Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

அமாவாசை. அதன் கதைதான் என்ன? மூடத்தனம், ஆபாசம், விபச்சாரம்.

இந்து மத வகையறாக்களை எங்குத் தோண்டினாலும் அங்கெல்லாம் விபச்சாரம் என்னும் பாம்பு தலையெடுக்காமல் இருக்காது.
மூடத்தனம், ஆபாசம், விபச்சாரம் என்னும் இவற்றை விட்டால், இந்து மதத்தில் எந்தச் சரக்கும் கிடையவே கிடையாது. கசுமாலம் இவற்றையெல்லாம் படித்துத் தொலைய வேண்டியிருக்கிறதே, என்ன செய்ய!

மகன்கள் தன்தாயையே கொச்சைப்படுத்தும் திதிமந்திரம்..

தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, வாத்தியார் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.


அது சரி, அமாவாசை, அமாவாசை என்று கதைக்கிறார்களே, மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துகிறார்கள்.புரட்டாசி மாதம் பவுர்ணமி முதல் அமாவாசை வரும் 15 நாள்களும் மகாளய பட்ச காலமாம்.
இந்த நாள்களில் அந்தந்த திதிக்கு உரிய, தங்களின் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கும் வழக்கம் இந்துக்களுக்கு உண்டாம்.

அதிலும் மகாளய பட்சத்தின் இறுதி நாளான மகாளய அமாவாசை தினம் இன்றாம். முன்னோர்கள் வழிபாட்டிற்கு உகந்தநாள் இந்நாள் என்று சாங்கோ பாங்கமாக தினமலர் ஏடு விவரிக்கிறது.

அது சரி, அமாவாசை, அமாவாசை என்று கதைக்கிறார்களே, அதன் கதைதான் என்ன?

புராணக் களஞ்சியமான அபிதான சிந்தாமணி என்ன கூறுகிறது?

அச்சோதை என்பவர் ஒரு புண்ணிய நதியாம். மரீசி மக்களாகிய பிதுர்க்களுக்கு குமரி. இவள் தம் பிதுரரால் நிருமிக்கப்பட்ட அச்சோதை யென்னும் நதிக்கரையில் ஆயிரம் வருடம் தவஞ் செய்ய, பிதுர்க்கள் பிரத்திய க்ஷணமாயினர். அவர்களுள் ஒருவனாகிய மாவசு என்பவனை நாயகனாக எண்ண, அதனால் அவள் விபச்சாரியாய்ச் சுவர்க்கத்திலிருந்து தள்ளப்பட்டு பூமியில் விழாது, அந்தரத்து நின்று தவஞ் செய்தனள். அவள் வசமாகாத மாவசு, இச்செய்தி நடந்த தினத்தை அமாவாசையாக்கினான்.

அவள் மீண்டும் அவர்களை வேண்ட, நீ தேவர் கர்மத்தைப் புசித்து (28)வது துவாபரயுகத்தில் ஒரு மீன் வயிற்றில் சத்தியவதியெனப் பிறந்து, பராசரனைக் கூடி, வியாசனைப் பெற்றுப் பிறகு சந்தனுவின் தேவியாய் இரண்டு புத்திரரைப் பெற்று, அப்பால் அச்சோதையெனும் புண்ணிய நதியாகவென அருளிப் போயினர். இத்தினத்தில் அப்பிதுர்க்களை நினைத்துக் கர்மாதிகள் செய்யின் அவை பிதுர்ப் பிரீதி யைத் தரும் (மச்ச புராணம்) என்று விவரிக்கிறது அபிதான சிந்தாமணி.

ஒருமுறைக்கு இருமுறை படித்தாலும் மண்டைக் குடைச்சலைத் தான் ஏற்படுத்தும்.இந்து மத வகையறாக்களை எங்குத் தோண்டினாலும் அங்கெல்லாம் விபச்சாரம் என்னும் பாம்பு தலையெடுக்காமல் இருக்காது. மூடத்தனம், ஆபாசம், விபச்சாரம் என்னும் இவற்றை விட்டால், இந்து மதத்தில் எந்தச் சரக்கும் கிடையவே கிடையாது. கசுமாலம் இவற்றையெல்லாம் படித்துத் தொலைய வேண்டியிருக்கிறதே, என்ன செய்ய!

செத்துப் போனவர்களுக்கு இந்த நாளில் புரோகிதப் பார்ப்பானை அழைத்துத் தர்ப்பணம் செய்தால், பொருள்களை வாரிக் கொடுத்தால், அவை செத்துப் போன நம் முன்னோர்களுக்குப் போய்ச் சேருமாம் - கதை அளக்கிறார்கள்.

நடிகவேள் எம்.ஆர். ராதா சொல்வார் - புரோகிதன் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியோ என்று அவருக்கே உரித்தான பாணியில் குரல் கொடுப்பார். நாடகக் கொட்டகையே அதிரும்.

அய்யரே, எங்கள் அப்பாவுக்கு கருவாடு, மீன் இல்லை யென்றால் ஓர் உருண்டை சோறுகூட உள்ளே போகாது. சமையல் ரெடி - இங்கேயே என் எதிரிலேயே உட்கார்ந்து சாப்பிடணும் என்பார் நடிகவேள் - எடுப்பார் அய்யர் ஓட்டம்.

இதையே இன்னொரு வகையில் கபிலர் பாடியுள்ளார்.
பார்ப்பன மாந்தர்காள்
பகர்வது கேண்மின்
இறந்தவராய் - உமை
இல்லிடை இருத்தி
பாவனை மந்திரம்
பலபட உரைத்தே
உமக்கவர் புத்திரர்
ஊட்டின போது
அரும்பசியாற் குலைந்து
ஆங்கவர் மீண்டு
கையேந்தி நிற்பது
கண்டதார் புகல்வீர்!
அருந்திய உண்டியால்
ஆர்பசி கழிந்தது என்றார்
கபிலர் - சிந்திப்பீர்!
------------ மயிலாடன் அவர்கள் 7-10-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
http://thamizhoviya.blogspot.sg/2010/10/blog-post_3095.html


மகன்கள் தன்தாயையே கொச்சைப்படுத்தும் திதிமந்திரம்..
தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, வாத்தியார் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.

இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?

உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 44. (2)

இன்னொரு மந்த்ரம். இன்றும்... அம்மாவுக்கு சிரார்த்தம், திவசம், திதி செய்கிறேன் என ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் பவ்யமாய் கடமைகளை நிறைவேற்றும் மகன்களை நாம் பார்ர்க்கிறோம்.

ஒரு வாத்யாரை பணம் கொடுத்து அமர்த்தி... அவர் மூலமாக, தன்னை விட்டுப் பிரிந்த தன் தாய்க்கு வருஷாவருஷம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன் வாயிலாக அம்மாவின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பரிபூரணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள்.

ஆனால்...? “என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...”

நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது.

ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டுபோய் சேர்ப்பீர்.

இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, வாத்தியர் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.

இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?

உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

http://thathachariyar.blogspot.sg/2010/12/blog-post_6004.html


No comments:

Post a Comment