இருக்கின்றனர்.

வளர்ந்து வரும் இந்துத்துவ சக்திகளின் பொய்களை அம்பலப்படுத்த அவர்கள் முன்வைக்கும் நூல்களில் இருந்தும், வரலாற்றில் இருந்தும் உண்மைகளை ஆய்வு செய்து தொகுத்து அம்பலப்படுத்த டி.என். ஜா மிக அரும்பணியை செய்திருக்கிறார்.

டி.என். ஜாவின் “பசுவின் புனிதம்” எனும் நூல் வேத காலம் முதல் மக்கள் பசுவின் மாமிசத்தை உண்டு வந்ததை மட்டும் ஆதாரத்துடன் நம் முன் அம்பலப்படுத்தவில்லை, இந்து மதவாதிகள் எப்படிப்பட்ட பொய்களை வாய் கூசாமல் சொல்லுகிறார்கள், இந்து-இந்தியா என்று வெற்று கோஷங்கள் போடும் கூட்டம் எப்படி இந்தியாவின் உண்மையான மக்களின் வாழ்க்கையும் வரலாற்றையும் மறைத்து விட்டு தங்கள் பொய்களை திணிக்கிறது-திரிக்கிறது, என்றும் அம்பலப்படுத்தியுள்ளார். அவருக்கும் நம் நன்றிகள்.

பசுவின் புனிதம்.ஆசிரியர் : டி.என்.ஜா வெளியீடு : பாரதி புத்தகாலயம் கிடைக்குமிடம்: பாரதி புத்தகாலயம் கடைகள் போக கீழைக்காற்றிலும் கிடைக்கும். கீழைக்காற்று வெளியீட்டகம் 10, அவுலியா தெரு. எல்லீஸ் சாலை. சென்னை – 600002


பசுவின் புத்திரர்கள் விவேகானந்தர்.
ஒருமுறை விவேகானந்தரிடம் பசுக்களைப் பரிபாலிக்கும் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சாரகர் வந்து பசுக்கள் பாதுகாப்புப் பணிக்கு நன்கொடை கொடுக்குமாறு கேட்டார். அப்பொழுது அந்தப் பிரச்சாரகரைப் பார்த்து உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன? என்று கேட்டார் விவேகானந்தர்.

நமது நாட்டில் உள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்கள், வலிவிழந்தனவும், கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்தியசாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று பதில் சொன்னார்.

மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் - இவர்களுக்காக உங்கள் சங்கம் என்ன செய்தது? என்ற கேள்வியை எழுப்பினார் விவேகானந்தர்.

பஞ்சம் முதலிய துன்பம் வரும்போது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத் தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது. பஞ்சங்கள் என்பவை மக்களுடைய பாவ கருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே!

பசுத் தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்கடைக்காரர்களின் கையில் அகப்பட்டு இறக்கின்றன என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே என்று மடக்கினார் விவேகானந்தர்.

ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பசு நம் அன்னை என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே என்றார் பிரச்சாரகர்.

அப்பொழுது நறுக்கென்று ஒன்று சொன்னார் விவேகானந்தர் “ஆம். பசு நம் அன்னை என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்? “ என்று சொன்னார்.

பசுவின் உடலில் கடவுள்கள் உறைவது உண்மை யென்றால் பசுக்களுக்கு ஏன் நோய்கள் வருகின்றன - செத்துப் போகின்றன?

மாடுகளில் அது என்ன பசு மாட்டுக்கறியை மட்டும் உண்ணக் கூடாது என்ற தடை? காளை மாடு சிவனின் வாகனமாயிற்றே. அதனைக் கொல்லலாமா? எருமைக் கிடா எமனின் வாகனமாயிற்றே. அதன் கறியைச் சாப்பிடலாமா? சேவல் முருகனின் வாகனமாயிற்றே - அதன் கறியை உண்ணக் கூடாது என்று போராட்டம் நடத்திட முன் வருவார்களா?

பசு தெய்வமென்றும் முப்பத்து முக்கோடி தெய்வங்களும் பசுவின் உடலில் குடி கொண்டிருப்பதாகவும் கூறிச் சென்றிருக்கிறார்கள்.

பசுவின் உடலில் உறையாத கடவுள்களே கிடையாதாம். அது கோமாதாவாம். அதனால் கொல்லக் கூடாதாம்.

