Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள இரண்டாம் பிரகாரம், ஈசானிய மூலையில் துலுக்க நாச்சியார் சன்னதி உள்ளது.இங்கு,இன்றுவரை இஸ்லாமியர்கள் வழக்கப்படி,கைலி(லுங்கி ) சாத்துவித்து,ரொட்டி,வெண்ணை போன்றவற்றைப் படைத்து,வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது!

வைணவ சன்னதியில் துலுக்க நாச்சியாருக்கு ஏன் சன்னதி? துலுக்க நாச்சியார் யார்? என்று கேட்டால் , வைணவர்கள் சொல்லும் கதை கேலிக்கு இடமளிக்கும் கதையாகும்!

இங்கே இருந்த அரங்கன் மீது துலுக்கப் பெண்ணொருத்தி கொண்ட, பக்தி நினைவாக, அவருக்கு சன்னதி ஏற்படுத்தி, இஸ்லாமிய முறையில் வைணவர்கள் வழிபாடு நடத்தி வந்தார்களாம். (அப்படியே உண்மை என்று எடுத்துகொண்டாலும் முஸ்லிம்கள் அந்தகாலத்தில் இருந்தார்கள் எனபது உறுதியாகிறது!)அந்த துலுக்க நாச்சியாரை டெல்லி சுல்தான் படையெடுத்து வந்து, அவரின் விக்கிரகத்தை எடுத்துச் சென்றுவிட்டாராம்.

ஆச்சாரியார்.... அதுதாங்க, நம்ம ராமானுஜ தாசர் டெல்லிக்குப் போய் சுல்தானிடம் முறையிட்டு, விக்கிரகத்தைக் திரும்ப கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டு வந்தனராம்! "கோயில் ஒழுகு" கூறும் நம்பமுடியாத கற்பனைக் கதை என்று நீங்கள் நூறுசதம் நம்பலாம்!

ஏனெனில்,ராமானுஜர் காலத்தில், எந்த சுல்தானும் டெல்லியில் ஆட்சி செய்யவில்லை! தவிர, தென்னகத்துக்கு டெல்லியில் இருந்து அவர் காலத்தில் யாரும் படையெடுத்து வரவும் இல்லை!

மாலிக்காபூர் படையெடுத்து வந்தது கி.பி.1323-ல் என்று கூறுகிறார்கள்! அதுவும் அவர் ஸ்ரீ ரங்கம் கோயில் பக்கமே வரவில்லை என்றும் கூறுகிறார்கள் ! மேலும் ராமானுஜர் வாழ்ந்த காலம் தென்னகத்தில் முஸ்லிம் படையெடுப்பு நடைபெற்றதாக எந்த வரலாற்றுத் தகவலும் இல்லை. இதில் இருந்தே, ஸ்ரீ ரங்கம் கோயிலில் உள்ள துலுக்கநாச்சியாருக்கும் கோயில் ஒழுகு கூறும் கதைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக உணரலாம்!

மேலும் துலுக்க நாச்சியார், பற்றிய செய்திகள் ஸ்ரீ ரங்கம் கோயில் ஒழுகு நூலில் ஆச்சாரியார்களின் வரலாறுக்கு முன்பே இடம்பெற்று உள்ளது. அதாவது ஆச்சாரியார்களுக்கு முன்பே, ஸ்ரீ ரங்கத்தில் நடந்த நிகழ்ச்சி என்பதை அறிவிக்கும் வண்ணம் உள்ளது! இதில் இருந்து துலுக்க நாச்சியார் கதையும், வரலாறும் முற்பட்டகாலத்தில் நடந்தவை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.!

ஸ்ரீ ரங்கம் கோயிலில் உள்ள துலுக்க நாச்சியார் யாராக இருக்கும்?


"சோழர்கள் காலத்தில் மன்னர்கள் தெய்வ அம்சம் பொருந்தியவர்கள் என்னும் கருத்து நிலவியது. சோழ மன்னர்களை அவர்களது ஆட்சிக்கு உள்பட்ட சோழ ராஜ்ஜியத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் எல்லோரும் திருமாலின் அவதாரமாகவே எண்ணிப் பேரன்பு கொண்டு ஒழுகி வந்தனர்" ( தி.வை.சதாசிவ பண்டாரத்தார். பிற்கால சோழர் சரித்திரம் 3 -வது தொகுதி. பக்கம்-10)

அதாவது சோழ அரசன் ராஜராஜனை திருமாலாக சோழப் பேரரசில் உள்ள மக்கள் வழிபட்டு வந்தனர்! அவர்கள் கட்டிய கோயிலில் மன்னன், அரசமாதேவியின் சிலைகளை வைத்தும் வழிபட்டு வந்தனர்! அரசமகளிரும், சோழ அரசில் செல்வாக்கு மிக்கவரும் ஆன குந்தவை நாச்சியாரையும் அவ்வாறே வழிபட்டு வந்தனர்!

தஞ்சையில் ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலிலும் கூட மக்கள் தன்னை வணக்கும் விதமாக குந்தவை நாச்சியார், தம்மையாக ஒரு திருமேனி செய்து அளித்துள்ளார்!(வித்துவான் வே.மகாதேவன் அவர்கள் எழுதிய சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள் நூல்)

ஸ்ரீ ரங்கமும் சோழர்கள் ஆட்சிப் பகுதியில் இருந்து வருவதுதான்! அங்குள்ள மக்களும் குந்தவையை வணங்கி இருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை!

