Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

காமசூத்திரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கோயில்களை ?

பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும் வென்று விட்டால் மிஞ்சுவது எதிர்காலத்தில் அறிவியலே. வாத்சாயனாரின் காமசூத்திரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கோயில்களை தரைமட்டமாக்க வேண்டும். நாம் நம் மக்களின் மனங்களிலிருந்து பார்ப்பனியத்தை களைந்தெறிய வேண்டி இருக்கிறது.

பார்ப்பனியத்தைவிட, இந்து மதத்தையே தூக்கியெறிய வேண்டியிருக்கிறது.
நம் நாட்டை இந்து மதத்திலிருந்து விடுவிக்க வேண்டும். இதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

இந்தியா ஒரு கிறித்துவ நாடாகவோ, பவுத்த நாடாகவோ, இஸ்லாமிய நாடாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். எனக்குக் கவலையில்லை.

ஆனால், அது ஓர் இந்து நாடாக மட்டும் இருக்கக் கூடாது என்பதே முக்கியமானது. ஏனெனில், இந்து மதம் அறிவியலுக்கெதிரானது. மனித இனத்திற்கெதிரானது. உற்பத்திக்கெதிரானது. - காஞ்சா அய்லய்யா.

பெண்குறி தொடும் வல்லபை கணபதி

படத்தின் தள தொடுப்புகளை சொடுக்கி படிக்கவும்.

படிக்கவும் படத்தின் தளம் தொடுப்பு 1.

https://docs.google.com/file/d/0B9vPXySlxJ-cNWNjZDZmNmItYWUwYy00YmIxLTkwYTYtY2ZlODhkMGFlOGI0/edit?pli=1

படத்தின் தளம் தொடுப்பு 2.
http://thamizhoviya.blogspot.com/2009/06/blog-post_5492.html

KHAJURAHO THE TEMPLE OF LOVE


மதச்சார்பற்ற இந்துக்களையும் நாம் கையாள வேண்டியிருக்கிறது. வகுப்புவாத இந்துக்களிடம்கூட அத்தனை பிரச்சனையில்லை.

ஆனால், மதச்சார்பற்ற இந்துக்கள்தான் இந்து மதத்தை காப்பாற்றுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத்காரர்கள் கூட இந்து மதத்தைக் காப்பாற்ற முடியாது.

எடுத்துக்காட்டாக, "தேசிய இந்து மதசார்பற்ற உதவித் தொகை'யை எடுத்துக் கொள்ளுங்கள். அவை மேற்கு வங்கத்திலிருந்து, மகாராட்டிராவிலிருந்து, தமிழ் நாட்டிலிருந்து வருகின்றன.

மகாராட்டிரா பவுத்தத்தோடு தொடர்புடையது. தமிழ் நாடு பெரியாரோடு தொடர்புடையது.

மேற்கு வங்கம் கம்யூனிஸ்டுகளோடு தொடர்புடையது. ஆனால், வங்கம் இன்று உலகின் மிக ஏழ்மையான பகுதியாகிவிட்டது. ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளை விட வங்கம் இன்று ஏழ்மையான இடமாகிவிட்டது.

வங்கத்தில் தலித் அறிவுஜீவி என்று எவரும் கிடையாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்துகூட ஓர் அறிவுஜீவிகூட இல்லை.

இந்த மதச்சார்பற்ற இந்துக்களை, மிதவாத இந்துக்களை கையாளாமல் விட்டால், இந்து மதத்தை ஒழிக்க முடியாது.

அவர்கள் இந்து மதத்தை காப்பவர்களாக மாறிவிட்டனர்.

""வகுப்புவாத இந்து மதம் நல்லதல்ல. ஆனால், இதற்கு இந்து மதத்தை குற்றம் சொல்ல முடியாது'' என்கின்றனர்.

இந்து மதத்தில் உள்ளவற்றைப் பாருங்கள்.

கொலை செய்யும் தெய்வங்களெல்லாம்கூட இருக்கின்றன.

