Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

கடவுளோடு புணர ஆசைப்படுகிறாளாம் ஆண்டாள் என்னும் பக்தை!

நாள்தோறும் நாராயணனைப் புணர்வதற்கு உத்தரவாதம் கொடுங்களேன் என்று ஆண்டாள் கேட்கிறாள். உறவு முறையில் பார்க்கும்போது, பக்தை என்பவள் பகவானின் மகள்தான் ஆனாலும் அந்த மகளைத் தான் பகவான் கட்டிக் கொண்டு குடும்பம் நடத்தினானாம்! நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் என்று மானம் உள்ளவர்கள் கொதிக்கலாம். ஆனால் பக்தி என்று வந்து விட்டால் அனைத்தையும் உதிர்க்க வேண்டியதுதானே!
*****************

பேனா பெண்ணும் நாணி குனிகிறாள்!

கோவையில் கவிஞர் சிற்பிக்குப் பாராட்டு விழா. மகிழ்ச்சியே!

அவ்விழாவில் கலந்து கொண்ட தினமணி ஆசிரியர் திருவாளர் வைத்தியநாதய்யர் அமுத ஊற்றாக சில வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.
கவிஞர்களே, விரசத்தை விலக்கிக் கவிதை எழுதுவீர்!

சபாஷ், அருமையான அறிவுரை! அவருக்கு ஒரு பாராட்டு - கைலாகு கொடுக்கலாம்தான்! அதே நேரத்தில் கம்பர் விழாவில் கலந்து கொண்டு கம்பனின் காமரசப் பாடல்களை பீப்பாய் பீப்பாயாகத் திறந்துவிட்டு ரசித்து ரசித்து, எச்சில் சொட்டச் சொட்ட பேசக் கூடியவர்களா விரசத்தை வெறுத்து வார்த்தைகளைக் கொட்டுவது? இவ்வாண்டு கம்பர் விழா என்று சொல்லி தினமணியில் எவ்வளவு பக்கங்கள் தெரியுமா?

கம்பன் காவியத்தில் நயங்கண்டு சொட்டச்சொட்டப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் விரசத்தைக் கண்டித்துப் பேச யோக்கியதை உடையவர்கள்தானா?

வாராழிகலசக் கொங்கையில் ஆரம்பித்து ஆபாசக்கடலில் குளித்து முத்தெடுக்கக் கூடியவர்கள் விரசத்தை வெறுப்பது போல பாசாங்கு செய்யலாமா?

கடவுள் காவியம் என்று சொல்லி ஆபாசக் காவியங்களை அறிமுகப்படுத்தியுள்ளவன் கம்ப நாட்டாழ்வான்!அந்தக் காவியத்தின் யோக்கியதையை டோஸ் 1 டோஸ் 2 என்று கூறி கம்பனைப் பிழிந்தெடுத்து ரசமாக அல்லவா தோலுரித்துக் காட்டினார் அறிஞர் அண்ணா!


வாராழி கலச கொங்கை
வஞ்சி போல் மருங்குவாள் தன்
தாராழிக் கலைசால் அல்குல்
தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில் தங்கும் பாந்தமும்
பணி வென்றோங்கும்
ஓராளித் தேரும் கண்ட உனக்கு நான் உரைப்பதென்ன?

என் மனைவி எப்படிப்பட்ட அழகி தெரியுமா? சீதாப் பிராட்டியாரின் கொங்கை எப்படி இருக்கும் தெரியுமா... என்று ஆரம்பித்து ஒவ்வொரு உறுப்பின் அழகையும் அளவையும் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமன் மகாலட்சுமியின் அவதாரமான சீதையைப்பற்றி பிரம்மச்சாரியாகிய அனுமானிடம் அடையாளமாகச் சொல்லி அனுப்பினான் என்று கவிச்சக்ரவர்த்தி கம்பன் பாடுகிறானே - அதைப் பற்றி விமர்சித்து விட்டல்லவா விரசத்தை வெறுக்கு முன் இந்த ஆபாசக் குப்பைகளை கொளுத்தி விட்டல்லவா - வாயைத் திறக்க வேண்டும் வைத்தியநாதய்யர்கள்!

பெண் பக்தையான ஆண்டாள் விரகதாப வெறி எடுத்து கடவுளிடம் விண்ணப்பம் போட்ட திருப்பாவையைத் தெருவுக்குத் தெரு தீ வைத்துக் கொளுத்தி விட்டல்லவா தினமணி அய்யர் விரசத்தைப் பற்றி வெறுத்துப் பேச வேண்டும்!