ஆனால் ஸ்ரீ ரங்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில், ஈசானிய மூலையில் உள்ளதோ, துலுக்க நாச்சியார் சன்னிதியாக உள்ளது!
குந்தவைதான், இந்த வைதீக பிராமணர்களிடம் உள்ள வெறுப்பு உணர்வால், பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் முன்பு சமண மதத்தில் இருந்து,பிறகு சைவ மதத்துக்கு மாறியதுபோல,(திருச்சிராப்பள்ளி மலையில் மகேந்திர வர்மன் சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாறியது பற்றிய கல்வெட்டு காணக்கிடைகிறது)

சைவ மதத்தை வெறுத்து, குந்தவையும் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டாரோ? அப்படி அவர் மாறியதால்தான்... குந்தவையை, இசுலாமியர்களுடன் தொடர்பு படுத்தி, கேலிசெய்து, தங்களது வக்கிரத்தை, ஆத்திரத்தை பிராமணீயம் வெளிப்படுத்தி வருகிறதோ?

சரி, குந்தவை, இசுலாம் மதம் மாறியிருந்தால்... அவர்மட்டுமா மாறியிருப்பார்? அவருடைய ஆதரவாளர்களும் கூட மாறியிருப்பார்கள் அல்லவா?! மேலும் , அவரது மனதை மாற்றவும், தடுக்கவும் கூட முயன்று இருப்பார்கள் அல்லவா?

அது மட்டுமின்றி, அவர் இசுலாம் மதத்துக்கு மாறியது எனபது, எப்போது ? எங்கே நடந்திருக்கும்? அதுகுறித்த ஆதாரங்கள் உள்ளதா? பிராமணீயம் அந்த ஆதாரங்களை விட்டு வைத்திருக்குமா? இல்லை, எல்லாவற்றையும் அழித்து இருக்குமா? எல்லாவற்றையும் எப்படி அழித்திருக்க முடியும் ?

எவ்வளவுதான் திறமையாக குற்றம் செய்பவர்களும் கூட, எதாவது சில தடயங்களை தங்களை அறியாமல் விட்டுவிடுவதில்லையா? அவைகளைக் கொண்டு, துப்பு துலக்கி, குற்றவாளிகளை கண்டுபிடிப்பதும், சமூகத்துக்கு அடையாளம் காட்டி, தண்டனை பெற்றுத் தருவதும் நடந்து வருகிறது!

பிராமணீயத்தின் கண்ணில் பட்ட பிறசமய இலக்கியங்கள், நூல்கள் இன்றுவரை கிடைகாமல் போனது தமிழர்களின் "துரதிஷ்டம் " என்று இலக்கிய ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் சொல்லி வருகிறார்களே!

இதுபோன்ற,குந்தவையின் மதமாற்றத்தைப் போன்ற வரலாற்றை மறைக்கத்தான் பிறசமய நூல்கள் கிட்டாத நிலையை, " பிராமணீயம்" ஏற்படுத்தி இருக்கிறதா?

பிறசமய நூல்களை தேடிக் கண்டுபிடிக்க , ராஜராஜன் செய்த முயற்சியை தான், அவன், திருமுறைகளை தேடிக் கண்டுபிடித்தான், அதனால் அவனை "திருமுறைகண்ட சோழன்" என்று வரலாற்றில் திசைமாற்றி தவறாகசொல்லி வருகிறார்களோ ?என்றும் கருத தோன்றுகிறது !

இவ்வளவையும் மீறி, குந்தவை மதம் மாறியிருந்தால், அவர் மதம் மாறியது குறித்து அறிந்துகொள்ள உதவும், பிராமணீயத்தின் பார்வையில் இருந்து தப்பிப் பிழைத்தும் பிராமணீயம் அழிக்காமல் விடப்பட்டும் உள்ள ஆதாரங்கள் இருக்கலாம் அல்லவா?

அப்படி ஏதேனும் இருக்கிறதா? இருக்கிறது! இருப்பதாக நான் கருதும் ஆதாரங்களையும் அவற்றுக்கான காரண காரியங்களையும் அடுத்துப் பார்க்கலாம் !

http://generationneeds.blogspot.sg/2012/03/blog-post_27.html

ஸ்ரீ ரங்கம் கோயில் தரும் செய்திகள்!

ஸ்ரீ ரங்கம் கோயில் விருத்தாந்தம் கூறுவதைப் பார்ப்போம்.
"நம்பெருமாள் புறப்பட்டருளின பின்பு அற்றபற்றர் வாழும் அந்தணீர் அரங்கம் என்றும் நல்லார்கள் வாழும் நளிரரங்கம் என்றும் தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் எண்ணும்படியான கோயிலானது அழகு அழிந்தது" எனக் கோயில் விருத்தாந்தம் கூறுகிறது.

இக்குறிப்பு, 'நம்பெருமாள் என்கிற சிற்பசிலையை எடுத்துச் சென்றபிறகு கோயிலின் அழகு குறைந்துவிட்டது' என்பதை அறிவிக்கிறது.! இவ்வாறு ஏன் அறிவிக்கிறது? நம்பெருமாள் என்ற சிலையை ஏன் எடுத்துச் செல்லவேண்டும்? என்ற கேள்விக்கு விடையும் இருகிறது!

ஸ்ரீரங்கம் கோயிலொழுகு கூறும் நிகழ்ச்சி.. . " பின்னும் அங்கே வந்து ஆக்கிரமித்தவன் செய்தபடி திட்டக் கொடிமதிப் பிடிங்கி கண்ணனுரிலே(இன்றைய சமயபுரம்) தனக்கு ஆவரணமாகக் கட்டுவித்து,பின்னையும் அங்கே உபத்ரவங்களைப் பண்ண, உபக்கரமிக்க அவ்வளவிலே சிங்கபிரான் என்னும் பேரையுடையோராய் பெருமாள் திருவிளையாட்டமான அழகிய மணவாளர் காணிய பிராமணர்ஆய், தமிழ் விரகரான ஒருவர், துருஷ்கன் வாசலிலே காரியம் ஆராய்ந்து நின்று, அவன் நினைத்தபடி ஒன்றும் செய்யாமல் அவனுக்கு அனுகூலமாகவே சொல்லிக்கொண்டு மதில்கள், மாளிகைகள், கோபுரங்கள்,துன்னு மணிமாடங்கள்,சாலைகள் தொடக்கமானவற்றையும் செம்போனாய வருவரரனைய கோயில் மணியனாரையும் காத்து.. ரஷித்துகொண்டு போந்தார்" என்று கூறுகிறது! .

