Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

கிறிஸ்துவர்களால் வாயில் மலம் திணித்த‌ சாதி கொடுமை . அராஜகம்.

கிறிஸ்தவ ஜாதி சனியன். இந்து வெளியே போனாலும், உள்ளே வருகிறது ஜாதி!

சாதியற்ற சமுதாயத்தை ஏற்படுத்துவோம் என்று சொல்லி மதம் மாற்றம் செய்யும் கிறிச்துவ சர்ச்சுகளும் மிஷனரிகளும் சாதி அடிப்படையில் வன்முறையை தூண்டிவிட்டு பின்னர் சாதியின் பெய‌ரிலேயே தப்பித்துக்கொள்ளவும் முயற்ச்சி செய்கின்றார்கள்

மனிதகுலத்தையே தலைகுனிய வைக்கும் தீண்டாமை கொடுமை. கொடுமை. கீழ்சாதிபயலே எப்படிடா நீ செருப்பு போட்டுக்கிட்டு நடக்கலாம்?

போலீசாரும் அக்கிரமகாரர்களுக்கு உடந்தை.

மன்னிக்கமுடியாத மனித நேயமற்ற அராஜக செயல்.

என்றுமே தெரியாமல் மறைந்திருக்கும் குற்றப் பிண்ணனியில் உள்ள கிறிஸ்துவ சர்ச்சுகளின் செயல்பாடுகள் இந்த பிரச்சினைகளிலும் வலுவாக தென்படுகின்றது.

ஊர் இரண்டு பட்டால் ஒண்ட வந்தவனுக்கு கொண்டாட்டம் என்பது போல மேற்க்கத்திய கிறிஸ்துவ நாடுகளின் உதவியோடு ஊருக்குள் நுழைந்து பெரும்பான்மை சமுதாயத்தை மதம் மாற்றம் செய்து ஊர் மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி குளிர் காய்கின்றன சர்ச்சுகளும் மிஷனரிகளும்.

Atrocities on Dalits in Tamil Nadu- 1


Atrocities on Dalits in Tamil Nadu-2


Atrocities on Dalits in Tamil Nadu-3


Atrocities on Dalits in Tamil Nadu-4


Atrocities on Dalits in Tamil Nadu-5


Atrocities on Dalits in Tamil Nadu-6" கிறிஸ்தவ ஜாதி சனியன்" . இந்து வெளியே போனாலும், உள்ளே வருகிறது ஜாதி!

இந்து மதத்தில்தான் ஜாதிகள் உண்டு. இதிலிருந்து உருவாக்கப்பட்ட சீக்கியத்தில்கூட ஜாதிகள் உண்டு.

இந்துமதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்குப் போனவர்கள் அங்கும் ஜாதி உணர்வோடு இருக்கிறார்கள். ஒரே மேய்ப்பனாக ஏசு இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்பவர்கள் ஒரே மந்தையாக இருப்பதில்லை.

இதோ ஒரு நிகழ்வு. காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ள தச்சூரில் கிறித்தவ ஆலயம் 11 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. கிறித்தவர்களிடையே உள்ள ஜாதி உணர்வும் ஜாதிச் சண்டையுமே இதற்குக் காரணம்.

ரெட்டியாராக இருந்து கிறித்தவர்கள் ஆனவர்களுக்கும் ஆதிதிராவிடர்களாக இருந்து கிறித்தவர்கள் ஆனவர்களுக்கும் சண்டை. இதனால் கர்த்தரைக் காண முடியாமல் தடுத்துவிட்டார்கள்.

11 ஆண்டுக்காலமாக ஆலயம் பூட்டப்பட்டுவிட்டது.

தன் மந்தையைச் சேர்ந்த ஆடுகளிடையே நடந்த சண்டையைக் கர்த்தர் கண்டு கொள்ளவே இல்லை. நல் மேய்ப்பனான ஏசுவும் எனக்கென்ன என்று இருந்துவிட்டது. வழக்கை நீதிமன்றம் விசாரித்தது. தீர்ப்பை 2006 நவம்பரில் கூறியது. அதன்படி ஆலயம் திறக்கப்பட்டது. வழிபாடு நடத்தப்பட்டது.

முதல் வழிபாடும் “திருப்பலி”யும் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. ரெட்டிக் கிறித்தவர்களும் ஆதிதிராவிடக் கிறித்தவர்களும் கூடினர். ஆலயத் திருவிழாபற்றியும் தேரோட்டம் பற்றியும் பேசினர். தகராறு மூண்டது. தேர் எந்தத் தெருவில் முதலில் வருவது என்பதில் மாறுபாடு ஏற்பட்டது. இரண்டு தரப்பினரும் தங்கள் பகுதிக்கு முதலில் தேர் வரவேண்டும் என்று வாதிட்டனர். தலைமைக் குரு (பிஷப்)விடம் பஞ்சாயத்து போனது.

