Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

ஆபரேஷன் இல்லாமல் சிறுநீரகக் கற்களை அகற்றும் முறை

1.ஆபரேஷன் இல்லாமல் நவீன இயந்திரத்தின் மூலம் சிறுநீரகக் கற்களை அகற்றும் முறை. டாக்டர்கள் தகவல்.


2. சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க.


3.மண‌ம் கமழு‌ம் ம‌ல்‌லி - மரு‌த்துவ ம‌ல்‌லி

மதுரை, நவ.21-

ஆபரேஷன் செய்யாமல் நவீன இயந்திரத்தின் மூலம் சிறுநீரகக் கற்களை அகற்ற முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

மதுரை விநாயகா லேசர் ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ராஜேந்திரன், சிறுநீரகத்துறை நிபுணர் டாக்டர் கோபாலன் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கற்கள் உருவாவது எப்படி?

ஒருவருக்கு சிறுநீரகத்தை ஒட்டிய இடுப்பு பகுதியில் தொடர்ந்து தாங்க முடியாத அளவு வலியிருந்தால் அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகி இருக்கலாம்.

இந்த கற்கள் மூலம் பொதுவாக ஆண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.

ஒருவரின் உடலில் அதிக அளவில் வியர்வை வெளியாகும் போது, சிறுநீரின் அளவு குறைந்து அடர்த்தியாகிறது. இதுவே நாளடைவில் கற்களாக மாறுகிறது.

மேலும் நீண்ட நேரம் சிறுநீரை அடக்குவதாலும், குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதாலும், சிறுநீர்ப் பாதையில் தொற்று போன்ற காரணத்தினாலும் சிறுநீரகக் கற்கள் உருவாக்கும்.

இந்த கல், 2 முதல் 3 சென்டி மீட்டர் அளவில் இருந்தால் அதனை மருந்து முலம் கரைத்து வெளியேற்றி விடலாம்.

அதற்கு மேல் இருந்தால் அதனை அறுவை சிகிச்சை முறையில் தான் வெளியேற்ற முடியும். ஆனால் இப்போது அதற்கு பதிலாக நவீன முறையில் ஆபரேஷன் செய்யாமல், எவ்வித வலியும் இல்லாமல் கற்களை வெளியேற்றுகிறோம்.

மெக்கானிக்கல் அலைகள்

இதற்காக சுமார் 30 லட்சம் மதிப்புள்ள நவீன கருவி வாங்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் துணை கொண்டு "லித்தோ டிரிப்ஸி" என்ற முறையில் நோயாளியின் வயிற்றுப்பகுதியில் தண்ணீர் நிரப்பிய பையால் அழுத்தப்படும். இதன் முலம் "மெக்கானிக்கல் அலைகள்" அனுப்பப்படுகின்றன. இந்த அலைகள் ஒரு நிமிடத்திற்கு 60 முறை உண்டாகும்.

ஒருவரின் உடலில் உள்ள கல்லின் அளவைப் பொறுத்து ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வீதம், 2 அல்லது 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் கற்களை கரைத்து விடலாம். உடலில் உள்ள கற்கள் நொறுங்குவது கம்ப்ïட்டர் திரையின் மூலம் கண்காணிக்கப்படும். நோயாளிகள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டியதில்லை. இதற்கு, குறைந்த கட்டணமாக ரூ.4ஆயிரத்து 500 வசூலிக்கப்படுகிறது.

தடுக்கும் வழிகள்

ஒருவருடைய உடலில் கால்சியம், ஆக்சிலேட் தாது உப்புகள் அதிகரிப்பதாலும், சிட்ரேட் போன்ற தாது உப்புகள் குறைவதாலும் சிறுநீரக கல் உருவாகிறது. இந்த கல் உள்ளவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் வலி, வாந்தி, சிறுநீர் வெளியேறும் போது எரிச்சல், அடிக்கடி ரத்தம் வடிதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.

இதனை தடுக்க அனைவரும் தினமும் அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். இந்த கற்களை கவனிக்காமல் விட்டால் சிறுநீரகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும்.

மேலும் ஒருவருக்கு ஒருமுறை கற்கள் உருவானால் 80 சதவீதம் மறுபடியும் அந்த கற்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. எனவே கற்கள் உருவாவதை தடுக்க டாக்டரின் ஆலோசனை பெற்று, ஸ்கேன் பரிசோதனை செய்து கொண்டு ஆரம்பத்திலேயே அதனை தடுக்கலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=608500&disdate=11/21/2010&advt
********************
2.சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க

சிறுநீரில் கற்களை உருவாக்கக்கூடிய கால்சியம், ஆக்ஸலேட், பாஸ்பேட், யூரி யா போன்ற உப்புகள் அதிக அளவு தேங்கிவிடும்போது அவை கற்களாக மாறி, சிறுநீரகத்தில் சேர்ந்து விடுகின்றன.