குந்தவை மதம் மாற்றதின் விளைவாக, திருவரங்கம் கோயிலுக்கு முஸ்லிம்களும் வரயிருப்பதை பற்றிய பிராமணர்களின் அச்சத்தையும் இதனால் ஸ்ரீரங்கம் கோயிலில் ஏற்பட்ட குழப்பங்களையும் சொல்வதை அறியலாம்!

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு குந்தவையின் இஸ்லாம் மாற்றத்தின் விளைவாக சமயபுரம் பகுதியில் இருந்து, முஸ்லிம்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரப்போவதை, முஸ்லிம்களிடம் பிராமணர்கள் அனுப்பியிருந்த ஒற்றன் மூலமே தெரிந்துகொண்டு, முஸ்லிம்கள் வருவதற்கு முன்பே பெருமாளையும் நாச்சிமார்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி, எடுத்துக்கொண்டு காட்டிற்குள் (கண்ணனூர் எனப்பட்ட சமயபுரம் காட்டிற்கு)சென்றுவிட்டார்கள்.!

நம்பெருமாள் புறப்பட்டருளின என்றுதானே உள்ளது? நீங்கள் எடுத்து சென்றுவிட்டார்கள் என்கிறீர்களே? நாச்சிமார்களையும் என்று சேர்த்துச் சொல்கிறீர்களே? என்று கேட்கவும் சிலர் இருப்பதால் கூடுதலாகவும் சிலவிவரங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது!

ஸ்ரீரங்கம் கோயிலொழுகு,"ஸ்ரீ ரங்க நாச்சியாரையும் சில பரிகாரங்களையும் கூட்டி அனுப்பி,(சிலபரிகார விக்கிரங்கள்) பெரியபெருமாள் குலசேகரன் படிக்கல் திரைப்பரிமாறி, முன்னதாக விக்கிரத்தைவைத்துக் கதவைப்பூட்டி,நாச்சியார் சன்னதியிலேயும் அந்தப்படி பண்ணி, மர்மஷ்தானங்கள் எல்லாம் திரேதானம் பண்ணி,தாம் திருலோகத்தில் வர.. துலுக்கரும் திரையில் புகுந்து,விக்ரஹத்தைக் காணாமல்,பன்றியாள்வானை அபசாரப்பட்டு..... ", என்று நடந்த விவரங்களை விவரித்துக்கொண்டே போகிறது!

நம்பெருமாள் ஆகிய சிலைகள் கோவிலில் இருந்து சென்றுவிட்டபிறகு, அதாவது அப்புறப்படுத்திய பிறகு, ஸ்ரீ ரங்கம் கோவிலின் அழகு குறைந்துவிட்டது என்பதையே, "நம்பெருமாள் புறப்பட்டருளின பின்பு அற்றபற்றர் வாழும் அந்தணீர் அரங்கம் என்றும் நல்லார்கள் வாழும் நளிரரங்கம் என்றும் தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் எண்ணும்படியான கோயிலானது அழகு அழிந்தது" எனக் கோயில் விருத்தாந்தம் கூறுகிறது. !

இதன்மூலம் , ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு முஸ்லிம்கள் வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, அவர்கள் வருவதற்கான நோக்கத்தை முறியடித்து,சாமர்த்தியமாக அந்தணர்கள் நடந்துகொண்டார்கள் என்பதை நாம் எளிதில் அறிந்துகொள்ள இயலுகிறது! . இதனையே, ஸ்ரீ ரங்கம் கோயில் வரலாற்றை விவரிக்கும் "யதீந்தர பிரவணப் பிரபாவம்" என்ற நூலும் தகவலாக தருகிறது!

குந்தவை கி.பி.1006 -க்கு பிறகு இஸ்லாம் மதம் மாறியபோது, ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த இந்த நிகழ்ச்சியை பெரும்பாலோர் கி.பி.1323 -லில் மாலிக்காபூர் படையெடுப்பின் போது நடந்ததாக தவறாக சித்தரித்தும்,புரிந்துகொண்டும் வருகின்றனர்!

இதன் மூலம் குந்தவையின் மதமாற்றம் குறித்த வரலாறு மறைக்கப்பட்டு விடுவதுடன், முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பாளர்கள் ஆகவும், இந்து சமயத்தினரின் வழிபாட்டு இடங்களை இடித்தவர்கள் போலவும் தவறான கருத்துக்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.!

இவையல்லாம் பிராமணீயம் என்ற பாசிச சக்திகளின் திட்டமிட்ட செயல்திட்டங்களின் ஒருபகுதியாகும்! சமய நல் இணக்கத்துக்கு எதிராக, இந்துசமய மக்களை உணர்வூட்டி, முஸ்லிம்களின்மீது வெறுப்புணர்வை வளர்த்துவரும் செயல்களுக்கு வரலாற்றையும் ஆதாரமாக பயன்படுத்தி, உண்மையற்ற வரலாற்றை,தங்களுக்கு ஆதரவான வரலாற்றை உருவாக்கி வருவதுடன், உண்மையான தமிழர்களின் வரலாற்றையும் பொய்யான இதுபோன்ற சித்தரிப்புகளால், மறைத்தும், இருட்டடிப்பு செய்தும் வந்துள்ளார்கள் என விளங்குகிறது!