பிஷப்புடன் பாதிரி, பழைய பாதிரி ஆகியோரும் விவாதித்து முடிவுக்கு வந்தனர். ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிக்கு முதலில் தேர் செல்ல வேண்டும் என முடிவு செய்தனர். அந்தப் பகுதியில் சில ரெட்டியார் கிறித்தவர்களின் வீடுகளும் உள்ளனவாம். ஆனாலும் தங்கள் விருப்பத்துக்கு மாறாகத் தேர் சென்றால் தாங்கள் கலந்து கொள்ளமாட்டோம் என்று ரெட்டிக் கிறித்தவர்கள் கூறிவிட்டனராம்.

பார்ப்போம், தேர் இழுக்கும்போது, இந்த ஜாதிச் ‘சனியன்’ இந்து மதத்தைவிட்டு நீங்கினாலும் போகாது போலிருக்கிறதே! என்றுதான் ஜாதி ஒழியுமோ?
http://viduthalai.com news 0606/2007
----------------------------------

* இந்துக்களின் ஜாதி உணர்வை பற்றி சொல்கிறீர்கள். ஆனால் கிறிஸ்தவர்களிடமும் ஜாதி உணர்வு இருக்கிறதே? -த.நி.சங்கர்,சென்னை.


ஜாதி உணர்வுமட்டுமல்ல, ஜாதி வெறியே இருக்கிறது. அவர்களின் கடவுள் தான் வேறு. மற்றப்படி அவர்கள் இந்து உணர்வோடுதான் இருக்கிறார்கள்.

கிறிஸ்த்தவர் கிறிஸ்த்தவரையே கல்யாணம் செய்து கொண்டாலும், ஜாதியை குறிப்பிட்டு கலப்பு திருமணம் என்கிறார்கள். ஒரு கிறிஸ்த்தவர் தன் ஜாதியை சேர்ந்த இந்துவை திருமணம் செய்து கொண்டால் அதை, கலப்புத் திருமணம் என்று அவர்கள் சொல்வதில்லை. அந்த அளவுக்கு ஜாதி அவர்களிடம் ஆழமாக பரவியிருக்கிறது.

தேர்தல் நேரங்களில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதியில், கட்சிகள் தனது வேட்பாளர்களை கிறிஸ்தவராக மட்டும் பார்த்து நிறுத்துவதில்லை. பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் என்ன ஜாதியோ அந்த ஜாதிக்காரரே வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.

அதே தொகுதியில் வேற்று ஜாதியை சேர்ந்த ஒரு கிறிஸ்தவரையும், அவருக்கு எதிராக அந்த ஜாதியை சேர்ந்த இந்து வேட்பாளரையும் நிறுத்தினால், பரிதாபமாக கிறிஸ்தவ வேட்பாளர் கிறிஸ்தவர்களாலே தோற்கடிக்கப்படுகிறார்.

“எங்கள் ஜாதிக்குள் கிடைக்கிற சலுகைகளை கிறிஸ்தவர்களே அதிகம் பெறுகிறார்கள். அதனால் எங்கள் ஜாதியை சேர்ந்த கிறிஸ்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கூடாது” என்று சொல்கிற தலைவரை, தீவிரமாக ஆதரிக்கிறார்கள் அதே ஜாதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள்.

சில இந்துக்களை போலவே, இஸ்லாமியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு இருக்கிற கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். மாவீரன் திப்புசுல்தானை பார்ப்பனர்கள் விமர்சிப்பது போல், மிக மோசமாக விமர்சிக்கிற கிறிஸ்தவ பாதிரியார்கள் இருக்கிறார்கள்.

உலக அரசியல் பேசுகிற கிறிஸ்தவர்களில் பலர், இஸ்ரேல் -பாலஸ்தீன பிரச்சினையில் இந்து அமைப்புகளைப்போல், இஸ்ரேலையே ஆதரிக்கிறார்கள். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கொலைக்கார யூதர்களின் அறிவுத்திறனை பேசி பேசி வியக்கிறார்கள். ஆண்டவருக்கு ஆணி அடிச்சது யூதர்கள்தானே என்கிற எண்ணங்கூட அவர்களிடம் இல்லை.

நாம் கிறிஸ்தவர்களிடம் கேட்டுக் கொள்வதெல்லம் இதுதான், நீங்கள் முற்போக்காளர்களாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் கிறிஸ்தவ உணர்வோடவாவது நடந்து கொள்ளுங்கள். ( செப்டம்பர் 2007 - சமூக விழிப்புணர்வு நன்றி: mathimaran
http://mathimaaran.wordpress.com/2007/09/20/ )

5 comments:

 1. mandaiyil uraiththaal sari aanaal uraikkaadhu
  nandri
  surendran

  ReplyDelete
 2. nalla pathivu....

  ReplyDelete
 3. அதிர்ச்சி தரும் தகவல்கள்.
  அரசுக்குத் தகவல் சொல்வாரில்லையா?
  கடவுளும் கண்டுகொள்ல இல்லையா?

  ReplyDelete
 4. மூட நம்பிக்கைகளைச் சாடும் மிகச் சிறந்த வலைப்பதிவு தங்களுடையது.
  இன்றுதான் என் முதல் வருகை. இனியும் வருவேன்.
  நன்றி.

  ReplyDelete
 5. good news for all indians

  ReplyDelete