தெய்வீகம் என்று சொல்லப்படக்கூடிய இடத்திலிருந்து வரும் நேர்மறையான அன்பைக்கூட புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் ஒழுக்கத்தை அறிவுறுத்துபவையாக அவை மாறும்போது – நான் இந்த இந்து தெய்வங்களைவிட புத்தர், ஏசு, நபிகள் ஆகியோர் அறிவுறுத்திய ஒழுக்கங்களையே பரிந்துரைப்பேன்.

நிச்சயமாக பிரம்மன், இந்திரன், ராமன், கிருஷ்ணன் ஆகியோர் செய்த கொலைகள், பாலியல் வன்முறைகள், திருட்டுத்தனங்கள் ஆகியவற்றை அல்ல.

நான் வாத்சாயனாரின் காமசூத்திரத்தை பரிந்துரைக்க மாட்டேன்.

64 வகைகளில் பாலியல் தொழிலாளியுடன் பாலுறவு கொள்வது எப்படி என்பதை விளக்கும் இவைகளை கற்றுக் கொடுத்தால், எய்ட்ஸ்தான் பரவும்.

இந்தியாவில் உள்ள இந்து மதத்தில், சாதியை அடிப்படையாகக் கொண்டு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்தான் நடக்கின்றன. காதல் திருமணங்களும், இந்து மதமும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க முடியாது.

என்னுடைய போர், இனி மதச்சார்பற்ற இந்துக்களிடம்தான். இந்து மதத்தை தோற்கடிக்கவில்லையெனில், அதை அழிக்க முடியாது.

உங்களுடைய இந்தக் கூற்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. கொஞ்சம் விளக்குவீர்களா?

எங்கே முதலில் மதப் பரப்புரை நடந்திருக்கும்? உலகின் முதல் மதப்பரப்புரையாளர் அசோகர்தான்.

தன் மகனை, மகளை, தன் படைகளை புத்த மதத்திற்கு மாற்ற – அவர்களை சீனாவுக்கும், இலங்கைக்கும் அனுப்பவில்லையா?

இந்து மதம் தோற்றுப் போய் நிற்கிறது. அது தலித்துகளையோ, பிற்படுத்தப்பட்டவர்களையோ கவரவில்லை.

நேர்மறையான பிரதிகளே அதில் இல்லை.

மனிதத் தன்மையுடைய கடவுள்களே இந்து மதத்தில் இல்லை. இருக்கும் எல்லா கடவுளர்களும் – பெண்ணை பாலியல் வன்முறை செய்பவர்களாகவும், கொலை செய்பவர்களாகவும்தான் இருக்கிறார்கள்.

இந்திய மக்களிடையே போதுமான வாசிப்புத் திறன் இல்லை. பார்ப்பனியம் மக்களுக்கு வாசிப்பை மறைத்தும் மறுத்தும் வைத்திருந்தது.

அதோடு பார்ப்பனியம் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும். ஒருபோதும் வாசிக்காது.

திருமணமாக இருந்தாலும், ஏரோபிளேன் முதன்முதலில் விடும் பூஜையாக இருந்தாலும் சரி, அங்கே போய் மந்திரங்களை ஒப்பித்துவிட்டு வருவார்கள்

புரோகிதர்கள். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இவர் என்ன சொல்கிறார் என்றே தெரியாது. "சமர்ப்பயாமே' என்றும் "ஸ்வாகா' என்றும் சொல்லி, அவர்களின் சொத்தை சுருட்டிக் கொள்வார்கள்.

அவர்களை ஒன்றாக வாழச் சொல்கிறாரா அல்லது நாளைக்கே விவாகரத்து பெற்றுக் கொள்ளச் சொல்கிறாரா அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளச் சொல்கிறாரா என்றுகூட நமக்குத் தெரியாது.

பார்ப்பன இலக்கணங்களை ஒழிக்க வேண்டும். அவை subject, object, predication என்று தான் இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கின்றன.

அதை எப்படி சொல்லித் தருகிறார்கள் என்று பாருங்கள். Rama killed Raavana இதில் ராமன் Object, ராவணன் subject. செய்யும் செயல் கொல்வது இளம் வயதிலேயே கொலை செய்வதையா சொல்லித் தருவார்கள்?