ஒரு சில நேரங்களில் சிறுநீடன் ரத்தம் கலந்து வருவதற்கு இந்த கற்களே காரணமாகும். நிறைய தண்ணீர் குடித்தாலே சிறுநீரக கல் சிறுநீருடன் சேர்ந்து வெளியேறி விடும். சில நேரங் களில் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற வேண்டியிருக்கும். அறுவை இல்லாத நவீன சிகிச்சையும் உண்டு.

சிறுநீர் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் அளவுக்கு அதிகமாகி விடும்போது வெளியேறத் தடை ஏற்படும். சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் இணைப்புக் குழாய்களில் அந்த உப்புகள் படிகம் போல் படிந்து, சிறுகச் சிறுக சேர்ந்து கல் போல மாறிவிடும்.

நெய், வெண்ணெய், தக்காளி, முள்ளங்கி, பசலைக்கீரை, பட்டாணி, முந்திரி போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், சிறுநீரகக் கற்கள் தோன்றலாம்.

ஆண்களுக்கு சிறுநீர்ப்பையில் இருக்கும் புராஸ்டேட் சுரப்பி வயதான காலத்தில் வீங்கி விடும். சிலருக்கு சிறுநீர் இணைப்புக்குழாய்களில் சுருக்கம் உண்டாகும். இதனால் சிறுநீர் வெளியேற முடியாமல், சிறுநீரகத்திலும், சிறுநீர் பையிலும் தேங்கி கற்கள் உண்டாகி விடும். சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றும் கற்கள் உண்டாக காரணமாகும்.

* வயிற்றுவலி, இடுப்புவலி, சிறுநீரில் ரத்தம் கலந்து போதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிலநேரங்களில் குளிர் காய்ச்சல் போன்றவை அறிகுறிகளாகும்.

* சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் பக்க முதுகில் விலா எலும்புகளுக்குக் கீழ், திடீரென கடுமையான வலி உண்டாகி முன்வயிற்றுக்குப் பரவும். சிறுநீர்ப்பை இணைப்புக் குழாய்களில் கல் இருந்தால் அடிவயிற்றில் வலி தோன்றி பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந் தால் தொப்புளுக்கு கீழே வலி தொடங்கி சிறுநீர்ப்புற நுனிவரை பரவும்.

சிறுநீர் கழிப்பதில் சிர மம், வலி, எரிச்சல், அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வும் இருக்கும். சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க சில ஆலோசனைகள்

ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் இளநீர், மோர் அதிகமாக குடிக்கலாம். தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது, உடற்பயிற்சி செய்யுங்கள். அதன் மூலம் ரத்தத்தில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளுக்கு சென்றடையும்.

பால், வெண்ணெய், பூண்டு, கருணைக்கிழங்கு, பசலைக் கீரை, முள்ளங்கி போன்றவற்றை சாப்பிடக் கூடாது.

உப்பைக் குறைத்தால் சிறுநீரகத்தில் கால்சி யத்தின் கடுமை குறையும்.

ஒரு நாளைக்கு 2 முதல் 3 கிராமிற்கு மேல் உப்பு சேர்க்கக்கூடாது. பதப்படுத் தப்பட்ட உணவு மற்றும் சிப்ஸ் வகைகளை குறைவாக சாப்பிட வேண்டும்.

மக்னீசியம் சத்துள்ள உணவு சாப்பிடுவது நல்லது. வைட்டமின் பி-6 சிறுநீரில் உள்ள கற்களைக் குறைக்க உதவும். * நார்ச்சத்து மிகுந்த உணவை அதிகம் சாப்பிட வேண்டும்.

* காபி, தேநீர் மற்றும் அய்ஸ்கிரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பிறப்புறுப்பில் வலி, கீழ்முதுகில் வலி, விதைகளில் வலி இருந்தால் உடனே தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
SOURCE:http://viduthalai.periyar.org.in/20101011/news21.html
++++++++++++++++
3.மண‌ம் கமழு‌ம் ம‌ல்‌லி - மரு‌த்துவ ம‌ல்‌லி.

மண‌ம் கமழு‌ம் ம‌ல்‌லி, மதுரை ம‌ல்‌லி எ‌ன்றெ‌ல்லா‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் மரு‌த்துவ ம‌ல்‌லியை‌ப் ப‌ற்‌றி உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரியுமா?

தலை‌‌யி‌ல் சூடுவத‌ற்கு‌ம், மாலை அல‌ங்கார‌ங்களு‌க்கு‌ம் பய‌ன்படு‌ம் ம‌ல்‌லிகை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ங்களை இ‌ப்போது பா‌ர்‌ப்போ‌ம்.

சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம்.

மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.

புழுக்களைத்தான் வெளியேற்றும் என்று நினைக்காதீர்கள், சிறுநீரகக் கற்களையே கரைய வைக்கும் குணம் இந்த மென்மையான மல்லிகைப் பூக்களுக்கு உண்டு. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?


மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும்.

பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு ‌நீ‌ங்கு‌ம்.

இவை அனைத்திற்கும் மேலாக, மணம் கமழும் மல்லிகையை ஒன்றிரண்டு தினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல்.

No comments:

Post a Comment