கடவுளோடு புணர ஆசைப்படுகிறாளாம் ஆண்டாள் என்னும் பக்தை (கசுமாலம்! இதையெல்லாம் எழுதித் தொலைய வேண்டியுள்ளதே!)

முத்தன்ன வெண் முறுவல்
செவ்வாயும் முலையும்
அழகழிந்தேன் நான்
புணர்வதோர் ஆசையினால்
என் கொங்கை கிளர்ந்தது . . . . (இத்தியாதி, இத்தியாதி கொக்கோக லீலைகள் - பக்தி எனும் முக மூடியில்) திருக்கடையூரில் உள்ள அபிராமி கடவுளைப் பற்றி பக்தன் அபிராமி பட்டன் பாடிய அபிராமி அந்தாதியை உச்சி மோந்து மெய்மறந்து பாடி உருகும் வைத்திய நாதய்யர்காள்!

வாயை மூடுங்கள்.

விரசத்தையும், விரகதாபத்தைப் பற்றியும் நீங்களா பேசுவது? இந்து மதத்தின் ஒவ்வொரு அசைவும் மேற்கண்ட சமாச்சாரங்கள் தானே! உங்கள் கோயில்களில் இருக்கும் சிற்பங்களும், தேர்களில் தீட்டி வைத்திருக்கும் சமாச்சாரங்களும்,
அய்யய்ய, பேனா பெண்கூட நாணி தலை குனிகிறாளே!

--------------- ”விடுதலை” 2-8-2011
http://thamizhoviya.blogspot.com/2011/08/blog-post_2512.html

ஆண்டாள் சூ(கூ)டிய பிரதாபம்!
ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்குப் பயணம்

ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.2 திருப்பதி வெங்கடாசலபதி கோவில், புரட்டாசி விழாவின் அய்ந்தாம் நாள் கருட சேவை அன்று, பெருமாளுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலையை சாற்றி சிறப்பு பூஜை நடப்பது உண்டு. இதற்காக நேற்று, ஆண்டாள் சூடிய மாலை, திருப்பதிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதையொட்டி, நேற்று காலை ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, மாலை, கிளி சாற்றி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பின், ஆண்டாள் சூடிய மாலை, கிளி ஆகியவற்றை மாடவீதி, கந்தாடை வீதி வழியாக சுற்றி வரப்பட்டு, ஸ்தானி கம் ரமேஷ், கிச்சப்பன் ஆகியோரால் திருப் பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.-----தினமலர் 2-10-2011

உருவமற்றவர் கடவுள்; கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே, வெங்கடாசலபதி என்றும், கபாலீஸ்வரன் என்றும் அருணாசலேஸ்வரன் என்றும், பழினியாண்டவர் என்றும், அங்காளபர மேஸ்வரி என்றும் கொட்டி அளப்பது சரியா?

அதோடு விட்டார்களா? இந்தக் கடவுள்களுக்கு மனைவிகள், வைப்பாட்டிகள், பிள்ளைகள் என்று ஒரு பட்டியலைக் கூறுகின்றார்களே அது எப்படி?

கடவுள்களுக்குள் சண்டை, குத்து வெட்டு, காதல், கற்பழிப்பு, பள்ளி யறை என்று கருத்தழிந்து எழுதிக் குவித்துள்ளனரே - இதற்கான நியாயம் என்ன?

என்று கேட்டால் பதில் சொல்ல வக்கில்லாமல் கருப்புச் சட்டைக்காரர்கள் இப்படித்தான் கேள்வி கேட்பார்கள்; விடுதலைதானே, அப்படித்தான் எழுதும் என்று பதில் சொன்னால் போதுமா?

இவர்கள் நம்பும் நக்கீரனும் கடவுளும் கூட விவாதம் செய்தனர் என்று கூறவில்லையா? அப்படி இருக்கும் போது நாம் விவாதத்திற்கு அழைத்தால் வழுக்கிக் கொண்டு ஓடுவானேன்?

ஸ்ரீரெங்கநாதன் என்ற கடவுளுக்குப் பக்தையாம் ஆண்டாள். இதன் பொருள் தந்தை - மகள் என்ற உறவுதானே?

ஆனால் இங்கு என்ன நடக்கிறது? மகள் தந்தை மீது காதல் கொள்கிறாளாம்.