மேற்சொன்ன கூற்றுகளை இந்து மதவெறி கும்பல் நரிப் பிள்ளை போல் சொல்லி வருகிறது அதை உறுதிப்படுத்தும் விதமாக பாஜ க ஆட்சிக்கு வரும் மாநிலங்களில் முதல் வேலையாக பசுவதை தடைச்சட்டம் கொண்டு வரப்படுவதை நாம் கவனிக்கலாம்

 பி.ஜே.பி. ஆட்சியில் இந்துத்துவாவின் தாண்டவம்தான் நடக்கும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!

பசுவின் உடலில் கடவுள்கள் உறைவது உண்மை யென்றால் பசுக்களுக்கு ஏன் நோய்கள் வருகின்றன - செத்துப் போகின்றன?

மாடுகளில் அது என்ன பசு மாட்டுக்கறியை மட்டும் உண்ணக் கூடாது என்ற தடை? காளை மாடு சிவனின் வாகனமாயிற்றே. அதனைக் கொல்லலாமா? எருமைக் கிடா எமனின் வாகனமாயிற்றே. அதன் கறியைச் சாப்பிட லாமா? சேவல் முருகனின் வாகனமாயிற்றே - அதன் கறியை உண்ணக் கூடாது என்று போராட்டம் நடத்திட முன் வருவார்களா?

------------------- "விடுதலை” தலையங்கம் 21-1-2012
http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_21.html

'பசுவதை: சில சரித்திர சத்தியங்கள்!'

''பசுவதை இந்து தர்மத்திற்கு எதிரானது!''- என்றும், ''வேதங்கள் உட்பட இந்துமதப் பிரமாணங்கள் பசுவதையை அனுமதிக்கவில்லை''- என்றும் இந்துத்துவவாதிகள் பிரச்சாரத்ததை அவிழ்த்துவிட்டுள்ளனர்.

ஆனால், வேதகாலத்து ஆரியர்கள் பசுவைக் கொன்று அதன் இறைச்சியை புசித்தும் வந்தனர் என்பதுதான் உண்மை. வேதகால சமூக - பொருளாதாரத் துறையில் பசுவுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்து வந்தது.

வேளாண்மையோடு தொடர்புள்ள ஒரு நாடோடிக் கூட்டமாகத்தான் ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தனர். விவசாயமும், கால்நடை வளர்ப்பும் அவர்களின் முக்கிய தொழில்களாய் இருந்தன. அவர்களுடைய முக்கிய சம்பாதியம் கால்நடைகள்தான் - குறிப்பாக பசுக்கள் கன்று காலிகள் அதிகம் பெருக வேண்டும் என்பதற்காக அவர்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர் என்று வைதீக நூல்கள் கூறுகின்றன.

யாகங்கள் நடக்கும்போது, புரோகிதர்களுக்குக் கூலியாக வழங்கியது பசுக்களைத்தான்! கன்று காலிகள் காரணமாக கோத்திரங்களிடையே போர் மூளுவதும் உண்டு.

'கோத்திரம்' என்னும் சொல்கூட ஆரியர்களின் சமூக வாழ்வில் பசுவுக்கு இருந்த முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டும். (கோ - பசு) ஒரே ஆலயத்தில் தங்களுடைய 'கோ' க்களுடன் வசித்துவந்த ஆட்கள் கோத்திரம் எனப்பட்டனர்.

இவர்கள் பசுக்களையும், காளைகளையும் உணவுக்காக கொன்று புசித்து வந்தனர் என்று வேத இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.

விருந்தினர்களுக்கு பசு இறைச்சியைப் பரிமாறி உபசரிப்பதை உயர்ந்த மரபாக அவர்கள் பின்பற்றி வந்தனர். பசு இறைச்சியை விடச் சிறந்த உணவு வேறில்லை என்பது அவர்களின் நம்பிக்கை.

வேதகால யாகங்களில் ஒரு பிரதான சடங்கு பசுவதைதான்! யாகங்களில் மிகச் சிறந்த யாகம் 'சோம' யாகம்! ரிக் வேதத்தில் ஒன்பதாம் மண்டலம் முழுவதும் சோம யாகம் பற்றிய வர்ணணைகள் நிரம்பியுள்ளன.

ஐந்து ஹோமம் சோமயாகத்தின் முக்கியமான சடங்காகும். உயிர்ப் பிராணிகளை அக்னியில் அர்ப்பணித்தல் மட்டுமல்ல.. அவற்றின் இறைச்சியை யாக முறைப்படி ரிஷிகள் உண்ணவும் செய்தனர்.