ஸ்ரீ ரங்கம் கோயில் ஒழுகு கூறும் செய்தி குந்தவை நாச்சியாரின் மதமாற்றத்தை அடுத்து நடந்த நிகழ்ச்சியல்ல...,உண்மையில் அது மாலிக்கபூர் படையெடுப்பின் போது நடந்த நிகழ்ச்சிதான் என்று பிடிவாதமாக நினைப்பவர்களுக்கும், வாதிப்பவர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது!

ஸ்ரீரங்கம் கோயில் ஒழுகு நூலானது, ஆதியில் இருந்து கோயிலில் நடந்த நிகழ்சிகளை வரிசைக்கிரமமாக சொல்லிவருகிறது! கோயிலில் நடந்ததாக சொல்லப்பட்டுள்ள நிகழ்ச்சி,மேலே நான் குறிப்பிட்டு உள்ள நிகழ்ச்சிகுறித்து, திருவரங்கம் கோயிலின் பல்வேறு ஒழுகு நூல்களும்,உரை நூல்களும் முகமதியர்களைப் பற்றி வர்ணித்துவிட்டு, அதன்பிறகே ஆச்சாரியார்களின் வரலாறுகளைப் பற்றி குறிப்பிடுகின்றன.

அதாவது, ஆச்சாரியர்களில் மூத்தவரும் முன்னவரும், முதலாமவரும் "ராமானுஜர்" தான் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள் என்று எண்ணுகிறேன்!

அத்தகைய ராமனுஜரின் காலம் கி.பி.1017 -கி.பி.1137 வரையான 120 -ஆண்டுகள் என்றும் சொல்லபடுகிறது! ஆச்சாரியர்களில் மூத்தவரான ராமானுஜர் மற்றும் உள்ள ஆச்சாரியார்களின் வரலாற்றுக்கு முன்பே,முஸ்லிம்களைப் பற்றி ஸ்ரீரங்கம் கோயில் நூல்கள் குறிப்பிடுகின்றன . என்றால் அதற்க்கு முன்பே திருவரங்கத்துக்கு வந்த சோதனை மற்றும் முஸ்லிம்களின் வருகையைப் பற்றிக் குறிப்பிடுகிறது என்றுதானே பொருளாகும்!

மேலும் மாலிக்காபூர் படை எடுப்பின்போது திருவரங்கம் கோயிலில் நடந்ததாக இருந்தால், கோயிலொழுகு நூல்கள் முஸ்லிம்கள் பற்றிய செய்திகளை ஆச்சாரியர்களின் வரலாற்றுக்குப் பின்புதான் சொல்லியிருக்கும்!
இதில் இருந்தே,திருவரங்கம் கோயிலில் முஸ்லிம்களின் வருகையும் குழப்பமும் மாலிக்காபூர் படையெடுப்பின்போது நடந்ததல்ல என்பதையும் அது குந்தவையின் மதமாற்றத்தின் விளைவாக நடந்த குழப்பங்கள் என்பதையும் அறிந்துகொள்ளலாம்!

குந்தவை மதம் மாறியதன் எதிரொலியாக இன்றும் மதுரை அருகில் உள்ள வண்டியூரில் உள்ள துலுக்க நாச்சியார் கோவிலில், பெருமாள் உற்சவத்தின்போது , உற்சவ மூர்த்தியான "திருமால்" துலுக்க நாச்சியார் கோவிலில், தங்கிச் செல்லும் ஐதீகம் நிலவி வருகிறது!

http://generationneeds.blogspot.sg/2012/04/blog-post_05.html

குந்தவை மதம் மாறியது எப்போது?
 
குந்தவை நாச்சியார் , திரு அவிட்டம் நச்சதிரத்தில் பிறந்தவர் என்று,திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், "பாச்சில்" என்ற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது!

வேலூர் மாவட்டம்,திருவலத்துக்கும் சோளிங்க நல்லுருக்கும் (சோழ நரசிங்க புரம் இப்போது சோளிங்கர் ஆகி உள்ளது )இடையில்,பொன்னை ஆற்றங்கரையில்,"மேல்பாடி"என்ற ஊர் உள்ளது!

பொன்னையாற்றின் கரையில் அமைந்த இந்த ஊரில், ராஜராஜனின் பாட்டனாரான அரிஞ்சய சோழன் " படைவீடு" அமைத்து தங்கி இருந்தபோது, இறந்துள்ளார். எனவே அவரை, "ஆற்றூர் துஞ்சின தேவர்" என்றும், "ஆற்றூர் துஞ்சின பெருமாள்" என்றும் வரலாற்றில் குறித்து வருகிறார்கள் !