தன்னுடைய விரக தாபத்தை எல்லாம் வெளிப் படுத்துகிறாள். தந்தையாகிய கடவுளோடு புணர்வதோர் ஆசையால் கொங்கை கிளர்ந்து குமைந்துக் குதூகலிக்கிறதாம். (பக்தர்களே, நாக்கைப் பிடுங்கிக் கொள்ளாதீர்கள் - ஸ்ரீஆண்டாள் எழுதிய நாச்சியார் திரு மொழியில் உள்ள பாட்டு தான் இது).

தந்தையும் மகளும் புணரும் ஒழுக்கத்தைத் தானே இந்த அர்த்தமுள்ள இந்து மதம் போதிக்கிறது.

இதுபற்றி ராஜகோபாலாச்சாரியார் என்ன எழுதினார் தெரியுமா?

ஆண்டாள் என்னும் ஸ்திரீ இருந்ததேயில்லை. நாலாயிரப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவையல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் (திரிவேணி செப்டம்பர் 1946) என்று எழுதியிருக்கிறாரே!

ஆச்சாரியார் என்ன புராண மறுப்பாளரா? இந்து மத எதிர்ப்பாளரா? அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது.

பிறகு ஏன் இப்படி எழுதுகிறார்? இவ்வளவு ஆபாசமாக ஒரு பெண் எழுதி இருப்பதாக இருக்கிறதே, மானம் போகிறதே! விரக தாபம் எடுத்து கடவுளோடு புணர வேண்டும் என்று துடிப்பதாகப் பாடல் எழுதினால் படிப்பவர்கள் காரித் துப்பமாட்டார்களா என்ற எண்ணத்தில் இப்படி கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

ஆச்சாரியார் சொன்னதை ஏற்றுக் கொண்டால் வெங்கடாசலபதிக்குச் சாத்துவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய மாயை எடுத்துச் செல்வதாகக் கூறும் இந்தக் கதைகளைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிய வேண்டும்.

இல்லை, இல்லை. ஆச்சாரியார் சொல்லுவது அபவாதம்! புராண விஷயத்தில் ஒன்றைத் தப்பு என்று ஒப்புக் கொண்டால் அடுத்தடுத்து ஒவ்வொன்றையும் பொய்யென்று சொல்லக் கூடிய சூழல் ஏற்பட்டுவிடும் என்று சொல்லுவார்களேயானால்,

தகப்பனைக் கல்யாணம் செய்து கொண்டதையும் தந்தையோடு புணர மகள் ஆசைப்பட்ட அசிங்கத்தையும், ஆபாசத்தையும், அருவருப்பையும், அநாகரித்தையும் ஒப்புக் கொண்டு, எங்களின் அர்த்தமுள்ள இந்து மதத்தின் பெருமையே இது தான் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். எதைச் செய்ய ஆசை? ஒழுக்கத்தோடு சிந்திப்பீர்!

http://thamizhoviya.blogspot.com/2011/10/blog-post_10.html

ஆண்டாள் பிரதாபம் ஆடிப்பூரம் ஸ்பெஷலாம்; அது என்னப்பா ஆடிப்பூரம்?

திருவில்லிபுத்தூரில் உள்ள பெருமாள் கோயிலில் ஒரு நந்தவனம். அந்த நந்தவனத்தில் நாள்தோறும் பூக்களைப் பறித்து, பெருமாளுக்குச் சூட்டும் பணி பெரியாழ்வாரைச் சார்ந்தது.

ஒரு நாள் பூ பறிக்க அந்த நந்தவனத்துக்குச் சென்றபோது, குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டதாம்! ஆச்சரியத்தோடு அங்கு மிங்கும் கண்களைச் சுழல விட்ட அய்யங்காரின் கண்களில் ஒரு குழந்தை பட்டது. அதைத் தூக்கி மார்போடு வாரி அணைத்து, வளர்த்து வந்தாராம். (பூமாதேவிதான் அந்தக் குழந்தையாகப் பிறந்தது என்பது ஒரு புராண அளப்பு!)
சீதைகூட அனாதையாகக் கண்டு எடுக்கப்பட்ட கதை வைணவத்தில் இது ஒரு தனிப் பாணி போலும்!

திருவல்லிபுத்தூரில் அந்தக் குழந்தையைக் கண்டெடுத்த நாள்தான் ஆடிப்பூரமாம்.