பசு, ஆடு, காளை, குதிரை, எருமை, மான் போன்ற பிராணிகள்தான் ஹோமத்திற்கு பயன்படுத்தப்பட்டன. யாகப் பசுவை மூச்சு திணற வைத்தோ, கழுத்தை நெரித்தோ கொல்வார்கள். கொன்ற பசுவை துண்டுகளாய் வெட்டி, ஒவ்வொரு துண்டாக எடுத்து ஹோமத்தில் இடுவார்கள். மொத்தம் முப்பத்தாறு துண்டுகளாய் வெட்டி, ஒவ்வொரு துண்டையும் ரிஷிகளில் ஒவ்வொருவராய் எடுத்து ஹோமம் செய்ய வேண்டும் என்பது நியதி. (ஐதரேய பிராமணம் 7 - 1) யாகப் பசுவின் எந்தெந்த பாகத்தை யார் யார் ஹோமம் செய்ய வேண்டும் என்ற விபரத்தையும் வேத இலக்கியங்கள் தருகின்றன.

• பிரஸ்தோ தாவ் - தாடை எலும்பும் நாக்கும்,
• உத்காதாவ் - வயிறு,
• பிரதிகர்த்தாவ் - கழுத்து,
• மைத்ராவருணன் - வலது தொடையின் கீழ்ப்பாகம்,
• பிராம்ணாச்சம்ஸி - இடது தொடையின் கீழ்ப்பாகம்,
• அச்சாவாகன் - வலது தொடையின் மேல்பாகம்,
• அக்னீதரன் - இடது தொடையின் மேல்பாகம்,
• நேஷ்டாவ் - வலது முன்காலின் கீழ்ப்பாகம்,
• போதாவ் - இடது முன்காலின் கீழ்ப்பாகம்,
• அத்ரேயன் - வலது முன்காலின் மேல்பாகம்,
• ஸதஸ்யன் - இடது முன்காலின் மேல்பாகம்,
• அத்வர்யூ - முதுகோடு சேர்ந்த வலப்பக்கம்,
• பிரதிபிரஸ்தாவ் - முதுகோடு சேர்ந்த இடப்பக்கம்,
• கிராவஸ்துதன் - கழுத்து இறைச்சி,
• சுப்ரமணியன் - தலை
இதுமட்டுமல்ல, யாகப் பசுவின் வாலை 'கிருஹப்பத்னியும்', மூத்திரப் பையை 'கிருஹபதியும்' எடுக்க வேண்டும் என்பது விதி.

மேற்சொன்னவாறு பசுவை அணு அணுவாக வெட்டி, சுவைத்துண்ணும் சம்பிரதாயம் வேதகால இந்துக்களிடம் இருந்தது. புராதன கலாச்சாரத்திற்கு ஏற்ப பசு வதையைத் தடை செய்ய வேண்டும் என்று இன்றைக்கு கூறுபவர்கள், எதார்த்த சரித்திர சத்தியங்களை வெட்கமின்றி மறைக்கிறார்கள் என்றுதான் பொருள்.
சுவாமி விவேகானந்தர் சொல்லியிருப்பதை படியுங்கள்.

“என் ஆசான் (ஸ்ரீ ராமகிருஷ்ன பரமஹம்சர்) காய்கறிகளையே உண்பவர். ஆயினும், அம்பிகைக்கு நிவேதித்த மாமிசத்தையும் உண்டுவந்தார். ஒரு உயிரை கொல்லுவது பாவந்தான். ஆனால், ரசாயன முறைப்படி மனிதனுக்கு மரக்கறி உணவு மட்டும் போதாது.

புத்தருடைய கொள்கைக்கு எதிராக, மாமிச உணவை உண்ணாதவனுக்கு மனுவானவர் மறுமையில் தண்டனையும் விதித்திருக்கிறார்.

“நியுக்தஸ்து யாதான்யாயம்
யோமாம்ஸம் நாதிமானவ:
ஸப்ரேத்ய பசுதாம்யாதி ஸய்பவா:
னேக் விம்சதீம்”

இதன் பொருள்: சிராத்த காலங்களில் வரிக்கப்பட்ட மனிதன் மாமிசத்தை உன்னாவிடின், இருபத்தொரு தடவை மிருகமாக பிறப்பான்.
மேலும் தேவதைகளுக்கு கள்ளும் ஊனுமே படைக்கவேண்டும்.
“ஜாமிவா ஏதத் யஞஸ்ய க்ரியதே
யஹன்வஞ் சௌபுரோடாசௌ”

அதாவது புரோடசம் மாத்திரம் உட்கொள்வதால், யஜ்ஞ புருஷனுக்கு வயிற்றுவலி உண்டாகிறது. அதை நிவர்த்திக்கும் பொருட்டு மத்தியில் வபா (உயிரினங்களில் உள்ள கொழுப்பு) ஹோமம் செய்யவேண்டும்.