அதற்கு பதில், அவை இப்படி மாற்றப்பட வேண்டும். Farmer is Tilling the land அல்லது Mother is cooking the food, Father is looking after the Cattle என்பது இப்படி மாற வேண்டும் : Father should also cook the food and Mother should also look after the Cattle.

நாம் இப்போது ஆண் இருக்கும் இடத்தில் பெண்ணையும், பெண் இருக்கும் இடத்தில் ஆணையும் மாற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டும். இது, மிகவும் முக்கியம்.

Rama killed Raavana என்று இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கும் இந்த தேசம் மாற வேண்டும்.

Krishna has stolen the butter. ஆக, கடவுளே திருடுகிறார் என்று தொடக்கத்திலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள். இதுவா தேவை? இல்லை.

இந்தியாவிலிருந்து இந்த கடவுளர்களை முற்றாக நீக்க வேண்டும்.

வாத்சாயனாரின் காமசூத்திரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிலைகளைக் கொண்ட கோயில்களை தரைமட்டமாக்க வேண்டும்.

இது, நமது குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பாடு அல்ல.

பாலுறவு என்பது இயல்பானதாக இருக்க வேண்டும்.

இந்த பாழாய்ப்போன வாத்சாயனாருக்கு முன்பிருந்தே தலித் – பெரும்பான்மையினர் மத்தியில் மகிழ்ச்சியான பாலுறவு வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக நீடித்து இருந்து வந்தது தானே?

நாம் பாலுறவை அறிவியலாகக் கற்றுக் கொள்ளலாம். அதை எதற்கு வாத்சாயனõரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்?

காந்தி இளம் பெண்களுடன் ஆடையின்றி நிர்வாணமாக உறங்கினார்.

அம்பேத்கரோ இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதுதான் இயல்பான வாழ்க்கை.

ஆக, ஒவ்வொரு விஷயத்திலும் நாம் சாத்தியமான மாற்று ஒன்றை உருவாக்க வேண்டி இருக்கிறது.

ஆன்மிகப் பாசிசத்தின் (இந்து மதம்) உருவாக்கம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நான் பின்னோக்கிப் பார்க்கிறேன்.

பாசிசம் என்றால் என்ன?

ஒடுக்கும் தன்மையுடைய, அழிக்கக்கூடிய ஒன்று எனலாம், உலகளாவிய அளவில் எடுத்துக் கொண்டால், போருக்கு இட்டுச் செல்வது பாசிசம் என்று பிரதிகள்

நமக்கு பாசிசம் பற்றிக் கூறுகின்றன. ஜெர்மனியிலிருந்தும், இத்தாலியிலிருந்தும் இது தோன்றியதாக நாம் அறிகிறோம். ஹிட்லரும், முசோலினியும் எடுத்துக்காட்டுகள்.

உற்று நோக்கினால், இந்து மதத்திற்கும் நாஜிக்களின் தத்துவத்திற்கும் "ஸ்வஸ்திக்' சின்னம் உட்பட நிறைய தொடர்பிருக்கிறது.

ஹிட்லரே நாஜிக்களை ஆரியர்கள் என்றுதான் குறிப்பிட்டார். நான் இந்திய ஆரியர்களை நாஜிக்களோடு பொருத்திப் பார்த்தேன்.

ஜெர்மனியில் ஆரியர்களுக்கு தொன்மையான வேர்கள் கிடையாது. ஆனால், இந்தியாவில் உள்ளது.

பார்ப்பனர்கள் ஜெர்மனியிலிருந்து வந்தார்களா அல்லது ஈரானிலிருந்தா என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது.

பாசிசத்தின் தன்மைகளாக அடக்குவதையும் ஒடுக்குவதையும், போருக்கு இட்டுச் செல்வதையும், பாலியல் வல்லாங்கு செய்வதையும் வைத்துப் பார்க்கும்போது, இவையெல்லாம் ரிக்வேதத்திலும் இருக்கின்றன.