( பாடி என்றால், படைமுகாம்,படைகள் தங்கியுள்ள வீடு என்று பொருளாகும்.) அரிஞ்சய சோழன் படைவீடு அமைத்து தங்கி இருந்த, இடமான இந்த மேல்பாடியில் இறந்தார். அவர் இறந்த மேல்படியில் அரிஞ்சய சோழன் அடக்கம் செய்யப்பட்டார்.அவர் இறந்த இடத்திலேயே அவரது நினைவாக,அரிஞ்சய சோழனின் பேரன், ராஜராஜன் ஒரு கோயிலைக் கட்டினான்! இன்று அக்கோயில் "அவனீச்வரம் கோயில்" என்று அழைக்கப்பட்டு வருகிறது. அரிஞ்சய சோழனின் நினைவாக கட்டப்பட்ட பள்ளிப்படைகோயிலான அவனீச்வரம்கோயில், தொல்லியல் துறையினரின் நிர்வாகத்தில் கீழ் இன்று இருந்துவருகிறது! (பள்ளிப்படை கோயில் எனபது இறந்தவர்களின் சமாதியின் மீது,அல்லது அருகில் கட்டபடுவது)

அவனீஷ்வர் கோயிலில் குந்தவை தங்கியிருந்து தியானத்தில் இருந்தார் எனவும் அவரது இத செயலின் விளைவாக கோயிலில் உள்ள இறைவிக்கு, "தபஸ் இருந்த தேவி" என்று பெயர் ஏற்பட்டது என்பதும் விளங்குகிறது!இப்போது இந்த நிகழ்ச்சியை மறைக்கும் விதமாககோயில் இறைவியின் பெயரை "தபஷ்கிருதா தேவி" என்று மாற்றி எழுதி உள்ளார்கள்!

மேல்பாடி அவனீஷ்வரம் கோயிலில், ராஜராஜன் தனது 21 -ஆவது ஆட்சியாண்டு( கி.பி.1006 -முதல்)குந்தவையின் பிறந்த நாளான, அவிட்ட நட்சத்திர நாளில்வெகுவிமர்சையாக விழாஎடுத்து,கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான் என்பதை அவனீஷ்வரம் கோயிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது!

இந்துமதத்தில் இறந்தவர்களை தெய்வமாக நினைத்து வழிபடும் வழக்கமும் திதி முதலியவற்றை ஆண்டுதோறும் செய்யும் வழக்கமும் இருந்துவருவதை நாம் அறிவோம்!

அதுபோலவே, குந்தவை நாச்சியாருக்கு கி.பி.1006 -ஆம் முதல் குந்தவையின் பிறந்த நாளான, அவிட்ட நட்சத்திரத்தில் அவனது தம்பி,ராஜராஜன் விழா எடுத்து கொண்டாட உத்தரவிட்டு இருந்ததை கல்வெட்டு தெரிவிப்பதால், குந்தவை கி.பி.1006 -ஆம் ஆண்டிலேயே இந்துமதத்தை விட்டு நீங்கி,இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது அறியவருகிறது!

அதாவது,இந்துமதத்தைப் பொறுத்தவரையில் குந்தவை (அந்தமதத்தை விட்டு நீங்கியதால்,)இறந்துவிட்டதைபோலக் கருதி, இந்த ஏற்பாட்டை ராஜராஜன் செய்துள்ளான்! எனபது விளங்குகிறது!

குந்தவை நாச்சியார்,முன்னின்று தாதாபுரத்தில், ஜீனாலயம்,ரவிகுல மாணிக்க ஈஸ்வரம், ஸ்ரீ வீர சோழ விண்ணகரம் ஆகியவைகளை எடுப்பித்து உள்ளார்.அவற்றின் குடமுழுக்கு கி.பி.1004 -ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது.!
ஆகவே,குந்தவை அதுவரை இந்துமதத்தில் நீடித்து வந்தார் எனபது உறுதியாகிறது! தாதாபுரம் கோயில் குடமுழுக்கு முடிந்தபின், கி.பி.1006 -லில் அவனீஷ்வரம் கோயிலில் திரு அவிட்ட நட்ச்சத்திர நாளின் விழாவுக்கு முன்பு குந்தவை மதமாற்றம் நடந்துள்ளது என விளங்குகிறது!

சிலர் குந்தவை, ராஜராஜனால் தஞ்சையில் கட்டப்பட்ட பெரிய கோவிலுக்கு பொன் முதலிய அறக்கொடைகளை கொடுத்து இருகிறாரே ? என்று நினைக்கலாம்.!

தஞ்சை கோயில் பணிகள் கி.பி.1003 -ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது அறியவருகிறது. தஞ்சைகோயில் பணி முழுமையடைந்து, குடமுழுக்கு நடை பெற்றது ராஜராஜனின் இருபத்து ஐந்தாவது ஆட்சி ஆண்டில் 275 -ஆவது நாளில் என்று தஞ்சைகோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது! இந்தநாளில்,ராஜராஜன் ஸ்ரீவிமானத்து ஷ்தூபித் தறியில் வைப்பதற்கு செப்புக்குடம் கொடுத்துள்ளான் ஆகவே,அன்றைய நாளில் கோயில்பணி நிறைவுற்று,குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்றும் அந்த நாள், ஏப்ரல் 22 -ஆம்நாள்,கி.பி.1010 -வருடம் என்பதும் வரலாற்று அறிஞர்களின் கருத்து ஆகும்!ஆகவே,குந்தவை தஞ்சை கோயில் பணிகள் ஆரம்பித்தபிறகு, கி.பி.1003 யில் தொடக்கி,அவர் மதம் மாறுவதற்கு முன்பு,அதாவது கி.பி.1006 -குள் தஞ்சை கோயிலுக்கு கோடை அளித்து உள்ளார் என அறியலாம்!

தனது சகோதரியின் மீது பெருமதிப்பும், அன்பும் கொண்ட ராஜராஜன் பெரிய கோவிலுக்கு தான் கொடுத்த அறகொடையுடன், தனது சகோதரி குந்தவை கொடுத்த அறக் கொடையையும் சேர்த்து, "கல்லிலே வெட்டுக" என்று உத்தரவிட்டு, கோயில் கல்வெட்டில் இடம்பெறச் செய்துள்ளான். மேலும் தனது சகோதரி குந்தவையின் பிரதி பிம்பத்தை,திருமேனியாக செய்து, அதனைக் கோவிலில் வைத்து வணங்கி வரவும் செய்துள்ளான்.என்பதையே குந்தவை, "தம்மையாக எழுந்தருளுவித்த திருமேனி" என்று கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது எனபது விளங்குகிறது.!