மேலும்,
“மஹோஷம் லா மகாஜம்
வாஸ்ரோத்ரியாயோப கல்பயேத்
ஸத்க்ரியா சேவனம்
ஸ்வாது போஜனம் சூன்ருதம் வச்”

பொருள்: ஒரு பெரிய எருதையேனும் அது கிடைக்காதவிடத்தில் கொழுத்த வெள்ளாட்டையேனும் கொன்றும் சுரோத்ரிய (வேதமறிந்த பார்ப்பனன்)னுக்கு விருந்து செய்யவேண்டும். இன்சொற்களால் அவனை மகிழ்விக்கவேண்டும்.

இப்படி மாட்டுக்கறி தின்னும் வேதகால வழக்கத்தை சொல்லிக்கொண்டே போகலாம்.கீசக வதம், துரியோதன வதம், வாலி வதம், தாருக வதம், சம்பூக வதம் என்று முறைகெட்ட வதங்கள் நடத்தி, அவற்றுக்கு ஆதரவாகவும் பேசும் வகுப்புவாத பாசிஸ்டுகள், பசுவதை எதிர்ப்புக்காக குரல் கொடுப்பது இந்து தர்மத்தைக் காப்பாற்ற அல்ல. மாறாக, இஸ்லாமிய சகோதரர்களின் நிம்மதியைக் குலைத்து. குறுகிய அரசியல் லாபம் தேடுவதே அவர்களின் நோக்கம்!

சிறுபான்மையினரை தேசவிரோதிகளாய் முத்திரை குத்த வகுப்புவாத பாசிஸ்டுகள் கண்டுபிடித்து வைத்துள்ள பல வழிமுறைகளில் ஒன்றுதான் பசுவதை எதிர்ப்பு என்ற கூக்குரலும்!

முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற கூப்பாடு, சதுர்வர்ண - ஜாதீய முறையைப் புகழ்ந்துரைத்தல், விடுதலைப் போராட்டத்திலும், பொருளாதார - பண்பாட்டுத்துறைகளிலும் முஸ்லிம்களின் பங்களிப்பைக் குறைத்துக் காட்டுதல், முஸ்லிம் மக்களின் சமூக - அரசியல் இயக்கங்கள் மீது வகுப்புவாத முத்திரை குத்துதல், பாதுகாப்பு - பாராமிலிட்டரி, போலீஸ் ஆகிய துறைகளில் முஸ்லிம்களை ஒதுக்குதல், உருது மொழிக்கு எதிரான உணர்வை வளர்த்தல் போன்ற முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பாகமாகத்தான் பசுவதை எதிர்ப்பையும் பார்க்க வேண்டும்.

சில்லறை இறைச்சி வியாபாரத்தில் பெரும்பாலும் ஈடுபட்டிருப்பவர்கள் முஸ்லிம்களே! பசுவதை எதிர்ப்பு என்று குரல் எழுப்புவதன் மூலம் அவர்களின் பொருளாதாரத்தை நசுக்கிவிடலாம். அதேசமயம் இந்துக்களின் 'புனித விலங்கை' கொல்பவர்கள் என்னும் பொய்ப் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்துவிடலாம்.

தீய நோக்கம் கொண்ட வகுப்புவாத பாசிஸ்டுகளின் இந்தப் பிரச்சாரம் சரித்திர சத்தியங்களுக்கு எதிரானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர் பிரபல வரலாற்று ஆய்வாளர். மனித உரிமைப் போராளி. பேராசிரியர் மற்றும் முன்னாள் வரலாற்றுத்துறைத் தலைவர் கேரள பல்கலைக்கழகம்)

நன்றி: சமரசம் (மாதமிருமுறை - 16-31, 1995)
http://mrpamaran.blogspot.in/2013/04/blog-post_4.html

பசு வழிபாடு
இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப் பெரும்புண்ணியமாகக் கருதுகின்றனர். இந்தப் பசுவைகோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர் பசுவின் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும்,புனிதத்திற்குரியவர்களும்    இருப்பதாக  கதை கட்டி விட்டிருக்கின்றனர்.