"ஏற்றத்தாழ்வுகளோடு மனிதர்களைப் படைக்கிறார் கடவுள்' என்கிறது ரிக்வேதம். இது எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்றும் சொல்கிறது வேதம்.

அதுமட்டுமல்ல, சிலர் காலில் பிறந்தார்களாம். சிலர் தலையில் பிறந்தார்களாம். சிலர் பிறக்கவேயில்லையாம்!

ஆகவே மதத்தின் பெயரால், ஆன்மிகத்தின் பெயரால் கடவுளே ஒரு பெரிய ஒடுக்குமுறையை கடைப்பிடிக்கிறார். - காஞ்சா அய்லய்யா.

தலித் முரசு - காஞ்சா அய்லய்யா நேர்காணல் - பகுதி IV

சந்திப்பு : டாக்டர் பி.டி.சத்யபால், ஆர்.ஆர். சீனிவாசன்

தமிழில் : கவின் மலர்

கட்டுரை சுருக்கப்பட்டுள்ளது.

கட்டுரை பதிவு எடுக்க‌ப்பட்ட தளம்:: http://kavinmalar.blogspot.com/2010/12/blog-post.html

12 comments:

 1. ஏய் இன்னுமாடா உன்னை மெண்டல் ஆஸ்பத்திரில சேர்க்கலை.சட்டையைக் கிழிக்கிற பைத்தியம் மாதிரி பதிவு எழுதற பைத்தியம் நீங்கதாண்ணா...

  ReplyDelete
 2. Childish arguments!. You have shown how shallow is your knowledge on hinduism

  ReplyDelete
 3. இந்த ஊர் கோவில் தேரையும், கோபுரத்தையும் பார்த்த ஆபாசங்களை அப்படியே சொல்ல வெட்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது.

  காட்டுமிராண்டிகள் காலத்தில் தான் சாமிகளும், கோவில்களும் ஏற்பட்டதென்று சொன்னால் யாராவது மறுக்க முடியாதபடி அவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

  அதில் சித்தரித்து வைக்கப்பட்டிருக்கும் உருவங்கள் மிகமிக ஆபாசமானவையாய்க் காணப்பட்டன.

  அவற்றிற்கு என்னதான் தத்துவார்த்தம் சொல்லுவதானாலும்,  இது போன்ற மற்றும் பல உருவங்களைச் சித்தரித்து வைத்திருப்பதை எப்படி ஒப்புக் கொள்வது என்பது எனக்கு விளங்கவில்லை.

  கோபுரங்களைப் பார்த்ததைப் பற்றிச் சொல்லலாம் என்றாலோ,

  பெண்களை அதில் படுத்துகின்ற பாடும், காம விகாரங்களை அதில் எடுத்துக் காட்டி இருக்கும் முறையும் அநியாயம், அநியாயம்.

  இவற்றையெல்லாம் நெருப்பு வைத்துக் கொளுத்தி இடித்து எறிந்து, இவற்றிற்கு ஆதாரமான சாத்திரங்களையெல்லாம் பொசுக்கி சமூத்திரத்தில் கரைத்துவிட்டாலொழிய இதைச் சேர்ந்த மனிதர்கள் மனிதர்களாகக் கருதப்பட முடியவே முடியாது.

  சுயமரியாதைக்காரர்கள், புராணக் குப்பைகளைக் கிளறிக் கிளறி வெறும் ஆபாசங்களைப் பேசுகின்றார்கள், எழுதுகின்றார்கள் என்று பேசுகின்றீர்கள்.

  எங்கள் மீது சில சமயத்தில் வெறுப்பும் கொள்ளுகின்றீர்கள்.

  ஆனால், இந்தக் கோவில்களுக்குப் போய் தேங்காய், பழம் உடைத்து வைத்து, காசு கொடுத்து இந்த உருவங்களைப் பார்க்க வந்து கொண்டிருப்பவர்கள் மனிதர்களா? என்பதைப் பற்றி நீங்கள் சிறிது கூடச் சிந்திப்பதில்லை.

  நாங்கள் எழுதுவதையும், பேசுவதையும் பார்த்து வெறுப்புக் கொண்டு என்ன செய்வது?