குந்தவை இஸ்லாம் மதம் மாறியது கி.பி.1006 -என்று அவனீஷ்வரம் கோயிலில் நடந்த அவிட்ட திருநாள் கொண்டாட்டம் அறிவிப்பது போல அவர் இறந்த ஆண்டு கி.பி.1011 -அல்லது 1012 இடையில் ஒருநாள் என்பதை ராஜராஜனும் அவனது மனைவி லோகமாதேவியும் (ஹிரணிய கர்ப்ப தானம்" என்னும் சாதிமாற்ற சடங்கினை செய்ததில் இருந்து அறியவருகிறது!

குந்தவை இஸ்லாம் மதம் மாறியதால் அவரது பரம்பரை அரசகுல பிறப்பும் சத்திரியர்கள் தான் அரசாளவேண்டும் என்ற பிராமணிய தருமமும் நிலைநாட்ட வேண்டிய அவசியம் அல்லது நிர்பந்தம் காரணமாகவே ராஜராஜனுக்கும் அவனது மனைவிக்கும் "ஹிரணிய கர்ப்ப சடங்கு" நடத்தப்பட்டுள்ளது என்பதும் அதன்பிறகே ராஜேந்திர சோழன் பிராமணர்களின் ஆதவுடன் ராஜராஜன் உயிருடன் உள்ள நிலையிலேயே அரசனாக்கப் பட்டுள்ளான் என்பதும் அறியவருகிறது!

ராஜேந்திர சோழன் குந்தவையின் இறப்புக்குப் பிறகு, பிராமண ஆதரவாளனாக மாறி உள்ளான் அல்லது மாற்றப்பட்டு உள்ளான் எனபது அவன் தனது ஆட்சியில் காவிரியின் சுவையான நீர்பெருக்குள்ள பல ஊர்களை அந்தணர்களுக்கு தானமாக தந்த நிகழ்ச்சியும், அவனது ஆட்சி தலை நகரத்தை தஞ்சையில் இருந்து,கங்கை கொண்ட சோழபுரம் என்று புதிதாக ஒரு நகரத்தைக் கட்டி தலை நகராக்கியது மூலமும், பரவை நாச்சியார் என்ற நாட்டியப் பெண்ணும், அணுக்கியருமானபரவை நாச்சியார் என்ற பெண்ணுடன் ராஜேந்திர சோழனுக்கு இருந்த காதல்(?) மூலமும் தெரிய வருகிறது!

http://generationneeds.blogspot.sg/2012/04/blog-post_12.html

குந்தவை அடக்கமான இடம் எது?
 
ஸ்ரீ ரங்கம் கோயிலொழுகு கூறும் செய்திகள், சமயபுரம் கோயில் தலபுராணம் கூறும் செய்திகள், ஸ்ரீ ரங்கம் கோயில்,சமயபுரம் கோயில் அமைவிடங்கள் ஆகிய அனைத்தையும் ஒருங்கே ஆராய்ந்தால் குந்தவை நாச்சியார் மதம் மாறிய இடம்,சமயப்புரட்சி செய்த இடம் சமயபுரமாக இப்போது அழைக்கபட்டுவருகிறது என்பதையும் ஆதியில் சமயபுரத்தின் பெயர் கண்ணனூர்,கண்ணபுரம் என்றே"கோயில் புராணம்" சொல்வதையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், குந்தவையின் மதமாற்றத்துக்கு பிறகே, இப்பெயர் வந்திருக்கும் என்பதையும் நாம் எளிதில் விளங்கிக்கொள்ள முடியும்!

குந்தவை இஸ்லாம் மதத்துக்கு மாறி, இஸ்லாமிய பெண்ணாகவே இறந்துள்ளார்.! அவர் இறந்து, அடக்கம் செய்யப்பட்டுள்ள சமாதியும் கூட திருச்சியிலேயே தான் இருக்கிறது!

அவரது சமாதி, இஸ்லாமிய ஞானியும்,குந்தவையின் வளர்ப்பு தந்தையுமான "ஹஜரத் தபலே ஆலம் பாதுஷா, நத்தார் வலியாரின்" அடக்க இடமான தர்காவிலேயே குந்தவையும் அடக்கம் செய்யப்பட்டு உள்ளார்! இன்றும் இவரது சமாதி, திருச்சி நத்தர்வலி தர்காவில் இருந்து வருகிறது!

இவரது சமாதியை "மாமா ஜிகினி" என்றபெயரிலும், "சோழ ராஜாகி பேடி' என்றும் அழைத்துவருகிறார்கள்!

"மந்தாகினி" என்ற குந்தவையின் மற்றொரு பெயரே, "மாமா ஜிகினி" என்று மருவி அழைக்கப்பட்டு வருவதாக நெல்லிக்குப்பம.'ஹைதர் அலி' என்ற இஸ்லாமிய அறிஞரும், பன்னூலாசிரியரும் கருத்து தெரிவிக்கிறார்!

"ஜிகினி" என்பதற்கு பிரகாசம், ஒளிரும் என்று பொருள் என்றும், மிகவும் "பிரகாசமானவர்',"மிக பிரசித்தி பெற்றவர்" குந்தவை என்பதால், "மாமா ஜிகினி" என்ற பெயர் வந்தது என்றும் சிலர் கருதுகிறார்கள்!

1998 -ஆம் ஆண்டு, திருச்சி நத்தார் தர்காவின் ஆயிரமாண்டு நினைவுநாள் நடத்தப்பட்டது! தர்கா வெளியிட்டுள்ள ஆயிரமாண்டு மலரில் "மாமா ஜிகினி" என்பதற்கு காரணமான ஒரு நிகழ்ச்சி கூறப்பட்டு உள்ளது!