*பசுவின் கொம்புகளின் அடியில் – பிரம்மன்,திருமால்
*கொம்புகளின் நுனியில் – கோதாவரி முதலியபுண்ணிய தீர்த்தங்கள்,
*சிரம் – சிவபெருமான்
*நெற்றி நடுவில் – சிவசக்தி
*மூக்கு நுனியில் – குமரக் கடவுள்
*மூக்கினுள் – வித்தியாதரர்
*இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்
*இரு கண்கள் – சந்திரர், சூரியர்
*பற்கள் – வாயு தேவர்
*ஒளியுள்ள நாவில் – வருண பகவான்
*ஓங்காரமுடைய நெஞ்சில் – கலைமகள்
*மணித்தலம் – இமயனும் இயக்கர்களும்
*உதட்டில் – உதயாத்தமன சந்தி தேவதைகள்
*கழுத்தில் – இந்திரன்
*முரிப்பில் – பன்னிரு ஆரியர்கள்
*மார்பில் – சாத்திய தேவர்கள்
*நான்கு கால்களில் – அனிலன் எனும் வாயு
*முழந்தாள்களில் – மருத்துவர்
*குளம்பு நுனியில் – சர்ப்பர்கள்
*குளம்பின் நடுவில் – கந்தவர்கள்
*குளம்பிம் மேல் இடத்தில் – அரம்பை மாதர்
*முதுகில் – உருத்திரர்
*சந்திகள் தோறும் – எட்டு வசுக்கள்
*அரைப் பரப்பில் – பிதிர் தேவதைகள்
*யோனியில் – ஏழு மாதர்கள்
*குதத்தில் – இலக்குமி தேவி
*வாயில் – சர்ப்பரசர்கள்
*வாலின் முடியில் – ஆத்திகன்
*மூத்திரத்தில் – ஆகாய கங்கை
*சாணத்தில் – யமுனை நதி
*ரோமங்களில் – மகாமுனிவர்கள்
*வயிற்றில் – பூமாதேவி
*மடிக்காம்பில் – சகல சமுத்திரங்கள்
*சடாத்களியில் – காருக பத்தியம்
*இதயத்தில் – ஆசுவனீயம்
*முகத்தில் – தட்சிணாக்கினி
*எலும்பிலும், சுக்கிலத்திலும் – யாகத் தொழில்முழுவதும்
*எல்லா அங்கங்கள் தோறும் – கலங்காநிறையுடைய
கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள் எனவும்

பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம்என்று எல்லா தேவதைகளும்வசிக்கின்றனர். செல்வவளம் தரும் திருமகள் இதன்பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியைதொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும் எனவும்

கோமாதாவின் உடற் பகுதியும் அங்கே அருளும்தெய்வங்களும்
1. முகம் மத்தியில் சிவன்
2. வலக் கண் சூரியன்
3. இடக் கண் சந்திரன்
4. மூக்கு வலப்புறம் முருகன்
5. மூக்கு இடப்புறம் கணேசர்
6. காதுகள் அஸ்வினி குமாரர்
7. கழுத்து மேல்புறம் ராகு
8. கழுத்து கீழ்புறம் கேது
9. கொண்டைப்பகுதி ப்ரும்மா
10. முன்கால்கள் மேல்புறம் சரஸ்வதி, விஷ்ணு
11. முன்வலக்கால் பைரவர்
12. முன் இடக்கால் ஹனுமார்
13. பின்னங்கால்கள் ப்ராசரர், விஷ்வாமித்திரர்
14. பின்னகால் மேல்பகுதி நாரதர், வசிஷ்டர்
15. பிட்டம் - கீழ்ப்புறம் கங்கை
16. பிட்டம் - மேல்புறம் லக்ஷ்மி
17. முதுகுப்புறம் பரத்வாஜர், குபேரர் வருணன்,அக்னி
18. வயிற்றுப்பகுதி ஜனககுமாரர்கள் பூமாதேவி
19. வால் மேல் பகுதி நாகராஜர்
20. வால் கீழ்ப்பகுதி ஸ்ரீமானார்
21. வலக்கொம்பு வீமன்
22. இடக்கொம்பு இந்திரன்
23. முன்வலக்குளம்பு விந்தியமலை
24. முன்இடக்குளம்பு இமயமலை
25. பின் வலக்குளம்பு மந்திரமலை
26. பின் இடக்குளம்பு த்ரோணமலை
27. பால்மடி அமுதக்கடல்