  இவ்வளவு பேசியும், எழுதியும் இந்த நடவடிக்கைகள் நின்றதா? நிறுத்த யாராவது பாடுபட்டீர்களா?

  காரமடைத் தேரில் இதைவிட அசிங்கமாகப் பார்த்தேன். திருவொற்றியூரில் வெகு ஆபாசமாய்ப் பார்த்தேன். மதுரை முதலிய இடம் சொல்லவே வேண்டியதில்லை. ஆனால், இந்த ஊர் கோபுரம் எல்லாவற்றையும் மீறி விட்டது.

  இதுவரை நாங்கள் எழுதாத, பேசாத, நினைக்கவே முடியாத விஷயங்கள் எல்லாம் சாமிகளாகவும், ரிஷிகளாகவும், முனிவர்களாகவுமே காணப்படுவது இன்னும் மோசமாய் இருக்கின்றது.

  இதையெல்லாம் பற்றி அந்நிய மதக்காரர்கள் பரிகாசம் பண்ண மாட்டார்களா? கேவலமாய் நினைக்க மாட்டார்களா? என்கின்ற மான – அவமானமே இல்லாமல் போய்விட்டது. இதை நிறுத்த வேண்டுமா, வேண்டாமா?

  நிறுத்த வேண்டுமானால் என்ன செய்வது?

  இதுவரை சமய திருத்தக்காரரும், சமூக திருத்தக்காரரும் இந்த ஆபாசங்களின் பக்கம் திரும்பியாவது பார்த்தார்களா?

  போதாக் குறைக்குப் பணம் படைத்த மூடர்களும், யோக்கியப் பொறுப்பற்றவர்களும், இந்த சித்திரங்களுக்குச் சாயம் அடித்து ரிப்பேர் செய்கின்றார்களே அவர்களை என்னவென்றுதான் சொல்லுவது என்பது விளங்கவில்லை.

  சிறிதும் ஈவு இரக்கமில்லாமல் ஊரார் பணத்தை ஏழைகள் பணத்தைக் கொள்ளை அடித்து, அவர்களைப் பட்டினி போட்டுவிட்டு இந்த மாதிரி மிருக – மனிதப் புணர்ச்சிகளுக்குப் பொம்மைகள் செய்து சாயம் அடித்து பூசை செய்வது என்பது எவ்வளவு இழிவானதும், திமிர்பிடித்ததுமான காரியமாகும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

  ஆகவே இந்துக்கள், சமயவாதிகள், சைவர்கள், வைணவர்கள் என்பவர்கள் இவற்றிற்கெல்லாம் என்ன பதில் சொல்லுகின்றார்கள்? என்று கேட்கின்றேன்.

  இந்த இந்து மதத்தை இன்னமும் எத்தனை நாளைக்குத் தான் காப்பாற்றப் போகின்றீர்கள்? என்று கேட்கின்றேன்.

  மதம், சாதி, கோவில் என்றால் முட்டாள்தனம், அயோக்கியத்தனம், ஆபாசம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கின்றது.

  வருத்தப்பட்டுப் பயனில்லை வெட்கப்பட வேண்டும்.

  அப்போது தான் அறிவு, ஒழுக்கம், நாகரிகம் விளங்கும்.ஆகவே, சகோதரர்களே! இவ்விஷயங்களை நன்றாய் ஆலோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

  பொருளற்ற கூப்பாடு போடுவதால் பயன் விளையாது. இனியும் இந்த மாதிரி குஷ்ட வியாதி வந்த சரீரம் இந்தச் சமூகம் நாறி அழுந்திக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். 27.12.1930-இல் களக்காடு- தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு – (குடிஅரசு 01.02.1931)

  ReplyDelete
 4. கொடிது கொடிது கோவிலுக்குப் போதல்.

  அதனினும் கொடிது பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்குப் போதல்.

  அதனினும் கொடிது குழவிக்கல்லையும் செம்பையும் கும்பிடுதல்.

  அதனினும் கொடிது தேர்திருவிழா உற்சவத்திற்குப் போதல்.