சிறுவயதில், நத்தாரின் பாதுகாப்பில் குந்தவை வளர்ந்தபோது,ஒருநாள் மின்மினிப் பூச்சி ஒன்றைபிடிக்க குந்தவை முயன்று அது முடியாமல் போனாதால், அழுததாகவும், அவரது அழுகையைப் போக்க நத்தார் வலியார் அவர்கள்,குந்தவியைச் சுற்றிவருமாறு மின்மின்ப் பூச்சிகளை செய்ததாகவும், அப்படி மின்மினிப் பூச்சிகள் சுற்றிவரும்போது ஏற்பட்ட வெளிச்சத்தைப் பார்த்து,குந்தவை வியந்து "மாமாஜிகினி" என்று கூறியதால்,அவரை அப்படியே இஸ்லாமியர்கள் அழைத்துவந்தனர் என்கிறது. மின்மினி வெளிச்ச்ச்தில் மிகபிரகாசமாக குந்தவை தோன்றியதால் அவருக்கு அந்தபெயர் வந்தது என்றும் கூறுகிறார்கள்!

எது எப்படியோ! ,எத்தனையோ அறிய வெற்றிகளுக்கு,சாதனைகளுக்கு சொந்தமான ராஜராஜனின் சமாதி, அடக்க இடம் எது ? எனபது குறித்து சர்ச்சைகள் இன்றும் நிலவிவரும் நிலையில்....,

குந்தவை என்று அறியாமலேயே,அவரது சமாதியை, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றுவரை இஸ்லாமியர்கள் பேணிக் காத்து வருகிறார்கள் எனபது வியப்பளிக்கும் உண்மையாகும்!

http://generationneeds.blogspot.sg/2012/04/blog-post_09.html

குந்தவை அடக்க தர்காவில் திருவிளக்கு வழிபாடு ! 

குந்தவைக்கு மந்தாகினி என்று மற்றொரு பெயர் இருந்தது! உத்தமசோழன் ஆட்சிகாலத்தில் தனது தம்பியுடன் தலைமறைவாக இருந்தபோது, மந்தாகினி என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளார்! இந்த பெயர் அரசகுலத்தினர் உள்ளிட்ட சிலருக்கே தெரிந்த பெயர் ஆகையால், இந்தபெயரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவருவது எளிதாகவும் இருந்துள்ளது எனபது விளங்குகிறது!

நெல்லிக் குப்பம், எம்.ஏ.ஹைதர் அலி என்பவர் இஸ்லாமிய பெருமக்களும், பல் நூல்களை எழுதிய இஸ்லாமிய அறிஞராவார்! திருச்சி நத்தர் குறித்தும் நூல் எழுதியுள்ளார்! இவர், குந்தவையின் மற்றொரு பெயரான மந்தாகினி என்ற பெயர் குறித்து,"அரபு மொழி லிபியில் மந்தாகினி என்பதை, மீ ம் மீ ம் தால் (ஜால்) கியாப்நூன் என்ற ஐந்து எழுத்துக்களால் எழுதவேண்டும். "மந்தாகினி" என்ற பெயரை மேற்சொன்ன விதத்தில் எழுதி வந்துள்ளார்கள் . அரபு மொழி லிபியான மேற்சொன்ன ஐந்து எழுத்துக்களும் ஹூருப் என்னும் எழுத்துக்களுக்கு முன்புள்ள எழுது வடிவமாகும். ஹூருப் வடிவத்துக்கு முன்பிருந்த அரபு மொழி லிபியில் மந்தாகினி என்ற பெயர் விளங்கிவிளங்கிவந்தது..என்று கருத்து தெரிவித்துள்ளார்!

குந்தவை இஸ்லாம் மார்க்கத்தை, தழுவி, இஸ்லாமிய பெண்ணாகவே இறந்து, இஸ்லாமிய முறைப்படியே அடக்கம் செய்யப்பட்டு உள்ளார்! அவர் அடக்கம் செய்யப்பட்ட தர்காவில், "இந்துமத வழிபாட்டு முறைகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள விளக்கில் நெய்யூற்றி, தீபம் ஏற்றி, வழிபடுவது போன்ற " வழக்கம் இன்றும் தொடர்ந்து நடந்துவருகிறது!குந்தவை அடக்கம் செய்யப்பட்டுள்ள தர்காவில் உள்ள திருவிளக்கு.

இஸ்லாமியர்களின் வழிபாடுகளில், 'விளக்குபூஜைகள் முக்கியத்துவம் பெறுவதில்லை' என்பதிலிருந்தும், குந்தவையின் அடக்க சமாதி உள்ள தர்காவில், விளக்கு ஏற்றி வழிபாடு நடப்பதில் இருந்தும், குந்தவை இஸ்லாம் மதத்தைத் தழுவிக் கொண்டாலும் கூட, அவர் மேல் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த, இஸ்லாம் மதத்தைத் தழுவாமல், தொடர்ந்து இந்து மதத்திலேயே நீடித்துவந்த மக்களும் தங்களது வழிபாட்டு முறையிலேயே, அவரை போற்றி,வந்துள்ளனர் எனபது விளங்கும்!

இவ்வாறு, இந்துமதத்திலேயே நீடித்து வந்த மக்களின் வம்சாவளியினர், அதாவது இந்துமத சமுகத்தில் உள்ளவர்கள், குந்தவையின் சமாதி உள்ள தர்காவில், ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கந்தூரி என்ற உரூஸ் நிகழ்ச்சியில், இந்துமதத்தில் திருவிழா நடத்தப்படும்போது, தேர் செய்து, வீதிவலம் வருவது போலவே, கந்தூரி நிகழ்ச்சியிலும் தேர் அமைத்து வீதி வலம் நடத்திவரும் நிகழ்ச்சியும் ஆண்டுதோறும் நடந்துவருகிறது!