கோமாதாவில் (பசு) முப்பத்து முக்கோடிதேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதன்பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.எனவே, கோமாதா பூஜை செய்யும் போது, பசுவைமுன்புறமாக தரிசிப்பதைவிட, பின்புறம் தரிசனம் செய்வதுமிகவும் நன்மை தரும் எனவும்

முப்பத்துமுக்கோடிதேவர்களும்,நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்டவசுக்களும், நவக்கிரகங்களும் பசுவின் உடலில் ஆட்சிசெய்கின்றன. கோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம்.எந்தஜாதி,மதம்,மொழியும் தடையாக இராது.(உருவ வழிபாடுஇல்லை என சொல்லும் மதத்தினர் கூட கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச்செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்) கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம்நீங்கிவிடும்;குழந்தைபாக்கியம் உண்டாகும்.கெட்டசக்திகள் நெருங்காது. முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கிவிடும்.!!! என்றெல்லாம் கதை கட்டி விட்டிருக்கின்றனர்.
மாடுகளுக்கு நீதி மனிதர்களுக்கு அநீதி; ‘மாடு’பிமான தேசம்!

மாட்டுத்தீவின ஊழல் செய்தவருக்கு தண்டனை தந்தாகிவிட்டது. மனிதக் கொலைகள் செய்தவருக்கு பிரதமர் பதவி.

1000 ஆண்டுகளாக இந்திய இந்து அரசியலில் எப்போதும் ஒடுக்கப்பட்ட மனிதர்களைவிட மாடுகளே மகத்தானவை. மாடுகளைத் தொட்டால் புனிதம். மனிதர்களைத் தொட்டால் தீட்டு. மாடுகளை கொன்றால் பாவம். குற்றம். தண்டனை. மனிதர்களைக் கொன்றால் வீரம். நல்லாட்சி. வெகுமதி. மாடுகளுக்கு நீதியும் மனிதர்களுக்கு அநீதியும் வழங்கும் பண்பாடு.மாட்டுத் தீவனத்திற்கு தருகிற மரியாதையைக்கூட மனிதர்களுக்குத் தராத நாடு.

வாழ்க கோமாதா. வாழ்க ஜனநாயகம். வாழ்க சிறுபான்மை மக்களின் கொலைகள். வாழ்க வருங்கால பிரதமரான புனிதப் பசு.
யஜுர் வேதத்தில் பசுவைக் கொன்று யாகம்!

சமஸ்கிருதத்தில் யாகத்துக்குப் பெயர் தமிழில் பொருள்
1. கோஸவம் பசுமாடு காளைமாடு இவைகளைக் கொல்லும் யாகம்
2. வாயவீய ஸ்வேதபக வாயு வேதனைக்காக வெள்ளைப் பசு யாகம்
3. லத்ஸோப கரணம் கன்றுக்குட்டியை கொலை செய்து நடத்தும் யாகம்.
4. அஷ்டதச பசு விதானம் பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்
5. ஏகாதசீன பசுவிதானம் பதினொன்று பசுக்களை கொல்லும் யாகம்
6. க்ராமாரண்ய பசு ப்ரசம்ஸா நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுவைக் கொன்று யாகம் செய்தல்.
7. உபாகரண மந்த்ரம் யாகத்தில் கொல்லப்படும் பசுவைச் சுத்தி செய்யும் மந்திரம்.
8. கவ்ய பசுவிதானம் பசு மாட்டைக் கொன்று நடத்தும் யாகம்
9. ஆதித்ய தேவ தாகபசு சூரிய தேவதைக்கு பசு யாகம்
- மத விசாரணை நூல். பக்கம் 79,80 -சிவானந்த சரஸ்வதி

கல்லு சாமிக்கு 1001 லிட்டர் பால் ஊற்றி அபிஷேகம் என்றால், இதைவிட ஈவு இரக்கமற்ற குரூரமான செயல் வேறு உண்டா? ஒரே ஆண்டில் இந்தியாவில் மட்டும் 25 லட்சம் குழந்தைகள் மரணம் அடைகின்றனர்.

முதல் பிறந்த நாளைக் கொண்டாட முடியாமல் மரணம் அடையும் குழந்தைகள் இந்தியாவில் ஆயிரத்துக்கு 58 ஆகும். உலக அளவில் எடைக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகளில் 35 விழுக்காடு இந்தியாவில்தான்.