  அதனினும் கொடிது பெண்களை அங்கு கூட்டிப்போதல்.

  அதனினும் கொடிது கோவில் கட்டுதல்.

  அதனினும் கொடிது காணிக்கை போடுதல்.

  அதனினும் கொடிது (அர்ச்சகப்) பார்ப்பானுக்கு ஈதல். - விடுதலை 21.10.1957
  ===============================
  தோழர்களே, இந்த இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடிக்கக்கூடிய இந்தக் காலத்தில் நாம் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம்.

  நம்முடைய ராஜாக்கள் எல்லாம் பார்ப்பானுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி மடமையினை வளர்க்கும்படியான இதுபோன்ற கோவில் களை எல்லாம் கட்டி வைத்து விட்டுப் போய்விட்டார்கள்.

  அதைக் கொண்டு நம்மை இன்று மடையர்களாக இந்த 20ஆம் நூற்றாண்டிலும் பார்ப்பனர்கள் ஆக்கி தாங்கள் மட்டும் சுக வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள்.

  நமது அரசாங்கமும், அயோக்கியத்தனமாக நாம் இழிமக்களாகவும், காட்டுமிராண்டியாகவும் ஆக்கி வைத்து இருக்கும் கடவுளையும், மதங்களையும், சாஸ்திரங்களையும், பழக்க வழக்கங்களையும் அழிந்துவிடாமல் கட்டிப் பாதுகாத்துக்
  கொண்டிருக்கிறது.

  எவ்வளவு அயோக்கியத்தனம்?

  இந்த அரசாங்கத்தின் சின்னம் மடமையினை வளர்க்கும் மதுரை(ஸ்ரீ வில்லிபுத்தூர்) கோவிலின் கோபுரம் பொரிக்கப்பட்டு இருக்கின்றது எதற்காக?

  மதசார்பற்ற ஆட்சி என்று சொல்லிக் கொள்பவர்கள் ஒரு மதசம்பந்தமான ஓர் கோவில் கோபுரத்தையா போட வேண்டும்? ஏன் பயனுள்ள ஆற்றையோ, அணையையோ, மரத்தையோ, இன்னும் மற்றவற்றை யோ போடக் கூடாது?

  நம் யோக்கியதை, பழக்க வழக்கங்கள், நம் கடவுள், மத சம்பந்தமான செயல்கள் எல்லாவற்றையும் வெளிநாட்டான் கண்டு கேலி செய்யும் நிலையில்தானே இன்று நாம் இருக்கின்றோம்.

  நாமோ 3,000, 4,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காட்டுமிராண்டி மனிதன் கடைபிடித்து ஒழுகிய கடவுளையும், மதத்தையும், சாஸ்திரங்களையும் தானே இன்றும் கட்டிக் கொண்டு அழுகின்றோம்.

  இராமனுடைய தகப்பன் தசரதனுக்கு 60,000 மனைவிகள் என்று எழுதி வைத் திருக்கின்றான்!

  தசரதன் ஒவ்வொரு பெண்டாட்டியையும் ஒவ்வொரு நாள் சந்திப்பதாக வைத்துக் கொண்டாலும் ஒரு ரவுண்டு வர 160 வருஷம் அல்லவா ஆகும்?

  நாரதன் சொல்லுகின்றான், கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா உனது அரைஞாண் கயிறுபடாத பெண் உலகத்தில் ஒருவர்கூட இல்லையே என்று!

  இவைகளை எல்லாம் கடவுளாகவும், புராணங் களாகவும் பக்தி செலுத்தும் நம்மை அவன் என்ன நினைப்பான்? தந்தை பெரியார் - “விடுதலை” 10.2.1960

  ReplyDelete
 5. கோவிலில் நடக்கும் அக்கிரமங்கள்!

  ஸ்ரீமான் சி. விஜயராகவாச்சாரியார் - இவர் கோவில்களின் மூலம் பார்ப்பனர்களின் வாழ்வு இன்னது என்று தெரிந்தவர்.