கோதை நாச்சியார் என்று அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டி வளர்த்தார் பெரியாழ்வார்.வளர்ந்த அந்தக் குழந்தை என்ன செய்ததாம்? பெருமாளுக்குத் தம் தந்தையார் நாள்தோறும் கட்டி வைத்த பூமாலையை, பெருமாளுக்கு அணிவிப்பதற்கு முன்பே தன் கழுத்தில் அணிந்து அழகு பார்ப்பாளாம்.

ஒரு நாள் அவ்வாறு ஆண்டாளாகிய (கோதை நாச்சியார்) அந்தப் பெண் தன் கழுத்தில் பெருமாளுக்குரிய மாலையை அணிந்திருந்தபோது பெரியாழ்வார் பார்த்துத் திடுக்கிட்டாராம்.

பகவானுக்குச் சூட்டப்பட வேண்டிய மலையை பாவ ஜென்மமான மனிதன் சூட்டி மகிழலாமோ! அபச்சாரம் அல்லவா!மீண்டும் நந்தவனம் சென்று, புதிதாகப் பூக்களைப் பறித்து மாலை கட்டிக் கொண்டு போனபோது பெருமாள் மறுதலித்தாராம்.

ஆண்டாள் கழுத்தில் அணிந்த மாலைதான் தமக்கு வேண்டும் என்று ஆண்டவன் அடம் பிடித்தானாம்.சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்! என்ற பட்டம் இவ்வாறு தான் வந்ததாம்.

பக்தையாக அந்தப் பெண் எப்படியாம்? பிஞ்சில் பழுத்தது.

பகவானாகிய கண்ணனைக் கலியாணம் பண்ணிக் கொள்ள ஆசைப்பட்டதாம்.
கடவுளுக்கும் பக்தைக்கும் காதலாம். திருவரங்கத்தின் கோபுரத்திலிருந்து, திருவரங்கத்தில் உள்ள தம் காதலியான ஆண்டாளுடன் காதல் கண்களை சிமிட்டுவாராம்.

உறவு முறையில் பார்க்கும்போது, பக்தை என்பவள் பகவானின் மகள்தான் ஆனாலும் அந்த மகளைத் தான் பகவான் கட்டிக் கொண்டு குடும்பம் நடத்தினானாம்! நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் என்று மானம் உள்ளவர்கள் கொதிக்கலாம். ஆனால் பக்தி என்று வந்து விட்டால் அனைத்தையும் உதிர்க்க வேண்டியதுதானே!

இந்தக் கதை எப்படியோ இருக்கட்டும்! பக்தையாகிய அந்த மகள், தகப்பனாகிய அந்தக் கடவுளிடம் மையல் கொண்டு பாடிய பாடல்கள் ஒன்றா இரண்டா? 143 பாடல்கள் இந்தத் தொகுப்புதான் நாச்சியார் திருமொழி என்பதாகும்.

மார்கழி நோன்பிருந்த ஆண்டாள் தன் தோழியரை விடியற்காலையில் எழுப்புவதாக அமைந்த 30 பாசுரங்கள் அடங்கிய நூலுக்கு திருப்பாவை என்று பெயர். இப்பாடல்களுக்குமுன் கொக்கோகம் தோற்று ஓடும் ஓடியே விடும்!

மின்சாரம் அவர்கள் 14-8-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

http://thamizhoviya.blogspot.com/2010/08/blog-post_1585.html

திருப்பாவை ஆண்டாளின் ஆபாசப் பாடல்கள்

மார்கழி மாதத்தில் வைணவர்கள் திருப்பாவை என்ற ஆண்டாளின் பாடல்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தினமணி, தினமலர், போன்ற நாளேடுகள் நாள் தோறும் திருப்பாவையிலிருந்து ஒரு பாடலை வெளியிட்டும் வருகின்றன.

திருப்பாவையில் 30 பாடல்கள் உள்ளதால் ஒரு மாத காலத்திற்குச் சரியாகவே பொருந்திவிடுகிறது.

திருவில்லிப்புத்தூர் கோயிலில் உள்ள பெருமாளை பிஞ்சிலேயே பழுத்து தம் கணவனாகக் கொள்ள வேண்டும் என்ற வெறியில் வெளிவந்த பாடல்களாக அமைந்துள்ளன.

19 ஆவது பாடல் குத்து விளக்கெரிய என்னும் பாடல். அதிலே ஒரு வரி வருகிறது

குத்துவிளக் கெரியக்
கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறி
கொத்தலர் பூங்குழல்
நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த
மலர்மார்பா வாய்திறவாய்.