போதிய சத்துணவு கிடைக்காத கொடுமையால் ஏற்படும் மரணம் இது. இந்த யோக்கியதை உள்ள இந்தியாவில் கல்லு சாமிக்கு 1001 லிட்டர் பால் ஊற்றி அபிஷேகம் என்றால், இதைவிட ஈவு இரக்கமற்ற குரூரமான செயல் வேறு உண்டா?

பால் சத்துள்ள உணவு அல்லவா! அதை நாசப்படுத்தலாமா?

இத்தகைய பேர்வழிகளை கொலைக் குற்றத்துக்குச் சமமாக மதித்துத் தண்டனை கொடுக்கவேண்டாமா?

பக்தியின் பேரால் - உற்பத்தி நாசம் என்ற கொடுமையல்லவா இது? அத்தியாவசியப் பொருள் நாசத் தடுப்புச் சட்டம் என்ன செய்கிறது? நன்கு குறட்டை விட்டுத் தூங்குகிறதோ!

கடவுளுக்கு பாலாபிசேகம் குடத்தில் என்றாலும் ஒரு குழந்தையின் தொண்டை நனைக்குமோ?!

தட்டில் கற்ப்பூரத்தைக் கொளுத்தி எடுத்துக் கொண்டு, பசு மாட்டின் பின்புறம் மலம், மூத்திரம் வெளிவரும் உறுப்புகளுக்குக் கற்ப்பூர தீபாராதனை
இந்து மதத்தின் எல்லாக் கடவுள்களும் பசு மாட்டில் வசிக்கின்றன என்ற கருத்தின் அடிப்படையில்?? பசு மாட்டைக் கும்பிட்டு இதைச் செய்ய ஆரம்பித்து விட்டனர். பசுவின் மூத்திரம் வரும் வழியில்தான், லட்சுமி வாசம் செய்கிறாள் என்கிறது, இந்து மதம்! அதனால்தான், வைணவக் கோயிலில் விடிந்ததும் பூஜை நடக்கும்போது பெருமாள் முகத்திற்கு நேரே பசு மாட்டின் யோனியைக் காட்டுகிறார்கள்! கடவுள் லட்சுமியை தரிசனம் செய்கிறதாம்.


அடுத்ததாக B.J.P. அரசு கொண்டு வரும் திட்டம்
பசுவின் புனிதத்தை காப்பாற்ற இனி மாட்டிறைசி உட்கொள்ளும் நாடுகள் எதனுடனும் இனி இந்தியா வரத்தகமற்றும் எந்த ஒரு தொடர்பும் வைத்துக்கொள்ளப்போவது இல்லை என்றும்.

இதையே சட்டமாக கொண்டு வந்து இனி யாராவது டாலர் பௌன்டு என்ற வார்த்தைகளை சொன்னால் கூட கடும் தண்டனைகளை கொடுக்கும் வகையில் அவசர சட்டம் ஒன்றையும் கொண்டு வர உள்ளது.

இதன் விளைவாக வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் நாடு திரும்ப கால அவகாசம் கொடுக்கப்படும். அப்படி திரும்புவர்கள் தவிர மற்ற அனைவரின் கடவு சீட்டுகளை ஒரே அடியாக முடக்குவதுடன், அவர்களுக்கு என்று இந்தியாவில் இருக்கும் சொத்துகளை பரிமுதல் செய்து B.J.P. கொள்கை பரப்புக்கும் மாடு பாதுகாப்பு திட்டத்திற்கு செலவுசெய்யும் திட்டத்தையும் ஒரு அவசர சட்டமாக கொண்டு வரும் என்றும் தெரிகின்றது.

அது மட்டும் இல்லாமல், இனி இந்தியாவில் ஒரு குண்டூசி விற்பது என்றாலும் அவைகளை செய்பவர்களில் யாரும் மாட்டிறைச்சி சாப்பிட்டோராக இருக்க கூடாது என்றும் சட்டம் கொண்டுவர ஆலோசனை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இனி உயிர்காக்கும் மருந்தாக இருந்தால் கூட அதை பசக சோதனை செய்து சுத்த சைவத்தாரால் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரை வழங்கும் வரை எல்லோரும் காத்துக்கிடக்க வேண்டி இருக்கும்.