  இந்து மதம் என்கின்ற பெயர் இல்லாவிட்டால் இந்நாட்டில் பார்ப்பனருக்கு எவ்வித மரியாதையும் இல்லாததோடு குணத்தைப்பற்றி மக்களை வகுப்பதின் மூலம் பார்ப்பனர்கள் தீண்டாதவர்களாகி விடக் கூடும் என்பதையும் உணர்ந்தவர்.

  ஆனால் நாம் அக்கோவில்கள் விபச்சார விடுதிகள் என்பதை விளக்க இதை உபயோகித்துக் கொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

  மகாத்மா காந்தி இப்போதைய கோவில்களின் நிலைமையைப் பற்றித்தான் அவ்விதம் கூறுகிறார் போல் தோன்றுகிறது.

  மற்றும் சைவக் கடவுளைப்பற்றி இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சைவர்களையும், வைணவர்களையும், வைணவக் கடவுள்களைப்பற்றி அதே இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சைவர்களையும் கேட்டாலும்,

  அல்லது அவரவர்கள் வேத சாஸ்திர புராண ஆதாரங்களைக் கொண்டு எழுதி முழங்கியிருக்கும் சைவ மத கண்டனம் என்னும் புஸ்தகங்களைப் பார்த்தாலும் தெரியவரும்.

  அன்றியும் அந்தக் கடவுள்கள் அன்னிய ஸ்திரீகளிடம் தினமும் அக்கோவில்களில் படுப்பதும்,

  அக்கடவுளுக்கு வைப்பாட்டிகளாக, விபச்சாரப் பெண்கள் ஏற்படுத்தப்படுவதும்

  அவர்கள் சுவாமிக்குத் தொண்டு செய்வது என்னும் பேரால் தங்களை அலங்கரித்துக் கொண்டு தினமும் கோவிலுக்கு வருவதும்,

  அவர்களைப் பார்க்கவிட புருடர்கள் பக்தியின் பேரால் சாமி கும்பிட என்று அங்கு வந்து சம்மதம் ஏற்படுத்திக் கொள்ளுவதும்,

  இவர்களைப் பார்த்து குல ஸ்திரீகளும் அலங்கரித்துக் கொண்டு வருவதும்,

  அவர்களைப் பார்த்து நிஜமாகவே பக்திக்காக வந்த புருஷர்களும் பக்தி கெட்டு அக்குலப் பெண்களை சுவாதீனம் செய்ய முயற்சிப்பதும்,

  ஒருவருக்கொருவர் காதல் ஏற்பட்டு தினப்படி முக தரிசனத்திலேயே ஒருவித காதல் திருப்தியை அடையக் கருதி இருவரும் பெரிய பக்தர்களாகி தினமும் கோவிலுக்குப் போக ஏற்பாடு செய்து கொள்ளுவதுமான காரியங்களை ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும் தங்கள் தங்களுடைய வாலிப பருவத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டால் இவை கண்டிப்பாய் ஞாபகத்துக்கு வரும் என்றே சொல்லுவோம்.

  இது தவிர, சுவாமி வீட்டுக்குப் போதல், வேறு பெண்களை சிறையெடுத்து வருதல்,

  வேறு பெண்கள் மீது காதல் கொண்டு மாறு வேஷம் போட்டுக் கொண்டு போய் அப்பெண்களை கற்பழித்து விட்டு வருதல்,

  ஆண் சாமிகளிலேயே ஒரு சாமிக்கு மற்றொரு சாமி மேல் மோகம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கலந்து பிள்ளை உண்டாக்குதல்
  முதலான

  இந்து மத வேத சாஸ்திர புராணங்களைக் கொண்டு கோவில்கள் கட்டி இம்மாதிரி சாமிகளை அவைகளில் வைத்திருத்தல்,

  இம்மாதிரி நடவடிக்கைகளை உற்சவமூலம் நடத்தல் ஆகிய காரியங்களை கோவிலின் தத்துவங்களைப்பற்றி நாமும், மகாத்மாவும் கூறுவதை நன்றாய் ருஜூ செய்யும்.