குந்தவை அடக்கம் செய்யப்பட்டு உள்ள தர்காவின் உருசில் இந்து சமயத்தவர் பங்கேற்று செய்யும் தேர் ஊர்வலமும்,தேரும்.

இவைகள் எல்லாம் தமிழகத்தில், இஸ்லாம், இந்துமதம் என்ற சமயங்களின் நல்லிணக்கத்துக்கு, ஒற்றுமை உணர்வுக்கு உதாரணமாக திகழ்ந்து வருவதைக் காட்டுகிறது!

இஸ்லாம் மதம், உழைக்கும் மக்களிடம், சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கும் மக்களின் பார்வையில் ஏற்றுக்கொள்ளபடும் நிலையைக் காட்டுவதையும் உணரலாம்!

" தமிழக வைணவ அலை பிற அலைகளைத் தாண்டி இந்திய மாநிலமெங்கும் பரவியதற்கு இஸ்லாத்தின் துணை வலிமையே பெரிதும் காரணம் என்பதில் ஐயமில்லை." ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்ற கொள்கையில் தமிழரினும் வீரிய உரமுடையோர் இஸ்லாமியர் என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள், அதன் அரசியல் தாக்குதலை விட பண்பாட்டுத் தாக்குதலே வடதிசை மாநில வாழ்வை 17 -ம் நூற்றாண்டிலிருந்து பெரிதும் அசைக்கத் தொடங்கிற்று என்பதில் ஐயமில்லை. தமிழக வைணவ அலை அதனை எதிர்த்துத் தற்பண்பு பேணும் காப்புக் கருவியாகவும் அதனுடன் இணைந்து தளர்ச்சியைப் போக்கும் மறுமலர்ச்சிப் படையாகவும் புதுத் தேசியமாகவும் இயங்கிற்று. இவ்வலையைப் பல இடங்களில் இஸ்லாம், பகை அலையாக கருதாமல் எதிர்கொண்டு தழுவிற்று என்பதற்கு பல சான்றுகள் காணலாம்
.
இஸ்லாத்தை எளிதில் வரவேற்றவர்கள் இஸ்லாம் வரும்வரை சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவராக இருந்த பழங்குடியின மக்களே. அவர்களிடையே தென்னாட்டுச் சைவ வைணவ இயக்கங்கள் பலரைப் பக்தர்களாக்கியது போல ,வடதிசையிலும் வைணவ அலை துளசி தாசர் போன்ற பல பக்த மணிகளை தோற்றுவித்தது.அத்துடன் இஸ்லாமிய மரபே கபீர் தாசர் மூலம் வைணவ அலையின் வைரமணி ஒன்றை அளித்தது. இலக்கியத்தில் 12 -ம் நூற்றாண்டிலேயே அமீர்குஸ்ரு வடதிசையின் உருவிலா மொழியில் கவிதைக் கனவு கண்டு,மொழி உருவான காலத்தில் உருது,இந்தி,பஞ்சாபி ஆகிய மொழியாளர்களின் பொது மூலக் கவிஞனானான்.அரபு நாட்டிலும் பலம் பாரசீகத்திலும் வளர்ந்த" மறைஞான "இயக்கம் (சூபிகள் இயக்கம்)தென்னாட்டு அறிவுச் சமய ஒளியுடன் கலந்து, சிற்றாறும் தன்பொருனையும் போல எளிதில் இணைவதையும் இங்கே குறிப்பிடலாகும். வைணவமும் இஸ்லாமும் கலந்து உருவாகிய புதிய ஒளிகளுள் 18 -ம் நூற்றாண்டில் சீக்கிய சமய முதல்வரும் இலக்கிய முதல்வருமான் குருநானக் ஒருவர். 19 -ம் நூற்றாண்டில் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த தயானந்த சரஸ்வதி கூடச் சைவ அலையும்,இஸ்லாமிய எதிர்ப்பலையும் சேர்ந்து உருவாக்கிய புத்தொளியே யாவர்." (ஆதாரம்: தென்னாட்டு போர்க்களங்கள், இரண்டாம் பதிப்பு , பக்கம்,330 -331 ,பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார்,M.A,L.T.,பூம்புகார் பதிப்பகம்,சென்னை-600108 )

வைணவம் வளர்ச்சிக்கும் இஸ்லாம் துணை நின்றது, இஸ்லாம் வைணவத்தை தனது பகையாக கருதவில்லை, இரண்டும் இனிதே வடதிசையில் வளர்ச்சியடைந்தன என்றும், இஸ்லாத்தை தமிழகத்திலே எளிதில் வரவேற்று ஏற்றுகொண்டவர்கள் சமூகத்தில் தாழ்த்தப்பட்டோராக கருதப்பட்டவர்கள் என்பதும் மேற்கண்ட ஆசிரியரின் கூற்றில் இருந்து அறியவருகிறது!

ஆனால் சைவசமயமானது இஸ்லாம்,வைணவம் ஆகிய இரண்டுடன்,
மோதல் போக்கையே,கடைபிடித்து வந்தது, சைவசமயம் தன்னிலையைத் தக்கவைத்துக் கொள்ளவும், சைவ சமயத்தை நிலைநிறுத்தவும், வேண்டி, அது போராடவேண்டிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டது!

http://generationneeds.blogspot.sg/2012/04/blog-post.html?showComment=1333433256088#c1901625380304240788

No comments:

Post a Comment