Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

மனுதரும சாத்திரமும் பெண்களும்.

 கணவர், மனைவியை அடிப்பதில் தவறில்லை. பெண்களையும், சூத்திரர்களையும் கொல்லுவது பாவமல்ல என்கிறது மனுதர்மம். பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கிறது கீதை.பெண்களை ஒழுக்கக் கேடானவர்களாகவும் மயக்கும் குணம் கொண்டவர்களாகவும் மனுதர்மம் சித்தரிக்கிறது.

பெண்களுக்கு தனி அடையாளங்களையோ சுயேச்சையான செயல்பாடுகளையோ மனு தர்மம் நிராகரிக்கிறது. அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை அது அனுமதிக்கவில்லை.

இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர் —மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 3

எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது. —மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 147

பெண்களை ஒழுக்கக் கேடானவர்களாகவும் மயக்கும் குணம் கொண்டவர்களாகவும் மனுதர்மம் சித்தரிக்கிறது. பாலியல் ரீதியில் ஒழுக்கக் கேடுகள் எவையாவது நடந்தால் அதில் ஆணுக்கு பொறுப்பு எதுவுமில்லை என்பது போலவும் அவனை ஒரு அப்பாவியைப் போலவும் கருதி பெண்களை மனுதர்மம் இழிவுபடுத்துகிறது.

தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள். —மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 213

புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர். —மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 214.

பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப்படுவனவற்றையும் கேட்பீராக. -—மனுதரும சாத்திரம் 9, அத்தியாயம் செய்யுள் 19

இவ்வாறு பெண்களை இழிவுப்படுத்தும் மனுதர்மம் மாதரைக் காப்பாற்றுவதற்கான காரணத்தையும் விளக்குகிறது .

வீட்டிற்கு வேண்டிய பாத்திரம் முதலியவற்றை தேடிப் பெறுவதற்காக பொருளை அவளிடம் கொடுத்தும் அதனைக் காப்பாற்றி வைத்து வேண்டிய போது செலவிடும்படி செய்தும் தட்டு முட்டுச் சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ளச் செய்தும் வீட்டை துப்புரவாக்கி வைத்தல், தேவ பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களைப் பொறுப்பு, பாத்திரம் படுக்கை முதலியவற்றைச் சரியாக கவனித்துக் கொள்ளல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து அவற்றை அவளைக் கொண்டு செய்வித்தல் போன்றவற்றாலும் அவளது மனம் வேறிடம் செல்லாமற் காக்க! —மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 11

கணவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் பெண் அவனுக்கு அடங்கி நடக்க வேண்டுமென்று விதிக்கிறது மனுதர்மம்.

கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும். —மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 78.

இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக. —மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 154

மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும் இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது. —மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 156.

https://ta.wikipedia.org/wiki/மனுதரும_சாத்திரம்

**********
.
கணவர், மனைவியை அடிப்பதில் தவறில்லை. பெண்களையும், சூத்திரர்களையும் கொல்லுவது பாவமல்ல என்கிறது மனுதர்மம். பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கிறது கீதை.
.
மனைவியை அடித்து, கையை உடைத்த கணவன் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது விசாரணை செய்த நீதிபதி முத்துசாமி அய்யர், மனுதர்மத்தை எடுத்துக்காட்டி மனுதர்மப்படி மனைவியை அடிப்பது குற்றமல்ல என்று தீர்ப்பளித்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா? இவர்தான் முதல் இந்திய நீதிபதி.

என் கணவர் அடிப்பதால், அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும்' எனக் கோரி, பெண் ஒருவர் தாக்கல் செய்த மனு, சமீபத்தில், கருநாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பக்தவத்சலா, குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும் கணவர், மனைவியை அடிப்பதில் தவறில்லை. இது போன்ற விஷயங்களை, குழந்தைகளின் நலன் கருதி, பெண்கள் சகித்துக் கொள்ள வேண்டும்' என தெரிவித்தார்.

மருமகளை மாமியார் காலால் எட்டி உதைப்பது, என் மகனிடம் சொல்லி உன்னை விவகாரத்து செய்ய வைப்பேன் என்று மாமியார் மருமகளை மிரட்டுவது எல்லாம் கொடூரமான குற்றச் செயலாகக் கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

முதல் இந்திய நீதிபதியாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்ட முத்துசாமி அய்யர், ‘மனைவியை கணவன் அடிப்பது தவறல்ல’ என்றும் தீர்ப்பு வழங்கிய அதே அடிப்படையிலான சட்டங்களும் அரசு அமைப்புகளும்தான் இன்றும் நடைமுறையில் உள்ளன. 2009-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.பி.சின்காவும், சிரியாக் ஜோசப்பும் ‘மாமியார் மருமகளை அடிப்பது, கணவன் மனைவியை விவாகரத்து செய்வதாக மிரட்டுவது இவை எல்லாம் குற்றமல்ல’ என்று தீர்ப்பளித்தனர்.

     **********

 படிக்கவும்:-   பகவத்கீதை புனித நூலா? 'மனுதர்ம' கையேடுவா?

 ***************

 


No comments:

Post a Comment