  அன்றியும் கோவில் யோக்கியதை இப்படியானால், உற்சவங்கள் என்பவைகள் எதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது என்று பார்த்தால் அதிலும் கோவில்கள் எவ்வளவு தூரம் விபசாரம் விடுதி என்பது புலப்படும்.

  மேலே சொல்லப்பட்ட மாதிரியான கருத்துக்கள் கொண்ட உற்சவத்திற்குப் போகும் பெண்ணும், ஆணும் தங்களை அலங்கரித்துக் கொண்டு போவதும் ஒருவரை ஒருவர் நாடித் திரிவதும்,

  அன்னிய ஸ்திரீகள் சினேகமும் அன்னிய புருஷர்கள் சினேகமும் கொண்ட ஆண், பெண்கள் கோவில்களையும், உற்சவங்களையும் சங்கேத ஸ்தலங்களாக உபயோகித்துக் கொண்டு போவதும் யாவரும் அறியாமலிருக்க முடியாது.

  சிற்சில ஊர்களில் உற்சவக் காலங்களில் கோவில்களுக்கு வெளியில் உள்ள சுற்று விடுதிகளுக்கு விபசாரத்தின் பொருட்டு வாடகைகள் அதிகம் ஏற்படுத்துவதும் யாவரும் அறிந்ததே.

  (09.10.1927- குடி அரசு இதழில் தந்தை பெரியார் எழுதியது)

  ReplyDelete
 6. தினமும் குறைந்தது 6 மணி நேரமாவது தூங்குவது மன ஆரோக்கியத்துக்கு நல்லது.
  கொஞ்சம் மாற்றம் தெரியும் போதே மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்வது அவசியம் !
  இந்தப் பதிவு குறித்து எனக்கு தோன்றியவை இவை!

  ReplyDelete
 7. Follow kapilan comments

  ReplyDelete
 8. இந்த 100 ஆண்டுகளில் நான் படித்த படு மோசமான கட்டுரை
  இதுதான்... போலி முற்போக்கு உளறல்......உமக்கு எந்த தத்துவங்களைப் பற்றி
  ஒரு எளவும் தெரியாது என்று நீரே பகிரங்கமாக
  உம்மை அம்பலப் படுத்தியுள்ளீர்..உமது கட்டுரையைப் பார்த்தால்
  பெரியாரியத்தைப் பற்றியும்
  உமக்கு எதுவும் தெரியவில்லை.. உம்மை கடவுளோ
  பெரியாரோ தான் காக்க வேண்டும்.. முதலில் எல்லா
  வற்றைப் பற்றி ஆழ்ந்து படிக்கவும்.. பிறகு கட்டுரை
  கிட்டுரை வரையலாம்..
  /////இந்தியா ஒரு கிறித்துவ நாடாகவோ, பவுத்த நாடாகவோ, இஸ்லாமிய நாடாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். எனக்குக் கவலையில்லை.///
  அது சரி.. இதே வடிவத்தில ஒரு முசுலீம் நாட்டில் அல்லா
  பற்றி ஒரு கட்டுரை எழுதி வெளியிட முடியுமா என்று உமக்கு
  முற்போக்கு சொல்லிக் கொடுத்தவரிடம் கேட்டுத்
  தெரிந்து கொள்ளவும்...
  /////இந்து மதம் அறிவியலுக்கெதிரானது. மனித இனத்திற்கெதிரானது. உற்பத்திக்கெதிரானது.//
  நீரே அறிவியலுக்கு எதிரான சிந்தனையுடையவர்தான்.. பெரிய பரிதாபம் அது
  உமக்கே தெரியவில்லை...

  ReplyDelete
 9. உங்கள் வாதங்களுக்கு எதிர்வாதம் வைக்கும் யோக்கியதை இல்லாதவர்கள், உங்களைச் சாடுவதிலும் இழித்துரைப்பதிலுமே கருத்தாக இருக்கிறார்கள்.
  எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

  ReplyDelete
 10. பரமசிவம் சொல்வது சரி. If you cannot refute the message, shoot the messenger!

  ReplyDelete
 11. good posting that ever seen

  ReplyDelete