கடவுள் என்றால் தந்தை - பக்தை என்பவள் மகள் - தந்தை தாய் உற வைக் கொச்சைப்படுத்தும் வகையில் பாடப்பட்ட காமவெறிப்பாடலுக்கு எப்படி எப்படியோ விளக்கம் கொடுத்துப் பார்க்கிறார் கள்.

அமுத நிலையம் திருப்பாவைப் பாடல்களையும், விளக்கவுரையையும் தந்துள்ளது.

அதில் ஒரு வேடிக்கை. நப்பின்னை கொங்கை மேல் என்ற வரிக்கு மட்டும் பொருள் சொல்லாமல் தப்பித்து ஓடிவிடுகிறது. கடவுள் தன் மனைவியின் மார்பகத்தில் படுத்துக்கிடந்ததையெல்லாம் ஒரு பக்தை பாடுகிறாள் என்றால், அந்தப் பக்தையின் விரக தாபத்தைத்தான் பச்சையாக வெளிப்படுத்தும்.

இவ்வளவு ஆபாசமாக ஆண்டாள் பாடல் இருப்பதால்தான் ராஜாஜி என்ன சொல்லுகிறார்? அவை யெல்லாம் ஆண்டாள் பாடியதல்ல; அவரின் தோப்பனார் பெரியாழ்வார் சில பாசுரங்களைப் பாடி, அதை ஆண்டாள் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது என்று சொல்லி, (திரி வேணி இதழ் - 1946 செப்டம்பர்) தப்பித்துக் கொள்கிறார்.

காரணம் ராஜாஜியும் வைணவர் ஆயிற்றே. ஆண்டாளின் ஆபாசப் பாடல்கள் வைணவத்திற்குக் கேவலம் என்று அவர் எண்ணியே இவ்வாறு எழுதியுள்ளார்.

இன்னொன்றும் முக்கியம் - யாதவகுல மக்கள் கவனிக்க வேண்டியது.

28 ஆவது பாடல்:

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம், அறிவொன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன்தன்னைப் பிறவிப் பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்

என்பதில் ஆயர் குலத்தைக் குறிக்கும் பொழுது, அறிவொன்றும் இல்லாதவர் என்று குறிப்பிட்டுள்ளதைக் கவனிக்க வேண் டும்.

ஆனாலும் ஆயர்குலத்தோர்கள் அந்தக் கண்ணனைத்தான்,ஆண்டாளைத்தான் கடவுள்களாகக் கும்பிடுகிறார்கள்.--------------- மயிலாடன் அவர்கள் 14-1-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை.

http://thamizhoviya.blogspot.com/2011/02/blog-post_02.html

ஆண்டாளின் கடவுளின் மேல் காமம்.
 
அதாவது ஆண்டாள் கண்ணனைப் பார்த்து பாடும் பாடல்கள்.

‘அவரைப் பிராயம் தொடங்கி
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதேன்…’ என்கிறாள்.

பெரிய மார்பகங்கள் அவனுக்கே என உறுதிபடக் கூறுகிறாள் ஆண்டாள். அப்படியானால், இது ஆபாசம் இல்லையா?

 மேலும் ஒரு வரியைப் பார்க்கலாம்,
‘சாயுடைவயிறும் என் தடமுலையும்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
தரணியில் தலை புகழ் தரக்கற்றியே’

ஆண்டாளுக்குதான் என்ன ஆசை . மேலேயும் கீழேயும் அவன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்!

உடனே நம்ம ஒழுக்க வாதிகள்..”அட..அவுய்ங்க பக்தியால தடவ சொல்றாங்கப்பா” என இழுக்கலாம். அப்படியானால் இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.

‘பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும்…
என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ’

கடவுளுடன் உடல் உறவு கொள்ள வேண்டுமாம் ஆண்டாளுக்கு. அந்த ஆசை மனதில் மேலோங்கி வளர்ந்துவிட்டதால், மார்பகம் வருந்துகிறதாம், குதூகலிக்கிறதாம், உயிரை எடுக்கிறதாம், ஆகவே எதையாவது செய்து நாள்தோறும் நாராயணனைப் புணர்வதற்கு உத்தரவாதம் கொடுங்களேன் என்று ஆண்டாள் கேட்கிறாள்.


******
இத்தளத்தின் அனைத்து பதிவுகளும்

((( இங்கே. )))

"க்ளிக்" செய்து அனைத்தையும் படித்து சிந்தியுங்கள்.

******

No comments:

Post a Comment