மாட்டிறைச்சி சாப்பிடும் உலகத்தாரது செய்திகளை இனி இந்திய செய்தி தாள்கள் வெளியிடவும் தடை வரும்.

கூகுல் மற்றும் இணையம் எல்லாம் மூடி கோகுல் என்ற தேடுபொறியும், கோணையம் என்ற ஒன்றும் இந்தியாவில் அறிமுகபடுத்தபடும். இதை தவிர கடலோர இடங்களில் தவறியும் கூகுலோ அல்லது இணையமோ பயன்படுத்துவது தெரிந்தால் எல்லை தாண்டிய பயங்கரவாதமாக கருதி கொல்லப்படும் தண்டனை முதல் என்ன என்ன தண்டனைகள் கொடுக்கலாம் என்று அலோசித்து வருகிறார்கள்.

பசுவை வதைத்து பெறப்படும் பால், வெண்ணை, நெய் பொருட்களுக்கு நிரந்தர தடையையும் அறிவிக்க உள்ளது. வேண்டும் என்றால் கோமியம், மற்றும் அதனுடன் கிடைக்கும் சானியை மட்டும் வேண்டும் என்றால் பயன் படுத்திக்கொள்ளலாம் என்றும் ஒரு அவசர சட்டம் தயாராகிக்கொண்டு இருப்பதாக தகவல்.

இனி மாட்டிறைச்சி காரர்களில் உடையான கோட்டு சூட்டுகளுக்கும் தடையை அறிவிக்க உள்ளார்கள் B.J.P வினர். இனி எல்லோரும் வேட்டி சட்டைக்கு மாற வேண்டியது தான். இனி எங்காவது எவனாவது பேன்டு சட்டையில் பார்த்தால் அவ்வளவு தான்.

இப்படியே ஒரு நீண்ட பட்டியல் போகுது, அப்படியே மறுமுறையும் படிக்கும் போது ஏதோ தாலிபான் ஆட்சியின் அடிப்படைவாத அரசு பட்டியல் மாதிரி தெரியுது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது......................Posted by பனிமலர்


**************

1 comment:

 1. முஹம்மத் அலி ஜின்னா said...

  “நான் ஒரு ப்ராஹ்மின். மாட்டுக்கறியை விரும்பி உண்கிறேன். நாகலாந்து, மிசோரத்திற்கு வந்து பாருங்கள், பிறகு நடப்பது தெரியும்” என்று பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு ப்ராஹ்மணர் மார்கண்டேய கட்ஜூ சவால் விடுத்துள்ளார்.

  கடந்த மே மாதம் 27ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமித் ஷா, “குஜராத்திற்கு வந்து மாட்டுக்கறி சாப்பிடுங்கள். அங்கு அது தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு மார்கண்டேய கட்ஜூ சாப்பிட்டால், அப்புறம் என்ன நடக்கும் என்று அவர்க்கு தெரியும்” என்று கூறியிருந்தார்.

  இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ப்ராஹ்மணர் மார்கண்டேய கட்ஜூ, ”அமித் ஷா மாட்டிறைச்சி தடை செய்யப்பட வேண்டும் என்று நாகாலாந்து அல்லது மிசோரம் ஒரு பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாக சொல்ல முடியுமா? அப்புறம் என்ன நடக்கும் என்று தெரியும்.

  அவர் ஒரு தைரியமான மனிதன் என்றால், எனக்கு மிரட்டல் கொடுப்பதற்கு பதிலாக, அவரை இந்த பரிசோதனை முயற்சியை செய்யட்டும்” என்று பதில் சவால் விடுத்துள்ளார்.

  கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ’மாட்டு இறைச்சி இல்லாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம்’ என்று கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்திருந்த மார்கண்டேய கட்ஜு, “நான் ஒரு இந்து ப்ராஹ்மின். ஆனாலும், நான் மாட்டுக்கறி சாப்பிடுகிறேன். இனிமேலும் சாப்பிடுவேன்.

  மாட்டுக்கறி சாப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது?. உலகத்தில் 90% பேர் மாட்டு இறைச்சி சாப்பிடுகின்றனர். அவர்கள் எல்லோரும் பாவம் செய்தவர்களா? மாடு புனிதமானதாகவோ, நமது தாயாகவோ இருக்க முடியும் என்பதை நான் மறுக்கிறேன்.

  ஒரு விலங்கு எப்படி மனிதர்களுக்கு தாயாக இருக்க முடியும்? இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உட்பட, 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள்தான் ” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  ReplyDelete